ஆடுகளம் லுங்கி டான்ஸ் உருவான கதை! – விக்ரம் சுகுமாரன் பேட்டி!

விக்ரம் சுகுமாரன்
விக்ரம் சுகுமாரன்
Published on

மதயானை கூட்டம், இராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாரனுடன் எழுத்தாளர் ஷாஜி நடத்திய நேர்காணலில் இருந்து சிறு பகுதி:

“பொல்லாதவன், ஆடுகளம் படத்தில் வெற்றிமாறனிடம் இணை இயக்குநராக இருந்தேன். வெற்றிமாறன் சென்னைக்காரர். அவர் யோசிக்கும் விஷயங்களே சென்னைத்தனமாக இருக்கும். நான் தென்மாவட்டத்துக்காரன் என்பதால் ஆடுகளத்தில் வேலைப் பார்க்க அழைத்தார். அந்த படத்துக்காக நிறைய கிரவுண்ட் ஒர்க் பண்ணேன். என்னுடைய மதயானை கூட்டம் படத்துக்குக் கூட அப்படி ஒர்க் பண்ணவில்லை.

ஆடுகளம் படத்தின் டப்பிங் நூறு நாளைக்கு மேல் நடந்தது. அந்த படத்தில் தேர்ந்த கலைஞர்கள் என்று பெருசா யாரும் இல்லை. சேவல் சண்டை விடுகிற பசங்களையே நடிக்க வைத்து எடுத்தோம்.

அந்தப் படத்தில் வரும் லுங்கி டான்ஸ் முதலில் ஒரு மூவ்மெண்ட் மாதிரிதான் இருந்தது. ஹீரோயின் ஹீரோவிடம் காதலை சொல்வாள். அந்த சந்தோஷத்தில் ஹீரோ பண்ணும் ரியாக்‌ஷன்தான் அது. அதை சும்மா செஞ்சி காட்டியிருந்தேன். பிறகு அதை வெற்றிமாறன் டான்ஸாகவே மாத்தியிருக்கார். அது எனக்கு தெரியாது. ஒருநாள் நான் டப்பிங்கில் இருக்கிறேன், உடனே சூட்டிங் ஸ்பாட்டுக்கு வரச்சொன்னார்கள். அங்கு போனால் செம கூட்டம். என்ன ஏதென்று கேட்டால், யாரோ டான்ஸ் மாஸ்டர் வருவதாக சொன்னார்கள். ஏற்கெனவே தினேஸ் மாஸ்டர் தான் இருக்கிறாரே, வேற எந்த மாஸ்டர் வருகிறார் என்று நினைத்தேன். பிறகுதான் தெரிகிறது நான் தான் அந்த மாஸ்டர். உடனே வெற்றிமாறன் என்னை ஆடிக்காட்டச் சொன்னார். அந்த டான்ஸோட ஐடியா நான்தான். அதை முழுமையாக நடனமாக வடிவமைத்தார் தினேஷ் மாஸ்டர்.”

நேர்காணல் சுட்டி கீழே:

logo
Andhimazhai
www.andhimazhai.com