பெண்ணியம்

சிற்றிதழ் அறிமுகம் -53
பெண்ணியம்
Published on

பெண்களுக்கானவையாக அழகுக்குறிப்புகளையும் , சமையல் குறிப்புகளையுமே பெரும் பத்திரிக்கைகள் வெளியிட்டு வருகின்றன .ஆண்களுக்கான போகப் பொருளாகவே பெண்களின் அழகியப் படங்களையும் அரைகுறை ஆடைப்படங்களையும் அவை வெளியிடுகின்றன. இத்தகைய வணிகச்சிந்தனையிலிருந்து மாறுபட்டு பெண்களின் பிரச்னைகள் குறித்தும் பெண்களின் விடுதலை குறித்தும் கொள்கை சார்ந்த அரசியல் இதழ்களும் இலக்கிய இதழ்களுமே முக்கியத்துவம் கொடுத்து பேசுகின்றன. அப்படியான ஒரு இதழாகவே வெளி வந்து கொண்டிருக்கிறது பெண்ணியம் மாத இதழ்

" வீட்டுக்கதவின்படியைதாண்டிவருவதே கேடு - என்ற விதி உடைத்துப் படைக்க வேணும் புதியோதோர் நாடு" என்பதை முழக்கமாகக் கொண்ட பெண்ணியம் இதழின் ஆசிரியர் , லலிதா ; பொறுப்பாசிரியர் இளையராஜா; இணை ஆசிரியர் நிர்மலா

"... ஒடுக்கப்பட்டோருக்கென்றே படைக்கப்பட்ட இவ்விருவகைக் கோட்பாட்டிலும் (மார்க்சிய, பெரியாரியக் கோட்பாடுகள்) உள்ள செழுமையான செயல்பாடுகளை முழுவதுமாக தன்வயப்படுத்தியும் தமிழ்ச் சமூகத்தில் அவ்வக்காலத்திலும் முன்னெழுத்து வரும் பெண்விடுதலை சிந்தனைகளை ஆய்ந்தறிந்து உள்வாங்கியும் பெண்ணியத்தை வளர்ப்பதன்றோ பெண்ணினத்தின் துரிதப்படுத்தும் எந்ற புரிதலையே பெண்ணியம் இதழ் தனது திசை வழியாகக் கொள்கிறது." என தனது ' திசையை'த் தெளிவுபடுத்துகிறது முதல் இதழ் ( ஆகஸ்டு 06) தலையங்கம்.

கவிதை , சிறுகதை , கட்டுரை , திறனாய்வு, நூல்- அகம் போன்ற பகுதிகள் இடம்பெற்றுள்ளன.ஓவியாவின் ' பெண்ணின் நிலை நேற்று இன்று நாளை ', ஏ.பி. வள்ளி நாயகத்தின் ' தோள்சீலைக்கலகம்', முழுமதியின் ' புதிய சிலை, புதிய கண்ணகி... புதுகோட்பாடு', புதிய மாதவியின் 'ஈழத்தின் கவிதை போராளிகள்', பொன் .குமாரின் ' நவீன இலக்கியத்தில் பெண்ணியம்' போன்ற முக்கியமான கட்டுரைகள் முதல் இதழில் வெளியாகியுள்ளன. எந்த நிறுவனங்களின் விளம்பரங்களும் இன்றி இதழ் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 29, 2006

பெண்ணியம்
சௌந்தரசுகன்
logo
Andhimazhai
www.andhimazhai.com