நவீன இலக்கியச் சூழலில் நாட்டுப்புற இலக்கியத்திற்கென்று வெளிவந்Ð கொண்டிருக்கும் இதழ் 'கதை சொல்லி'.பெயருக்கேற்ப நாட்டுப்புற வாழ்வியலை மையப்படுத்தி படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.ஆசிரியர். கி. ராஜநாராயணன். கி.வின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று முதல் இதழ் வெளிவந்தது.
இதுவரை 17 இதழ்கள் வெளிவந்துள்ளன. 17 வது இதழிலிருந்து கழனியூரனை பொறுப்பாசிரியராகக் கொண்டு வரத்தொடங்கியிருக்கிறது கதை சொல்லி. நாட்டுப்புற பாடல்கள், நாட்டுப்புற கதைகள்,மொழிபெயர்ப்பு நாட்டுப்புற கதைகள், மூத்த இலக்கியவாதிகளுடன் பழகியவர்களின் வாழ்வியல் அனுபவங்கள் ஆகியவை இவ்விதழில் இடம் பெற்று வருகின்றன.வல்லிக்கண்ணன், தி.க.சி, தே.லூர்து போன்ற மூத்த எழுத்தாளர்களும் இவ்விதழில் எØதி வருகின்றனர்.
'கதை சொல்லியை முழுக்க முழுக்க கிராமிய இதழாகக் கொண்டு வருவோம், கிராமியப் படைப்புகள் கிடைக்காத பட்சத்தில் பொதுவான படைப்புகளைக் கொண்டு சாதரண சிற்றிதழாகக் கொண்டு வருவோம், என்கிறார் பொறுப்பாசிரியர் கழனியூரன்.எண்வழி இதழாக வெளிவந்து கொண்டிருந்த கதை சொல்லி இனி காந்தாய இதழாக வெளிவரும். காந்தாய என்றால் பருவம், போகம் என்று அர்த்தம்.வட்டார வழக்கச் சொல்லை மீட்டெடுத்து மறுபதிவு செய்திருக்கிறார்கள்.நாலு மாதத்திக்கு ஒருமுறை இனி 'கதை சொல்லி' வரவிருக்கிÈது.கதை சொல்லி இதழ்கத் தொகுத்து தொகுதி - 1 வெளியாகியிருக்கிÈது.
கதை சொல்லியின் சர்பில் கரிசல் அறக்கட்டளையை நிறுவி ஒரு சிறந்த சிற்றிதழுக்கு 5000 ரூபாய் பரிசளித்து சிறப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.கி.ரா. வின் பிறந்த நாளான செப். 15ல் இவ்விருதுவழங்கப்படுகிறது. 2005க்கான சிற்றிதழ் விருது 'திசை எட்டும்' மொழிபெயர்ப்பு காலாண்டிதழுக்கு வழங்கப்பட்டது.
பொறுப்பாசிரியர் கழனியூரன் ஒரு தொடக்கப் பள்ளியிள் தலைமை ஆசிரியராக உள்ளார். நாட்டுப்புறவியலில் முனைவர் பட்ட ஆய்வு செய்து வருகிறார்.20 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
ஆசிரியர் பற்றி:
89 வயதாகும் கி.ரா. முழு நேர எழுத்தாளர்.இதுவரை 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், அந்தமான் நாயக்கர் ஆகிய மூன்று நாவல்கள் குறிப்பிடத்தக்கது. கோபல்லபுரத்து மக்கள் நாவலுக்காக இவருக்கு சாகித்ய அகடமி விருது அளித்து கௌரவிக்கப்பட்டது.
பிப்ரவரி 03, 2006