வல்லினம்

சிற்றிதழ் அறிமுகம் -41
வல்லினம்
Published on

" எனது மிக நெருங்கிய நண்பர் ரோலண்ட் பர்த், தன்னைக் குறித்து எப்பொழுதும், 'நானொரு கட்டுரையாளந்தான், நாவலாசிரியன் அல்லவே' என்று நொந்துகொண்டு மனச்சிதைவிற்குள்ளானதை நான் நினைத்துப் பார்க்கிறேன்.என்றாவது ஒரு நாள் படைப்பாக்க எழுத்துகளை எழுதுவதற்கு அவர் விரும்பினார்; ஆனால் அப்படியொரு எழுத்தை எழுதுவதற்கு முன்பே இறந்துவிட்டார்.அவர்போல அப்படியொரு மனச்சிதறலுக்கு நான் ஒரு போதும் உள்ளாவதில்லை. நான் நாவல் எழுதத் தொடங்கியது ஒரு விபத்து தான்; ஒரு நாள் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் இருந்தேன்.எனவே அன்று நாவல் எழுதத் தொடங்கினேன்"

- உம்பர்டோ ஈகோ.
(வல்லினம் இதழ் 13)

காத்திரமான கட்டுரைகள் , நேர்காணல்கள் ஊடாகத் தமிழ்ச் சூழலில் ஓர் அதிர்வை பரவச் செய்து வருகிறது 'வல்லினம்' காலாண்டிதழ்.எவ்வித கொள்கை முழக்கமுமின்றி ,தலையங்கம் கூட இல்லாமல் முதழ் இதழ் மே'02 ல் வெளிவந்தது.ஏப்ரல் '06 வரை 13 இதழ்கள் வெளிவந்துள்ளன.ஒவ்வொரு இதழும் காத்திரமான எழுத்துகளால் நிரப்பப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.இலக்கியம், சமூகம், அரசியல் ஆகியவை குறித்த ஆழ்ந்த விவாதங்களை முன்வைக்கும் கட்டுரைகள் வல்லினத்தின் சிறப்பாகும்.

இதன் ஆசிரியர் மற்றும் வெளீயீட்டாளர் ஜி.புனிதா.சிறப்பாசிரியர் மகரந்தன், பொறுப்பாசிரியர் மற்றும் ஆசிரியர் குழு தற்போது மாறியிருக்கிறது..பொறுப்பாசிரியர் மு. சுதர்சன், ஆசிரியர் குழு: கி.விஷ்Ïவர்தன், கே.பழனிவேலு, சுந்தரமுருகன் ஆகியோர்.

கவிதை, கட்டுரை, நேர்காணல். நூல் மதிப்புரை,சமூகப்பதிவுகள், போன்ற பகுதிகள் வெளியாகிவருகின்றன.தமிழின் முக்கிய படைப்பாளிகளும், அறிவாளர்களும் இவ்விதழில் பங்களிப்பு செய்து வருகின்றனர்.ஒரு சில இதழ்களுக்குப் பிறகு தலையங்கமும் இடம் பெற்று வருகிறது.

முதல் இதழில் பிரபஞ்சனின் ' தினமும் நடக்கும் தற்கொலைகள் சுயவிÍவரத்தினத்தின் ' கடந்த நூற்றாண்டில் ஈழத்தில் தமிழ் தேசிய இலக்கியம்' கபடங்கத்தின் 'நேற்றை வளைத்துப் பிடிக்கும் நிகழ்காலங்கள்' என்ற முக்கியமான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.சமகாலத்திய அரசியல் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகளும் இவ்விதழில் இடம் பெற்று வருகின்றன.

பிரபஞ்சன், பழமலய், இந்திரன், வீ.அரசு,க,பஞ்சாங்கம்,அ.மார்கஸ், ரவிக்குமார், இராசேந்திர சோழன், சிவகாமி, தொல்.திருமாவளவன், பெ.மணியரசன்,ஆ.சிவசுப்ரமணியன், நா.முத்துமோகன், என தமிழின் முக்கிய கலை ,இலக்கிய, அரசியல் ஆளுமைகளின் பங்களிப்பு இவ்விதழில் இடம்பெற்று வருகிறது.

அவ்வப்போது வல்லினம் சிறப்பிதழ்களாகவும் வெளிவருகிறது.

சிலமுக்கியமான புத்தகங்களையும் வல்லினம் வெளியிட்டு வருகிறது. பக்தவச்சல பாரதியின் 'தமிழகத்தில் நாடோடிகள்' மற்றும் 'மானுடவியல் கோட்பாடுகள்', பழ. நெடுமாறனின் , ' மனித குலமும் தமிழ் தேசியமும்' க.பஞ்சங்கத்தின் ' தலித்துகள் - பெண்கள் - தமிழர்கள்'ஆகியவை வல்லினத்தின் சில முக்கியமான வெளியீடுகளாகும்.

பொறுப்பாசிரியர் பற்றி...

பாண்டிச்சேரி மாநில அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறையில் பணியாற்றிவரும் பொறுப்பாசிரியர் மகரந்தனின் இயற்பெயர் கணபதி.அவரது துணைவியார் வல்லினத்தின் ஆசிரியராகவும், வெளியீட்டாளாராகவும் இருக்கிறார். தற்போது 39 வயதாகும் கணபத் கவிஞர், நாடக ஆசிரியர், சிறுகதையாசிரியர், இதளாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். மண் குதிரை எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.விரைவில் www.vallinam.com எனும் இணைய இதழை வலையேற்றும் பணியில் இருக்கிறார்.

புதியவர்களுக்காகத் தொடங்கப்பட்ட வல்லினம் கருத்தியல் படி இதழாக மாறிவிட்டதால் புதியவர்களுக்கான தளமாக இணைய இதழைத் தொடங்குகிறார்.

ஜீன் 30, 2006

வல்லினம்
நறுமுகை
logo
Andhimazhai
www.andhimazhai.com