சிறப்புப்பகுதி
கேரளத்தில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பையனூர் அருகே அழகான ஒரு நூலகம் சென்ற ஆண்டு திறக்கப்பட்டது. மலையாளிகள் நூலகங்களை பெரிதும் விரும்புபவர்கள்தான். ஆனால் இந்த நூலகக் கட்டடம் அமைந்திருக்கும் விதமே தனி. எனவே இதன் படத்தை சமூக ஊடகங்களில் ஆர்வமுடன் பகிர்ந்துவருகிறார்கள், மலையாள மற்றும் உலக இலக்கிய புத்தகங்களை அடுக்கி வைத்து கட்டப்பட்டதைப் போன்று தோற்றமளிக்கிறது இக்கட்டடம். நூலகத்தை வெளியிலிருந்து பார்த்தாலே பல நூல்களின் பெயரைத் தெரிந்துகொண்டது போல் ஆகிவிடும்!
ஆகஸ்ட், 2020.