ஒரு குளோசப்-2

வணக்கம் தமிழகம்
ஒரு குளோசப்-2
Published on

திருவண்ணாமலை.


அக்னியாய் சிவபெருமான் தோன்றிய திருத்தலம்.

எல்லோருக்கும் தெரிந்த கதைதான் இது.பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் ஒரு முறை யார் பெரியவர் என்ற மோதல் ஏற்பட்டது. சிவபெருமான் தன் முடியையோ அடியையோ கண்டவரே பெரியவர் என்று சொல்லி அக்னியாய் வளர்ந்து நின்றார். பாதம் காண விஷ்ணு பன்றியாய் அவதாரம் எடுத்து பூமியை குடைந்தார்.பிரம்மா முடிகாண மேல் நோக்கிப் பறந்தார்.இருவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.விஷ்ணு தோல்வியை ஒப்புக்கொண்டார்.பிரம்மா சிவனின் முடியிலிருந்து உதிர்ந்த தாழம்பூ உதவியுடன் பொய் சொல்லி சிவனின் கோபத்தை சம்பாதிதார்,அந்தக் கதைக்குரிய ஸ்தலம் இதுவே,அருணாச்சலேஸ்வரர் வீற்றிருக்கும் ஸ்தலம்.இங்கு இருக்கும் மலையே சிவனாக வழிபடப்படுகிறது.

மலையில் செருப்பணிந்து பக்தர்கள் வரமாட்டார்கள்.அருணா என்றால் நெருப்பு அல்லது ஒளி. அசலம் என்றால் அசைக்கமுடியாதது.அருணாசலம் என்றால் அக்னிமலை. வானுயர்ந்த மலை பின்னணியாகத் தெரிய சமவெளியில் நிற்கிறது அருணாச்சலேஸ்வரர் கோவில்,உள்ளே போய் சிவலிங்கத்தின் முன்பு விழுந்து எழுந்தால் அதை விட எதுவும் வேண்டாம்.ஸ்ரீரங்கத்திற்கு அடுத்து இரண்டாவது பெரிய கோவில் இதுதானாம்.இக்கோவிலில் தான் அருணகிரி நாதருக்கு ஒரு தூணில் முருகன் காட்சியளித்தான். திருப்புகழ் பிறந்தது. அருணகிரி நாதருக்கு இங்கு ஒரு சன்னதி உண்டு.இங்கு இருக்கும் ஓர் இருண்ட குகையில் ரமண மகிரிஷி தவம் செய்ததாக சொல்கிறார்கள்.

திருவண்ணாமலையை வலம் வருவதை பெரும்பாக்கியமாக கூறுகிறார்கள்.14 கி.மீ தூர பாதையில் பெளர்ணமி நாட்களில் மக்கள் கூட்டம் பொங்கி வழியும்.எங்கு பார்த்தாலும் தலைகள். நடக்க கூட இடம் இருக்காது. நான்கு
மூலையைச் சுற்றிவந்து கிரிவலம் முடிக்க நான்கைந்து மணி நேரம் ஆகும் .வழியில் அஷ்ட லிங்கங்கள் உண்டு.
திடீர் கோவில்கள்,ஆசிரமங்களும் முளைத்துள்ளன.அஷ்டலிங்கத்தில் குபேரலிங்கம் ஒன்றும் உண்டு.அதைக் குறி பார்த்து நாணய்ங்களை எரிந்தால் செல்வம் பெருகும் என்பது ஓர் ஐதிகம்.உலகத்தில் உள்ள சில்லரை எல்லாம் இந்த
லிங்கத்தின் மீது குவிந்து கிடக்கிறதோ என்று சொல்ல தோன்றும்.

அருணாசலேஸ்வரர் ஆலயத்தைப் பொறுத்தவரை கார்த்திகை தீபத்திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சுமார் 10 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள்.தென்னிந்தியாவைன் மிகப் பழமையான திருவிழா இதுதான்.தொல்காப்பியத்தில் கூட இது பற்றி குறிப்பு உண்டு,30 மீட்டர் நீளமான திரியை 2000லிட்டர் நெய்யில் நனைத்து சுடரேற்றுவர். இதுவே திருவண்ணாமலை தீபம்.பல மைல்கள் வரை தெரியும்.இப்போது டி,வி கள் மூலமாக உலகமெங்கும் தெரிகிறது.

ரமண ஆசிரமம் : தன்னையே அறிவதுதான் ரமண மகிரிஷியின் தத்துவம்.சிறு வயதில் திருவண்ணாமலையின் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார் ரமணர். .செப்டம்பர் 1,1896 ல் வந்தவர் பின் திரும்ப போகவே இல்லை. ரமணாசிரமம், ஸ்கந்தா ஆசிரமம்.என்று இரண்டு இடங்கள் உள்ளன.ரமணாசிரமம் செல்பவர்கள் 30 நிமிடங்கள் மலையேறினால் ஆசிரமத்தை அடையலாம். ஸ்கந்தாசிரமம் ஓர் அமைதியான இடம். ரமண பக்தர்கள் ஆன்மீக அனுபவங்களுக்காக இந்த இடங்களுக்கு வந்து தியானம் செய்வார்கள்.ரமணாசிரமத்தில் யார் வேண்டுமானாலும் தங்கி ஆன்ம யோகங்கள் செய்யலாம்.அறைகளை இரண்டு மாதங்களுக்கு முன்பு முன் பதிவு செய்ய வேண்டும்.திருவண்ணாமலையை சுற்றி
வந்து ஆன்மிக அனுபவத்தை பெற்ற பின்னர் அங்கிருந்து 30 கி.மீ சுற்றியிருக்கும் சாத்தனூர் அணைக்கட்டுக்கு செல்லலாம். தென் பெண்ணை நதியில் கட்டபட்ட அணை. அமைதியான சூழல்.
திருவண்ணாமலை அருகே 30 கி.மீ தூரத்தில் இருக்கிறது செஞ்சி அரண்மனை.ராஜகிரி,கிருஷ்ணகிரி,சந்திராயன் துர்க்கம் ஆகிய மூன்று குன்றுகள்மீது கட்டபட்டது இந்த கோட்டை.ராசா தேசிங்கு என்று நாட்டுபுற கதைகள் வழியாக நம் அடிமனதில் கரைந்து போன வீரனின் நினைவுகள் இங்கே பீறிடும்.

நுழைவுக்கட்டணம் 20 ரூபாய்,காமிரா 20 ரூபாய்,வீடியோவிற்கு 250 ருபாய். காமிரா செல்போனுக்கு கட்டணம் இருக்குமா என்று யோசிக்கிறீர்களா?


Thiruvannamalai Travel Guide


Climate:

Languages spoken Tamil,Telugu and English

Season: Best time to visit: November – March

Nearest Airport: Chennai /Bangalore

Nearest railway station: You can board a passenger train to Vellore or Villupuram from the railway station at Thiruvannamalai.


Road Connection: 185 km from Chennai and 210 km from Bangalore
Local Transportation: Taxis , auto-rickshaws and vans are available for local transportation.

Festivals : Four Brahmotsavams are celebrated here every year.The one celebrated during the month of Karthikai (November/December) is the most famous and during this brahmotsavam ten day event culminates on the day of Karthikai Deepam.And on the Karthikai Deepam day a huge lamp is lit on a cauldron with three tons of ghee at the top of the Annamalai hills.

During the Karthikai Deepam festival, the famous Cattle Fair is celebrated. It is estimated that nearly 20,000 cattle are brought to this 4-day fair.



STD Code :04175


Stay

Hotel Nala Residency

No.21, Annasalai,
Tiruvannamalai - 606 601,
Tamilnadu.
Phone : (04175)-252399
Mobile:+(91)-9443222818, 9994498777
Fax : (04175)-250812



Hotel Arunachala
No.5, Vada Sannathi Street,
Tiruvannamalai - 606 601,
Tamilnadu.
Phone : (04175)-225474



Hotel Ramakrishna
No.34-F, Polur Road,
Tiruvannamalai - 606 601,
Tamilnadu.
Phone : (04175)-250005, 250006, 320055
Mobile: +(91)-9443163151
Fax : (04175)-250008


Annamalai Guest house
No.6A, Vada Sannathi Street
Near Periya Gopuram,
Tiruvannamalai - 606 601
Tamilnadu
Phone : (04175)-222750
Mobile: +(91) 9245273553



- அஜிதன்

வெள்ளிதோறும் இரவு அஜிதனின்'வணக்கம் தமிழகம்' அந்திமழையில் வெளிவரும்....

அஜிதனின்'வணக்கம் தமிழகம்' பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

நவம்பர் 28, 2009

<<<முந்தைய பகுதி

logo
Andhimazhai
www.andhimazhai.com