அடுத்த குறள்

சா.கந்தசாமியின் எழுத்தோவியம்-28
அடுத்த குறள்
Published on

தமிழ்மொழி இந்திய மொழிகளில் ஒன்று. அது தமிழ்நாட்டில் பேசப்படுகிறது. தமிழ் நாட்டின் ஆட்சி மொழி. மேலும் தமிழ் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தேசிய மொழி. சிங்கப்பூரில் அது அரசாங்க மொழி. இராண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எழுதப்பட்ட இலக்கியங்கள் கொண்ட மொழி. தமிழ் இலக்கியமென்று கிடைக்கும் சங்கக் கவிதைகள் திட்டமாக கி.மு. இரண்டாம் நூற்றாñடில் தொடங்கி கி.பி. இரண்டாம் நூற்றாண்டு காலத்தில் எழுதப் பட்டவை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவாகும்.

சங்க இலக்கியம், முழுமையான, தீர்மானமான முறையில் உள்ளது. அதாவது என்ன சொல்லவேண்டும் என்பதையும் - எப்படி சொல்ல வேண்டும் என்பதையும் தீர்ìகமாக முடிவு எழுதப்பட்டு இருப்பது தெரிகிறது. மனிதர்கள் பெயர்களை ஒதுக்கிவிட வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்டு எழுதப்பட்ட சங்க இலக்கியத்தில் மூங்கில் கொன்றை,
யானை, முயல் எல்லாம் வருகிறது. அவை ஒதுக்கப்பட்ட பெயர்கள் இல்லை.

அதன் தொடர்ச்சிதான் திருக்குறள். ஆது தொகுப்பு நூல் அல்ல. அதாவது சங்கப் புலவர்கள் பலர் இயற்றிய கவிதைகளில் இருந்து புறநானூறு, கலித்தொகை போன்று தொகுப்பு நூல் இல்லை. திருவள்ளுவர் என்ற தனி மனிதர் இயற்றியது தான்.

திருவள்ளுவர் சங்க மரபில் இருந்து பெயர் சொல்வதை மனிதர்கள் - கடவுள்கள் பெயர்கள் சொல்வதை ஒழித்துவிட்டார். ஆனால் விலங்குகள் பெயர் தவிர்க்க கூடியதாக அவர்க்கு இல்லை.

எது சிறப்பானதோ - எது முழமை பெற்று இருக்கிறதோ அதற்கு இன் மூலமாக இருக்கிறது என்று சொல்வது ஒரு வழக்கம். அதில் இருந்து இலக்கியம் தப்புவது இல்லை. எழுதப்பட்டு இருப்பதை - எழுதி இன்னும் அழுத்தி சொல்ல ஒவ்வொரு தலை முறையிலும் ஆள்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அதில் தங்களின் அறிவு, மேதமை - என்பதை ஸ்தாபிப்பதில் உள்ள ஆர்வமும் அடங்கும்.

திருக்குறள், கெலிடில்யரின் அர்த்த சாஸ்த்திரத்தையும், வாஸ்தானியரின்
காமசூத்திரத்தையும் மூலமாகக் கொண்டிருக்கிறது என்ற கூற்று உண்டு.

அர்த்தசாஸ்திரம் சூழ்ச்சி, அதிகாரத்தை கைப்பற்ற என்னெýன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வது. அதற்கு அறம், ஒழுக்கம், நீதி என்பது பற்றி அக்கறையே கிடையாது, இன்னும் சொல்லப் போனால் அதிகாரம் என்பதை அடைய வழிசொல்வது. அதில் தர்மம் - அதர்மம் என்ற பேதம் எல்லாம் கிடையாது. அதில் அர்த்தசாஸ்த்திரம்,திருக்குறளில் இருந்து முற்றாக வேறு பட்டது.

இரண்டாவது, காமசூத்திரம், வாஸ்தானியரின் கொள்கை சந்தோ„மாக இருக்க உடம்பை எவ்வாறு பயன்படுத்த வேண்டும். அதில் ஆண் - பெண் பங்களிப்பு என்ன என்று சொல்வது.அதில் காதல் கிடையாது. காமமும் காம தவிர்ப்புந்தான் காமசூத்திரத்தின் அடிப்படை.

திருவள்ளுவரின் இன்பம், காமத்துப்பால் என்பதெல்லாம் வேறு. அது சொல்லப்படுவதில் இருந்து சொல்லாமல் விட்டதைச் சார்ந்து இருப்பது. முழுக்க முழுக்க உளவியல் சார்ந்தது. அறிந்ததும் - அறியக் கூடியÐமான இன்பநுகர்வை சொல்வது. திருவள்ளுவர் ஒரு குறளில் தனி மேதமையை நிலை நாட்டுவது போலவே, பத்துக் குறள் கொண்ட அதிகாரத்தில், தன்னை நிலை நாட்டிக் கொள்கிறார். அவரின் ஒவ்வொரு குறளும் நிகழ்
காலத்தோடு அதன் சமூக, சரித்திர அமைப்போடு இணைத்து போகவேண்டும் என்பது அவசியம் இல்லை. எதிர்பார்ப்பது பேதமை.

திருக்குறள் இயற்றப்பட்ட நூல். அதன் பலம் என்பது பெறுகிறவர்கள் பலத்தைப் பொÚத்து அமைகிறது. ஆனாலும் திருக்குறள் தமிழ்ச் சமூகத்தில் தொடர்ந்து படிக்கப்பட்டு வருகிறது. அதில் இருந்து சமூகம் தன்வினைப் பலவற்றை பெற்று பயனடைகிறது.அதுபடிப்பின் வழியாக வருகிறது என்பது மட்டுமல்ல, நடைமுறை வாழ்க்கையில் இருக்க வருகிறது.

கற்றிலன் ஆயினும் கேட்க - என்று திருக்குறள் சொல்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழக மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ளும் விதமாக உ.வே.சாமித்தையர் பல கட்டுரைகள் எழுதி உள்ளார். அதில் ஒன்று அடுத்தகுறள்.தமிழ்மக்கள் காலம் காலமாகத் திருக்குறளைப் படிக்க வந்தது பற்றி சொல்கிறது.

1880 ஆம் ஆண்டில் நடந்தது, நடந்ததை நடந்தவாறு சொல்வதில் தேர்ந்த சாமிநாதையர் அடுத்த குறளையும் அவ்வாறே சொல்லி உள்ளார். அதில் அவரும் இருந்தார் என்பது சிறப்பு. ஒரு பிரமுகர் வீட்டில் கல்யாணம் வெகுசிறப்பாக நடைபெற்றது. கல்யாணம் விசாரிக்க சென்னையில் நீதிபதியாக இருந்த சா.தி.முத்துசாமி ஐயர் வந்தார். அவர் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து தன் அறிவால் மேலே வந்தவர் என்பதை ஊர்மக்கள்
அறிந்திருந்தார்கள். எனவே அவரைக் காணவும் - கல்யாண விருந்து சாப்பிடவும் பலர் வந்தனர்.

நீதிபதி. முத்துசாமி ஐயர் திண்னையில் உட்கார்ந்து பேசிக் கொண்டு
இருக்கிறார். உள்ளுர் ஆசாமி - கொஞ்சம் படித்தவர் ரொம்ப தைரியமாக பிரமுகர்கள் பக்கமாகப் போகிறார். சும்மா போகவில்லை. திருவள்ளுவர் சொல்லி வைத்திருக்கும் 1330 குறள்களில் தன்வதாக ஒன்றை தேர்ந்தெடுத்து,

தம்மில் மக்கள அறிவுடமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது .சொன்னார்.
நீதிபதி முத்துசாமி ஐயர், திருக்குறள் சொன்ன எழுபது வயதான ஆசாமியை விடுவதாக இல்லை. அடுத்தக்குறளையும் சொல்லி அதனுடைய அர்த்தத்தையும் சொல்லுங்கள் என்கிறார்.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குõ தன்மகனைச்
சான்றோரெனக்கேட்ட தாய்
உள்ளுர் பிரமுகர் அடுத்த குறளை சொல்லி முடித்தார்.

திருக்குறள் அதன் சக்தியால் தன்னை நிலை நிறுத்தி கொண்டு இருக்கிறது. அதுதான் அதன் பெருமை. அது என் தாய்மொழியில் உள்ளது எனக்குப் பெருமை . படிக்கவும் - எடுத்து சொல்லவும் கிடைத்து இருப்பது பாக்கியம்.

(சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.)

மார்ச் 08, 2006

அடுத்த பகுதி>>>

logo
Andhimazhai
www.andhimazhai.com