டாவின்ஸி பதில்கள்

எந்தக் கூட்டணி வெற்றி பெறும் ?
டாவின்ஸி பதில்கள்
Published on

எம். கணேசலிங்கம்
ஸ்லோ


ராஜபக்சே என்ன செய்ய வேண்டும் என்று நீர் எதிர்பார்க்கிறீர்?


இந்தியாவிடம் இருந்து ஒரு விஷயத்தில் அவர் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். பஞ்சாபில் தீவிரவாதம் இருந்தது. தனிநாடு கேட்டு அவர்களும் போராடினார்கள். இந்திய அரசு அந்தப் போராளிகளுடன் தான் சண்டை போட்டதே தவிர, பஞ்சாபில் குண்டு போட்டு அப்பாவி மக்களைக் கொல்லவில்லை. இந்திரா காந்தி கொலையின் போது ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கிய மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் அவர்கள் மறுபடி தீவிரவாதத்தைக் கையில் எடுக்கவில்லை. தேர்தல்களில் பதில் சொன்னார்கள். அதே சீக்கிய இனத்தைச் சேர்ந்த ஒருவர்தான் பின்னாளில் இந்தியாவின் பிரதமரும் ஆனார். இதெல்லாம் நடப்பதற்கு ஓரளவேனும் ஜனநாயகம் நடப்பில் இருப்பதுதான் காரணம். இதெல்லாம் உங்கள் நாட்டில் சாத்தியமா மிஸ்டர் ராஜபக்சே? மிஹ¥ம். இல்லவே இல்லை. ஏனென்றால் உண்மையில் நீங்கள் ஜனநாயகவாதியும் கிடையாது. நீங்கள் விரும்புவது அமைதியையும் இல்லை. நீங்கள் தமிழர்களைக் கொன்று பூண்டோடு அழிக்க விரும்புகிறீர்கள். அது நடக்கவும் போவதில்லை. உப்பு தின்றால் நீங்கள் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்.

கமலேஷ்குமார்
எஸ்.ர்.எம்.


கவிதை குண்டர் ஆல்பம் எப்படி?


குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும்.

ராம் கணேஷ்
டாலஸ்


புரட்சித் தலைவி திடீரென்று “ஈழத்தாய்” ஆகி விட்டாரே, அது எப்படி?


அப்படி அழைப்பவர்களை உண்மையான ஈழத்தாயான பூபதியம்மாளின் ஆன்மா மன்னிக்காது. தேர்தலுக்காக ஜெயலலிதா கையில் எடுத்திருக்கும் பொம்மை தான் ஈழம். காரியம் முடிந்ததும் அது குப்பைத் தொட்டியில் போய் விழும்.

முருகானந்தம்
பெர்லின்


நாடகக்கலை அழிந்து விட்டதா?


யார் சொன்னது? தினம் ஒரு நாடகம் நடத்தி அந்தக் கலை அழியாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் ஒருவர். இதில் ‘தமிழினத்தலைவர்’ என்று அவருக்கு அவரே சூட்டிக் கொண்ட பட்டப்பெயர் வேறு.

காமினி நடராஜ்
புதுடில்லி


ஐபிஎல் போட்டிகளில் உங்களைக் கவர்ந்த விஷயம்?


விளையாட்டுப் போட்டிகளில் சுவாரஸ்யமான விஷயமே நாம் ஒரு அணிக்கு ஆதரவாளராக இருந்து அது ஜெயிக்க வேண்டும் என்கிற படபடப்போடு பார்ப்பதுதான். ஐபிஎல்லில் எவன் ஜெயிக்கிறான், எவன் தோற்கிறான் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. சிக்ஸர்களுக்கு கை தட்டுவதுதான் ஒரே பொழுதுபோக்கு. ஐபிஎல்லில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம், அந்த cheer lealding பெண்கள்! என்ன உடல்! என்ன ஆட்டம்!

ஷாலினி விஸ்வநாத்
லண்டன்

எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்று நினைக்கிறீர்கள்?


மத்தியில் காங்கிரஸ். மாநிலத்தில் அ.தி.மு.க. so, wait for some fire works!


ஜி. சரவணன்
சென்னை


தமிழில் வித்தியாசமான, யதார்த்தப் படங்கள் நிறைய வர ஆரம்பிக்கிறதே?


‘நிறைய’ என்பதுதான் பயமுறுத்துகிறது. அதில் முக்கால்வாசி போலிகள். அவை எல்லாம் தோற்று ஒரு குப்பை மீண்டும் பிருமாண்டமாக ஜெயித்தால், எல்லா தயாரிப்பாளர்களும் குப்பையை நோக்கி ஓடுவார்கள்.

எம்_கல்யாண்குமார்
புதுடில்லி


உண்ணாவிரதம் என்பது என்ன?


அது ஒரு வலிமையான அறப்போராட்ட ஆயுதம். மகாத்மா காந்தியிலிருந்து திலீபன், பரமேஸ்வரன் வரை அதை ஒரு தவம் போல் செய்த தியாகிகள் பலர். மரணத்தைத் தொட்டும், அதன் விளிம்பு வரை சென்றும் உண்ணாவிரதம் மூலம் காரியத்தைச் சாதித்தவர்கள் அவர்கள். நான்கு ஏர் கூலர்களை சுற்றிலும் அமைத்து ஆறு மணி நேரம் சீன் போட்டு அதைக் காமெடி ஆக்குவது காலக் கொடுமை.

ஆர். கருணாமூர்த்தி
ஸ்லோ


தொலைக்காட்சியில் வரும் பாட்டு பாடும் நிகழ்ச்சிகளில் இளைய தலைமுறை பழைய பாடல்களையே அதிகம் பாடுவதைக் கவனித்தீரா?


புதிய பாடல்களை மேடையில் பாடுவது கடினம். ஒட்டி, வெட்டி, எ•பக்ட் கொடுத்து, பிரித்து மேயும் நவீன டிஜிட்டல் டெக்னாலஜி அது. சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் ‘எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே..” பாட்டை ஒரு ஜில்பா தலையன் பாடியதைக் கேட்டு காது எரிந்தது.

சண்முகராஜா
கோலாலம்பூர்


இந்திய அரசியல்வாதிகளின் சொத்துக் கணக்கு விவரம் எப்படி?


ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு கணக்கு.

ந.லோகநாதன்
ஏலகிரி மலை


இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பவை யாவை?


காங்கிரஸையும் திமுகவையும் பொறுத்த வரை, ஒன்றே ஒன்றுதான். விடுதலைப் புலிகளை ஆதரிப்பது.


***** ***** *****

'குமுதம்' பத்திரிகையில் பல வருடங்களாக 'அரசு பதில்கள்' எழுதி வந்த கிருஷ்ணா டாவின்ஸி உங்கள் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார். அரசியல், சினிமா, சமூகம், இலக்கியம், விஞ்ஞானம், கிரிக்கெட், டிவி என்று எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்விகளை அனுப்பலாம்..sky is the limit!


உங்கள் கேள்விகளை தமிழ் அல்லது தமிங்கிலத்தில் அல்லது ஆங்கிலத்தில் கீழேயுள்ள ஈமெயில் முகவரிக்கு அனுப்புங்கள்:

content@andhimazhai.com

andhimazhai@gmail.com

மே 14, 2009

logo
Andhimazhai
www.andhimazhai.com