புதுகைத்தென்றல்

சிற்றிதழ் அறிமுகம் 17
புதுகைத்தென்றல்
Published on

" எங்கிருந்தோ ஒரு சூரியகாந்தி விதையை
அவன் கொண்டு வந்தான்
உங்களிடம் உள்ளங்கை அளவு
நிலமில்லை அதை ஊன்றுவதற்கு.
- கல்யாணம்
( புதுகைத் தென்றல்'05)

' புதுகைத் தென்றல் எனும் தமிழ் மாத இதழ் சமூக, இலக்கிய, பண்பாட்டுத் திங்கள் இதழாக மலர்கிறது.

இது வேறு எந்த இதழுக்கும் போட்டியானது அல்ல.அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்ற ஆராவார ஆர்பரிப்பு எதுவுமின்றி வெளியிடப்படும் இவ்விதழ் தரமான இதழ் ஒன்றை வெளியிடவேண்டும் என்ற தணியாத வேட்கையின் வெளிப்பாடாகும்.ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் கூச்சமின்றி படிக்கவும், சமூகத்தில் உள்ள பல்துறையினருக்கும் பயனுள்ள வகையில் இதழைக் கோண்டுவருவதே எங்கள் நோக்கம் என்கிறார் ஆசிரியர் தருமராசன்.

இதுவரை 27 இதழ்கள் வெளிவந்துள்ளன. கவிதை, சிறுகதை, தொடர்கதை, கட்டுரை, புத்தக மதிப்புரை என வெளிவந்து கொண்டிருக்கிறது.

சிட்டி, வல்லிக்கண்ணன், க. வேழவேந்தன், ஏர்வாடி .எஸ். ராதாகிருஷ்ணன், த.ராமலிங்கம், கே.ஜி. ராஜேந்திரபாப், க.த. திருநாவுக்கரசு, விஜயகிருஷ்ணன் போன்றோரின் படைப்புகள் இவ்விதழில் வெளியாகிவருகின்றன. வரலாற்று ஆவணங்கள் தொடர்பான கட்டுரைகள் இவ்விதழின் சிவப்பு எனலாம். 15 ஆம் நூற்றாண்டிலேயே மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தும் புதுக்கோட்டை கல்வெட்டு, 2300 ஆñடுகளுக்கு முற்பட்ட தமிழ் கல்வெட்டு, கடற்கோளும் மாமல்லபுரமும் போன்ற பலமுக்கியமான கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

"விழிப்புணர்வில் சற்று சுணக்கம் ஏற்படும் போது சீடனை அடிக்க குருவுக்Ì எவ்வளவு உரிமை உண்டோ அதே உரிமை சீடனுக்கும் உண்டு என்பது ஜென்னின் சிறப்புகளில் ஒன்று. எதையும் கற்றுத்தராத குருவுக்கு ஒரு ஜென் மாணவனால் தான் நன்றி கூறமுடியும் ஏனென்றால் சுயமான வளர்ச்சிக்கு அவர் வழிகாட்டினார்" என ஜென் பௌத்தத்தை விளக்கும் ஜென் பௌத்தம் ஓர் அறிமுகம் என்ற தொடரை ஞானாலயா .கிருஷ்ணமூர்த்தி எழுதி வருகிறார்.

"முதலில் மேல்மாவை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மைதாவில் சிறிது உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி..." என சிற்றிதழ்களுக்கு சற்றும் பொருந்தாத ' படிக்க, சமைக்க, சுவைக்க' என்ற சமையல் தொடரையும், 'வளம் தரும் வாஸ்து' அழகுக் குறிப்புகள் போன்ற தொடர்களையும் வெளியிட்டு சிற்றிதழ்களில் ஒரு வெகுசன இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது 'புதுகைத் தென்றல்'.

ஆசிரியரைப் பற்றி:

அறுபது வயதைத் தாண்டிவிட்ட புதுகைத் தருமராசன் பாரத ஸ்டேட் வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.படைப்புடனும், இதழுடனும் தொடர்புடைய இவர், மக்கள் தொடர்பு அதிகாரியாகவும், தொடற்சங்க வாதியாகவும் பணிபுரிந்தவர்., 'சிந்தனைக்Ì சில கட்டுரைகள்', 'முயற்சிகளே முன்னேற்றம்'
என்ற நூல்கள் உட்பட பலநூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்..

பிப்ரவரி 03, 2006

புதுகைத்தென்றல்
சமரசம்
logo
Andhimazhai
www.andhimazhai.com