ஒரு குளோசப்-5

வேடந்தாங்கல் - வணக்கம் தமிழகம்
ஒரு குளோசப்-5
Published on

வேடந்தாங்கல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் படாலம் அருகே இருக்கிறது வேடந்தாங்கல்.பறவைகளின் சொர்க்கபுரி.இதுதான் இந்தியாவின் மிகப்பழமையான பறவைகள் சரணாலயம்.சென்னையின் அலுப்பூட்டும் வாழ்க்கையில் இருந்து மாறுபட்டு ஒரு இதமான,உற்சாகமான அனுபவத்தை தருகிற இடம்.

இங்கு 73 ஏக்கர் பரப்பில் வாரிக் கிடக்கிறது ஏரி,இதன் நடுவே குட்டி குட்டியாய் மாங்குரோவ் தீவுகள். நீர்பறவைகள்,அயல் நாட்டில் இருந்து இடம் பெயர்ந்து வரும் பறவைகள் இரண்டுக்கும் வேடந்தாங்கல் தான் இளைப்பாறும் இடம்.சீசனின் போது இங்கு 10000 - 20000 பறவைகள் வருமாம். இங்கேயே சில பறவைகள் கூடு கட்டி குடும்பம் நடத்திவிட்டும் போகும். பறவைகளை பார்க்க 'வாட்ச் டவர்கள்' உள்ளன.
ஏறிப்பார்த்தால் வெண்ணிற சிறகுகள் கொண்ட பறவைகளால் அடிவானம் நிறைவதை பார்க்கலாம்.அங்கு இருக்கும் தண்ணீரில் பாதி முழ்கிய மரங்களில் பறவைகள் தான் இலைகளாகத் தென்படும். .பறவைகளை பார்ப்பதென்றால் அதிகாலையில் செல்ல வேண்டும்.அவற்றை கலைக்காமல் இருக்க புதர் மறைவில் அமைதியாக நடக்க வேண்டும்,ஆகிய நடைமுறைகள் உண்டு.ஆனாலும் பரவாயில்லை இந்த நீர்ப்பரபில் மெதுவாக நடை மேற்கொள்வதே இனிய அனுபவம் தான்.

பறவைகளை பார்க்க கைடுகளையும் அழைத்துகொண்டு செல்லலாம்,வாசலில் அந்த வசதியும் உண்டு.உள்ளே அமர்ந்து ஓய்வெடுக்க கல் பெஞ்சுகள், நடக்க பாதைகள் உள்ளன,சுற்றுலாபயணிகளை மனதில் கொண்டு இந்த ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள்.

செங்கால் நாரை,பூ நாரை,கரண்டி அலசி,எண்ணற்ற வாத்துகள்,
பெலிக்கன்கள்,போன்றவற்றை இங்கு காணலாம்.பறவைகள் பற்றி படம் நிறைந்த புத்தகம் இருந்தால் என்ன பறவை என்று பெயர் தெரிந்து கொள்ளலாம்.அதே சமயம் கைடுகள் கூட வந்தால் அவர் பறவைகளின் பெயர்களை சொல்வார்,பல பெயர்களை நீங்கள் இங்குதான் முதன் முதலில் கேட்பீர்.

இங்கிருந்து ஒன்பது கிலோ மீட்டர் தூரத்தில் கரிக்கிலி பறவைகள் சரணாலயம் உள்ளது,இங்கும் பறவைகளை கண்டு மகிழலாம்.

Vedanthangal Travel Guide

Climate:
Languages spoken Tamil, and English
Season: The best season to visit is from November to January.
Nearest Airport: Chennai
Nearest railway station: chengelpet(26 km).


Road Connection: From Chennai by road a distance of a hundred kilometers, most of it on the well-maintained National Highway 45.

STD Code :

Stay

Accommodation is available at the Forest Department Rest House or Hotel Tamil Nadu of the Tamil Nadu Tourism Development Corporation.

Wildlife Warden,
259 Anna Salai, DMS compound,
Teynampet. Chennai 600 006
Ph. 044-24321471

- அஜிதன்

வெள்ளிதோறும் இரவு அஜிதனின்'வணக்கம் தமிழகம்' அந்திமழையில் வெளிவரும்....

அஜிதனின்'வணக்கம் தமிழகம்' பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

 டிசம்பர் 18, 2009

<<<முந்தைய பகுதி

logo
Andhimazhai
www.andhimazhai.com