' விதிக்கப்பட்ட ஒழுங்கை எதிர்த்து கலகம் செய்.உள் அக ஒழுங்கு எங்கே போயிற்று?' என்றபடி, புத்தக அடுக்கில் காலம் காலமாக மண்டிக் கிடக்கும் அழுக்கு , ஒட்டடைகள், தெருப் புழுதியை சுத்தம் செய்தாள், என்னையும் சேர்த்து.
வானத்துக்கு கீழே - பிரபஞ்சன்
தீராநதி, ஜனவரி' 06.
"இலக்கிய உலகில் யாருடைய வெளியையும் அபகரிக்கும் நோக்கமெல்லாம் எங்களுக்கில்லை.சிறு சிறு குழு வாதங்களுக்கு அப்பால் நம் குரலை கொண்டு போக வேண்டிய அவசியமிருக்கிறது". என்கிறது தீராநதி முதல் இதழ் தலையங்கம்.
ஜூன் '02 ல் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் ஆசிரியர் ராவ், பொறுப்பாசிரியர்கள் மணா, இரா. மணிகண்டன். செப்டம்பர் '03 இதழிலிருந்து இரா.மணிகண்டன் மட்டும் பொறுப்பாசிரியராக இருந்தார்.இப்போது அவரே ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.மணாவும், இரா. மணிகண்டனும் பொறுப்பாசிரியராக இருந்த போது கலை இலக்கியத்துடன் அரசியல் விவாதங்களும் தீராநதியில் இடம் பெற்று வந்தன.மணாவின் விலகலுக்குப் பிறகு தீராநதி மாத இதழில் அரசியல் சார்ந்த விவாதங்கள் தவிர்க்கப்பட்டு முற்றிலும் இலக்கியத்திற்கான இதழாக வந்து கொண்டிருக்கிறது.நேர்காணல், தொடர்கள், சிறுகதைகள், நூல்விமர்சனங்கள், கலை, அரசியல், சென்ற தலை முறை அறிஞர்கள் பற்றிய தகவல்கள், மொழிபெயர்ப்புகள் ஆகியன வெளியாகி
வருகின்றன.
தீராநதியில் கவனிக்கப்பட்டுவரும் முக்கியமான பகுதி நேர்காணல் ஆகும். பேரா. தொ. பரமசிவன், ஆண்டன் பாலசிங்கம், கே. ஏ. குண§ºகரன், சேரன், கீ. வீரமணி, கமல், பாரதிராஜா, கலைஞர். மு. கருணாநிதி, பா. செயப்பிரகாசம், ஜெயகாந்தன், ஐராவதம் மகா தேவன், மாலதி மைத்ரி, ஆர். பி. பாஸ்கரன், சிவகாமி, வைரமுத்து, மணவை முஸ்தாபா, சுஜாதா, விக்ரமாதித்யன், சந்ரு, எஸ். ராமகிருஷ்ணன்,சி.புஷ்பராஜா, ரமேஷ்- பிரேம், கனிமொழி, ஜெயமோகன், என தமிழின் முக்கிய ஆளுமைகளின் நேர்காணல்கள் இவ்விதழில் வெளியாகி வருகின்றன.
இவ்விதழில் பல தொடர்கள் இடம் பெற்று வருகின்றன. வாழ்விலே ஒருமுறை - ஜெயமோகன், காலம், கலை, கலைஞன் - சி. மோகன், கனவின் பாதை - பல்வேறு ஆளுமைகள் பற்றிய தொடர்., புலம்பல் பக்கம் - பாமரன், கதை சொல்லிகளின் கதை - இரா. மணிகண்டன், எதிர் வீடு - சிவ சங்கரி, பெண்பால் அகதிகள் - மாலதி மைத்ரி, நினைÅ¢ல் பதிந்த சுவடுகள் - வாஸந்தி,வானத்தின் கீழே - பிரபஞ்சன், பெரு வெள்ளச் சிறு துளிகள் - லதா ராமகிருஷ்ணன், ஆகிய தொடர்கள் முக்கியமானவையாகும். அக்டோபர்'03 இதழில் வெளியான ' தமிழில் பின்நவீனத்துவ நாவல்கள்' , குறித்த சர்ச்சை பல மாதங்கள் நடைபெற்றன.இவ்விவாதத்தில் பின் நவீனத்துவ எழுத்தாளர்கள் பலர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
" ஒரு கவிதையின் மவுனத்தின் ஆழத்தில்தான் வாசக¨Éக் கட்டிப் போட முடியும். அகராதி தரும் அர்த்தத்தை தொலைத்து விட்டுப் பிறிதொரு அர்த்தத்தை வார்த்தைகள் தரும் இடம் அது தான்". என்று கவிதை குறித்து சொல்கிறது செப்' 03 இதழின் தலையங்கம்.
தீராநதி மாத இதழ் , இலக்கியப் பிரியர்கள், படைப்பாளிகள், வாசகர்களின் இலக்கியத்தாகத்தை தீர்க்கும் நோக்கத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது.
ஆசிரியர்.டாக்டர். இரா.மணிகண்டன் பற்றி..
தமிழில் முனைவர் பட்டம் பெற்ற இவர் பல ஆண்டுகளாக குமுதத்தில் பணியாற்றி வருகிறார். 'வெட்டி வேரு வாசம்' , 'கூளப்ப நாயக்கன் காதல் கதை', இலக்கியப் பிரும்மாக்கள்', ஆகிய நூல்களை எழிதியிருக்கிறார். நாட்டுப்புறவியலிலும், மருத்துவத் துறையிலும் அதிக ஈடுபாடு உடையவர்.
பிப்ரவரி 10,2006