ஒரு குளோசப்

காஞ்சிபுரம் - வணக்கம் தமிழகம்
ஒரு குளோசப்
Published on

ஒரு காலத்தில் பல்லவர்களின் தலைநகரமாக மகோன்னதச் சிறப்புகளுடன் இருந்த மாநகரம் காஞ்சிபுரம்.பின்னர் சேரர்கள் விஜயநகரப் பேரரசு, நாயக்கர் காலம் என்று வரலாற்றில் தொடந்து புகழ் பெற்ற நகரம்.சுமார் ஆயிரம் கோவில்கள் இங்கு கட்டபட்டிருப்பதாக சொல்வார்கள்.தற்போது எஞ்சியிருப்பவை சுமார் 100 கோவில்கள் இருக்கலாம்.காஞ்சி நகரத்தின் எந்த சிறு தெருவிலும் ஒரு கோவில் இருக்கும்,ஒரு வரலாறு இருக்கும். நமது
பாரம்பரியம்,வரலாறு ஆகியவை மீது ஈடுபாடு கொண்ட அனைவரும் பார்க்கவேண்டிய இடம் இது. பாரம்பரியம் மிக்க இந்த நகரில் இருந்து அறிஞர் அண்ணா புறப்பட்டு வந்ததில் வியப்பேதுமில்லை.

நகரம் :

தெற்கே விஷ்ணு காஞ்சி,வடக்கே சிவகாஞ்சி - இப்படி இரண்டாக பிரிக்கபட்டுள்ளது இந்த நகரம்.சிவகாஞ்சியில் சிவன் கோவில்கள் அதிகம்,விஷ்ணுகாஞ்சியில் வைணவ கோவில்கள் அதிகம்.கொம்மரநாதர் கோவில்,கைலாசநாதர் கோவில் ஆகியவை சிவகாஞ்சியில் உள்ளன.இதை பெரிய காஞ்சிபுரம் என்பார்கள்.தெற்கே சின்ன காஞ்சிபுரம் அல்லது விஷ்ணு காஞ்சியில் இருப்பது வரதராஜ பெருமாள் கோவில்.

காமாட்சி அம்மன் கோவில்:

காஞ்சிபுரம் என்றால் காமாட்சி அம்மன் தான். நான்கு கரங்கள்,கரும்பு வில்,மலர் அம்புகள்.என்று காட்சி தரும் இவள் லட்சுமி,சரஸ்வதி, பார்வதி,ஆகிய மூவரின் அம்சமாம்.தங்கமுலாம் பூசிய விமானத்தின்
கீழிருக்கிறது கருவறை.24 தூண்கள் கொண்டது இந்தக் கருவறை.காயத்ரி
மந்திரத்தின் 24 பொருட்களையொட்டி இத்தனை தூண்கள்அமைக்கப்பட்டுள்ளன.உள்ளே காமாட்சியின் வடிவம்.அதனருகே வலது பக்கம் தல நிலையில் இருக்கும் காமாட்சி. இடது புறம்
'பிலகாசம்' எனப்படும் மிகப்பெரிய பாதாளம்.இதிலிருந்துதான் ஒளிக்கற்றையாய் காமாட்சி தோன்றினாளாம்.கோவிலின் மேற்கு புறம் `பஞ்ச தீர்த்தம் உள்ளது.அருகே விஷ்ணு ஆலயம்.அமர்ந்து, நின்று,மற்றும் சயன நிலையில் இருக்கிறார்.வெளியில் இருந்து பார்த்தால் அமர்ந்த கோலம் மட்டும் தெரியும்.காயத்ரி மண்டபத்தில் நுழையும் போது ஆடவர் சட்டையை கழற்றி விட வேண்டும்.

ஏகாம்பர நாதர் கோவில் :

பல்லவர்கள் கட்டி சோழர்களால் மெருகூட்டபட்டது இந்த ஆலய்ம்.இங்கு இருக்கும் லிங்கம் பார்வதியால் உருவாக்கபட்டது வேகவதி நதி இதை அடித்து செல்ல முற்பட்டபோது பார்வதி லிங்கத்தை தழுவி காத்தாள்.சிவ பெருமான் காட்சியளித்து அவளை மணந்து கொண்டார்.இந்த தெய்வீக
திருமணம் ஓர் மாமரத்து அடியில் நடந்தது.3500 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக சொல்லபடும் இம்மரம் நான்கு சுவையுடைய மாங்காய்களை தருகிறதாம்.இனிப்பு, புளிப்பு,கசப்பு,துவர்ப்பு.
இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாளின் நாமம் சந்திரகாந்த பெருமாள். அமிர்தம் பெறுவதற்காகப் பாற்கடலை கடைந்தபோது அதிலிருந்து பெருகிய விஷத்தின் வெப்பத்தை விஷ்ணுவால் தாங்க முடியவில்லையாம்.அவர் சிவனை துதிக்க சந்திரனின் ஒளியை அவர்மீது படர செய்து
குளிர்வித்தார் சிவன்.எனவே இந்த பெயர்.23ஏக்கரில் அமைந்தது இந்த கோவில்.

கைலாசநாதர் கோவில் :

சிற்ப கலைக்கு புகழ் பெற்ற கோவில்,இரண்டாம் நரசிம்ம பல்லவரால் கட்டபட்டது.உள்ளே அற்புதமான சிவ லிங்கம் ஆறு அடி உயரம் கொண்டது.

வரதராஜ பெருமாள்கோவில் :

108 திருப்பதிகளில் ஒன்று,பதினோறாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டுவிக்கபட்டது.இதிலிருக்கும் ஆயிரங்கால் மண்டபம் சிறப்பானது,யாளிகளும்,குதிரை வீரர்களும் செதுக்கபட்ட அபூர்வ மண்டபம்.காஞ்சி சங்கராச்சாரியார் மீது குற்ற பத்திரிக்கை சமர்ப்பிக்க,
விசாரணை அதிகாரி பிரேம்குமார் இந்த கோவிலில் வணங்கி விட்டு தான் சென்றார்.இவற்றை விட்டால் நைனாப்பிள்ளை தெருவில் இருக்கும் காஞ்சி குடில் ஒரு புதுமையான இடம்.பழைய வீடு ஒன்று பாரம்பரியம் மிக்க காட்சியகமாக மாற்றபட்டுள்ளது.பாரம்பரிய சமையலறை உள்ளிட்ட அறைகள் இதில் உள்ளன.காஞ்சிபுரம் பற்றிய ஆவணங்கள்,அதன் பழக்க வழக்கங்கள்,ஆகியவை சுவர்களில் சித்தரிக்க பட்டுள்ளன.

காஞ்சிக்கு வந்து பட்டு சேலை பற்றி பேசாமல் போனால் எப்படி? !சுமார் 5000 குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.ஆனால் இப்போது இந்த குடும்பங்களின் எண்ணிக்கை குறைகின்றது என்று கவலையுடன் சொல்கிறார்கள்.காஞ்சிபுரத்திற்கு புகழ் சேர்க்கும் இன்னொரு விஷயம் இட்லி. காஞ்சிபுரம் இட்லி எனப்படும் இது பழக்கமான இட்லி அல்ல.எல்லா ஹோட்டல்களிலும் இது கிடைக்காது.வாரத்தில் குறிப்பிட்ட
தினங்களில் தான் இது கிடைக்கும்,வரதராஜ பெருமாள்
கோவிலில் இரண்டு நாள்களுக்கு முன்பு 100 ரூபாய் செலுத்தி 'புக்' செய்தால் ஒரு அடி அகலம் கொண்ட பெரிய இட்லி கிடைக்கும் !
சுவாமிக்கு படைத்து விட்டு நமக்கு தருவார்கள்.

Kanchipuram Travel Guide

Climate: During summers, the temperature ranges between 36.6 C and 21.1 C. Winter months are slightly colder and the temperatures remain between 28.7 C and 19.8 C. The average annual rainfall in the city is 87 cm.

Languages spoken Tamil,Telugu and English

Season: Throughout the year

Nearest Airport: Chennai

Nearest railway station: Trains for Kanchipuram are available from Chennai, Chengalpattu, Tirupati, and Bangalore.

Road Connection: The city is situated around 70 km from Chennai

Local Transportation: Taxis , auto-rickshaws and vans are available for local transportation.

FESTIVALS

Some important festivals are the Brahmothsavam, Garudothsavam, and Car (rath) festivals, which are held in the months of January, April, and May respectively.

STD Code : 04112

Stay

GRT Regency
487, Gandhi Road
Kanchipuram - 631501.
Tamil Nadu, India.

+91- 44 - 27225250 (8 lines) /
27226872, 67277778

www.grthotels.com

adminkanchi@grtregency.com

Hotel Jayabala International
504, Gandhi Road
Kanchipuram - 631501.
Tamil Nadu, South India.

044 - 27224348, 27224453, 27224561, 278229728,27229730.

Mr. B. Saravanan. B.L,
Managing Director

www.hoteljaybala.com

- அஜிதன்

வெள்ளிதோறும் இரவு அஜிதனின்'வணக்கம் தமிழகம்' அந்திமழையில் வெளிவரும்....

அஜிதனின்'வணக்கம் தமிழகம்' பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

ஜனவரி 01, 2010

அடுத்த பகுதி>>>

logo
Andhimazhai
www.andhimazhai.com