தூரிகை : சிவ பாலன்

சிவ பாலன்
சிவ பாலன்
Published on

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்திருக்கிறார், சிவ பாலன். கும்பகோணம் மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் இன்னொரு ஓவியக் கலைஞர்.

‘‘நான் தினமும் காலையில் எழுந்து அன்றாடம் பார்க்கும்  காட்சிகளை ஓவியங்களாகத் தீட்டிப்பார்க்கிறேன். இம்மண்ணின் மைந்தர்கள், விலங்குகள், யானைகள், மகளிர் ஆகியவையே என் படைப்புலகமாக அமைந்துள்ளன,'' என்கிற சிவபாலன் பெரும்பாலும் நீர்வண்ண ஓவியங்களை வரைகிறார். காட்சிகளை எளிமைப்படுத்தி எதார்த்தத்தை மீறியவையாக வரைவது இவர் பாணி. வண்ணங்களை எப்போதுமே கூடுதலாக உபயோகப் படுத்தி தன் உலகைப் படைக்கிறார். எதிரெதிர் அடர் வண்ணங்களால் ஆனது இவரது படைப்புலகம்.

‘‘கும்பகோண நிலப்பரப்பில் ஒவ்வொரு துண்டுகளாக இதுவரை வரைந்துகொண்டிருந்தேன். ஆனால் அது போதவில்லை. நிலத்துடன் காலத்தையும் காண்பிக்கும் அளவுக்கு இனி வரைய இருக்கிறேன்,'' என்கிற இவர் விரைவில் கும்பகோணம் குறித்த ஓவிய நூல் ஒன்றையும் வெளியிட இருக்கிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com