மாமல்லபுரம்
சென்னையில் இருந்து மாமல்லபுரத்திற்கு செல்லும் பாதையே மிக இனிமையான காட்சி அனுபவங்களை தரக் கூடியது.இடது புறம் நீண்டு கிடக்கும் கடற்கரை. அவ்வப்போது தோன்றும் சவுக்கமர தோப்புகள்.உண்வு விடுதிகள்.ஓவிய கிராமங்கள்.,சிற்ப காட்சிகள். அனைத்தும் ளும் மகிழ்ச்சியடைய வைப்ப்வை. சென்னையில் இருந்து 58 கி.மீ தூரத்தில் 1 1/2 மணி நேரம் கிழக்கு கடற்கரை சாலையில் பயணம் மேற்கொண்டால் மாமல்லபுரத்தை அடையலாம்.
பல்லவ மன்னன் நரசிம்மவர்மனின் இன்னொரு பெயரான மாமல்லன் பெயரில் இது அழைக்கப்படுகிறது.பல்லவ நாட்டின் தலைநகரத்தை அவன் இங்குதான் அமைத்து இருந்தான்.அது மட்டுமல்லாமல் ஏராளமான சிற்பங்களையும்,கலைப்படைப்புகளையும் இங்கு நிர்மாணித்தான்.வரலாற்று ரீதியாக பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பாக அமைக்கபட்டவை இவை. பழங்கால தமிழர் கட்டடகலையின் சிறப்பை விளக்குபவை.இங்குள்ள சிற்பங்களின் தனி சிறப்பு அவை அனைத்தும் ஒரே கல்லில் செதுக்கபட்டவை என்பதுதான்.இந்த சிற்பங்கள் யுனஸ்கோ உலக பாரம்பரிய
சிற்பங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
மாமல்லபுரத்தில் :
கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து விலகிசெல்லும் கிழக்கு இராஜவீதியில் சென்றால் பேருந்து நிலையம் வருகிறது,அதை தாண்டி செல்லும் கடற்கரை கோவில் சாலை நேராக மாமல்லபுரத்தின் முக்கிய கடற்கரைக்கு நம்மை இட்டு செல்கிறது.அங்கு தான் புகழ் பெற்ற கடற்கரை கோவில் உள்ளது.பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கு புறமாக சிறிது தூரம் நடந்து சென்றால் கிருஷ்ணரின் வெண்ணைக்கல், பெருமாள் கோவில் மற்றும் அர்சுனனின் தவம் உள்ளிட்ட பல முக்கிய இடங்கள் இருக்கின்றன.பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் இன்னொறு சாலையான மேற்கு ராஜவீதி
தொல் பொருட்துறை அருங்காட்சியகம்,மகிஷாசுரமர்த்தினி குகை,சிவன் மற்றும் ஆதிவராக கோவில்,ஆகியவற்றுக்கு இட்டு செல்கிறது.இன்னும் சற்று தள்ளி தெற்கே சென்றால் சிற்ப கிராமங்களும் பஞ்சரதங்கள் இருக்கும் இடங்கள் உள்ளன.
என்ன பார்க்கலாம் :
கொஞ்ச நஞ்சம் இல்லை,சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட சிற்ப கலை வடிவங்கள் இங்கு எங்கு பார்த்தாலும் இருக்கிறது.மாலைக்கு பிறகு மின்னொளியில் இவை மனதை மயக்கும் விதத்தில் காட்சி தருகின்றன.
கடற்கரை கோவில் :
மாமல்லபுரம் என்றாலே கடற்கரை கோவிலைத்தான் அடையாளபடுத்துவார்கள்.இந்த கோவிலின் பல பகுதிகளை கடல் ஏற்கனவே தின்று விட்டது.15 நூற்றாண்டுகளை தாண்டி இந்த கோவில் இன்னும் மிச்சம் இருப்பது அதிசயம்.தற்போது மேலும் பாதிக்கபடாமல் இருக்க இக்கோவிலை சுற்றி சுவர் எழுப்பபட்டுள்ளது.இக்கோவில் சிவன் பார்வதி,விநாயகர்,முருகன்,ஆகியோர் வீற்றிருக்கின்றனர். தரையில் படுத்து இருக்கும் ஸ்தலசயன பெருமாளும் இருக்கிறார்.இக்கோவிலின் சுவர்களில் பல்லவர்களின் சின்னமான சிங்கம் காட்சியளிக்கிறது.இங்கு மொத்தம் ஏழு கோவில்கள் இருந்ததாக நம்பபடுகிறது.
அவற்றில் 6 கடல் கொள்ளபட்டுவிட்டது.சமீபத்தில் சுனாமி வந்தபோது கடல் கொள்ளப்பட்ட ஒரு கோவில் வெளிபட்டதாக தொல்பொருள்துறையினர் தெரிவிக்கின்றனர்.தமிழகத்தை இதுவரை ஏற்கனவே மூன்று முறை ஆழிப் பேரலை தாக்கியிருப்பதற்கான அடையாளங்கள் இங்கு கிடைப்பதாக தொல்பொருள் துறையினர்கள் தெரிவிக்கின்றனர்.
அர்ச்சுனன் மற்றும் பாண்டவர்கள் :
இந் நகரத்தின் நடுவில் அமைந்து இருக்கிறது அர்ச்சுனனின் தவம் என்ற சிற்பம்.சிற்பம் என்பதை விட சிற்பத் தொகுதி என்பதுதான் சரி. மிகப்
பெரிய பாறையில் நூற்றுக்கணக்கான சிற்பங்கள் செதுக்கபட்டுள்ளன.சிவனை நினைத்து இங்கு அர்ச்சுனன் தவம் செய்ததாக சொல்லபடுகிறது.இதற்கு வலதுபுறமாக ஒரே கல்லில் வடிக்கபட்ட குரங்கு குடும்பம் ஒன்று உள்ளது.இன்னும் சற்று தூரத்தில் கிருஷ்ணரின் வெண்ணெய்க்கல் எனப்படும் இயற்கையாய் அமைந்த பாறை ஒன்று உள்ளது.சரிவொன்றில் அமைந்து இருந்தும் இது உருண்டு விழுந்துவிடாமல் இருப்பது விநோதம்.இதற்கு தெற்கு பகுதியில் கிருஷ்ண மண்டபமும்,பஞ்சபாண்டவர்கள் மண்டபமும் உள்ளது.இங்கு 8-ம் நூற்றாண்டில் வடிக்கபட்ட உலக நாதர் ஆலயம் உள்ளது.இங்கிருந்து பார்த்தால் மொத்த நகரமும் கண்ணுக்கு தெரியும்.இவற்றின் தென் மேற்கே மூன்று குகைக் கோவில்கள் உள்ளன.
மகிஷாசுரமர்த்தினி குகை கோவில்,ஆதிவராக குகை
கோவில்,திருமூர்த்தி குகை கோவில்,ஆகியன உள்ளது.இன்னும் தெற்கே சென்றால் கணேசரதம் என்னும் மலைக் கோவில் உள்ளது.
பஞ்சரதம் :
ஒரே கல்லில் செய்யபட்ட ஆறு அமைப்புகள் இங்குள்ளன.மகாபலிபுரத்தில் இருந்து கல்ப்பாக்கம் செல்லும் சாலையில் 1 கி.மீ தெற்கு பகுதியில் உள்ளது.இந்த ஆறு அமைப்புகளில் ஐந்து பாண்டவர்களின் ரதமாகவும்,ஒன்று பாஞ்சாலியின் ரதமாகவும் கருதப்படுகிறது.இந்த ரதங்களின் வேலைபாடு முடிவுறாத நிலையில் உள்ளது.ஏழாம் நூற்றாண்டில் நரசிம்மன் இறந்து போனதால் சிற்ப வேலைபாடுகள் பாதியிலேயே நின்று போய்விட்டது.
மகாபலிபுரத்திற்கு வடக்காக 5 கி.மீ தூரத்தில் இருக்கும் புலிக்குகை என்னும் இடமும் பார்க்கவேண்டிய இடமாகும்.இங்கும் சிற்பங்கள் இருக்கின்றன என்றாலும் இது பெரும்பாலும் பொழுது போக்கும் இடமாகவே கருதபடுகிறது.
பல்லவர் காலத்தில் இங்கு நிலைபெற்று இருந்த சிற்ப கலை இன்றும் சீராட்டி வளர்க்கபடுகிறது.உலகின் முக்கியமான சிற்பகலை
மையங்களில் இதுவும் ஒன்று.
Mahabalipuram: Travel Guide
Altitude :Situated exactly to the mean sea level.
Population: 12,000.
Climate: Moderate and breezy
Languages spoken Tamil and English
Season: There is no specific season.Mahabalipuram can be visited at any part of the year.
Nearest Airport: Chennai.
Nearest railway station: Chengalpattu
Road Connection: The (ECR) East coastal road connects Mahabalipuram with Chennai and Pondicherry.
MAHABALIPURAM DANCE FESTIVAL
The department of Tourism of Tamilnadu conducts world famous dance festivals during the months of December and January. The festival is for 4 weeks and dancers all over the country participate. Classical dances, music, tribal dances and puppet shows will be part of the Dance festival.
Mahabalipuram Stay
GRT Temple Bay,
Kovalam Rd
Mahabalipuram
Phone: 044-27443636
Fisherman's Cove
Kovalam
Mahabalipuram
Phone: 044-27472303
Golden Sun Hotel & Beach Resorts,
59, Kovelong Road
Mahabalipuram
Phone : +91-44-27442245 / 27442246 / 27442946
Hotel Ideal Beach Resort
Mahabalipuram
Phone: 044-27442240/43
KG Emerald Beach Hotel
East Coast Road, Devaneri Village
Mahabalipuram-603104
Quality Inn MGM Beach Resorts
1/74, East Coast Road,
muttukadu
Phone: 044-27472435
Mamalla Beach Resort,
108, Kovalam Road
Mahabalipuram
Phone: 044-27442240/43
Mamalla Heritage
104, East Raja Street,
Mamallapuram-603104
Tamil Nadu
Phone : 044-27442060,27442260,27442360
- அஜிதன்
வெள்ளிதோறும் இரவு அஜிதனின்'வணக்கம் தமிழகம்' அந்திமழையில் வெளிவரும்....
அஜிதனின்'வணக்கம் தமிழகம்' பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
டிசம்பர் 11, 2009