சமீபத்தில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தன் இரண்டு மார்பகங்களையும் அகற்றிக் கொண்டார். அவரது தாய்க்கு மார்பகப் புற்றுநோய் வந்தது. அந்த மரபணு தன்னிடமும் இருப்பதைக் கண்டறிந்து தன் மார்பகங்கள் இரண்டையும் அகற்றிவிட்டார் அவர்.
அழகு, பெண்மை ஆகியற்றை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய நேரம் இது. அவர் இந்த ஆபரேஷன் பற்றி வெளிப்படையாக தெரிவித்ததன் மூலம் மார்பகப் புற்றுநோய் பற்றி பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
புற்றுநோய் தடுக்க ஐந்து வழிகள்:
1) புகை பிடிக்கவே கூடாது. புகை பல்லைக் கறைப்படுத்துவது மட்டுமல்ல; புற்றையும் உருவாக்கும்.
2) சரக்கு அடிப்பதைக் குறையுங்கள். ஆமாம். பெரும்பாலான குடல் புற்றுகள், கல்லீரல் புற்றுகள், மார்பக, கணைய புற்றுகள் இதனால் ஏற்படுகின்றன.
3) சரியாகச் சாப்பிடுங்கள். பாதி புற்றுநோய்கள் வரவே வராது. பல வண்ணங்கள் கொண்ட காய்கறிகள், நார்ச்சத்து கொண்ட (கீரை, கைகுற்றல் அரிசி) போன்றவற்றை சாப்பிடுங்கள். வேதிப்பொருள்களை சமையலில் சேர்க்க வேண்டாம். அதிகக் கொழுப்பு, சிவப்பு மாமிசம் வேண்டாம்.
4) உடல் எடையைக் கவனிக்கவும். ஒரு நாளைக்கு 10,000 அடிகள் எடுத்து வையுங்கள். தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் செய்யுங்கள். ஒரு நாளைக்கு 5 முறை சாப்பிடவும். மூன்று சாப்பாடுகள், இரண்டு ஸ்நாக்ஸ். ஆனால் எல்லாம் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும்.
5) தூய்மையான சுற்றுச்சூழலில் வசியுங்கள்.
ஜூன், 2013.