கலாட்டா கல்யாணம்

கலாட்டா கல்யாணம்
l
Published on

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நட்பை திருமணத்துக்கு முன்பு; திருமணத்துக்குப் பின்பு என்று இரண்டாகப் பிரிக்கலாம். திருமணத்துக்கு முன் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்கிற, தனிமையைப் போக்குகிறவர்களாக நமக்கு நண்பர்கள், நண்பிகள்தான் இருக்கிறார்கள். கல்யாணம் முடிந்த கணத்திலிருந்து அந்த இடத்துக்கு கணவனோ மனைவியோ வந்துவிடுகிறார்கள். நட்புகள் ஒதுங்கிவிடுகின்றன.  நீங்கள் திருமணம் ஆனவராக இருப்பின் உங்கள் கல்யாண ஆல்பத்தை எடுத்துப் பாருங்கள். எத்தனை நண்பர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்கள்? அவர்களில் எத்தனை பேருடன் நீங்கள் இன்னும் நட்பு பாராட்டுகிறீர்கள்?

தனுஷ் நடித்த பொல்லாதவன் படம் பார்த்திருக்கிறீர்களா? நண்பன் ஒருவனின் சகோதரி திருமணத்துக்குச் சென்று அவர் குடித்துவிட்டுப் போடும் கும்மாளம் நண்பனையும் அவனது உறவினர்களையும் கதற வைக்கும். இதுபோல் நிஜத்திலும் நடப்பதுண்டு. மயக்கமென்ன? இதுவும் தனுஷ் படம்தான். மணமகளின் தோழனாக வரும் தனுஷ், மணமேடையிலேயே மாப்பிள்ளையின் தலையில் பீர் பாட்டிலால் அடித்துவிடுவார்.

இதுபோல  நண்பனின் திருமணத்தில் தனக்குப் பெண்பார்ப்பது, பந்தியில் பரிமாறுவது, மாப்பிள்ளையைக் கலாய்ப்பது என்று எவ்வளவோ விஷயங்களை அந்திமழை நடத்திய திருமணமும் நண்பர்களும் தலைப்பிலான கருத்தரங்கில் நண்பர்கள் பகிர்ந்து கொண்டார்கள். அதில் வயிறுவலிக்க சிரிக்க வைத்த ஒன்று:

@Im_sme:நமக்குன்னு ஒரு கஷ்டம் வர்றப்ப புது ட்ரஸ் போட்டு வந்து அதுல பங்கெடுத்துப்பானுக!

நண்பர் ஆல்தோட்ட பூபதி ஒருங்கிணைப்பில் #friendsandmarriage என்ற டேக்கில் நடந்த டிவிட்டர் கருத்தரங்கம், சென்னையில் ட்ரெண்டிங் ஆகும் அளவுக்கு உற்சாகமாக நடந்தது. ஆயிரக்கணக்கில் குவிந்த பதிவுகளில் எல்லாவற்றையும் பிரசுரிக்க இயலாது என்பதால் அதில் தேர்வு செய்த ட்வீட்டுகள் மட்டும் அடுத்த பக்கங்களில்...

---

@ku_sumban: மாப்ளயோட அப்பாகிட்ட தெளிவா பேசுவோம்: ஒண்ணும் ப்ரஷ்னை லை அங்கிள் முஷ்ரலாம்...

@guzhali_: திருமணமான பின் அறிவுரை கூறிவதில் அம்மாவை மிஞ்சிவிடுகிறாள் தோழி.

@karaiyaan:ஸ்கூல்லயும்,காலேஜ்லயும் நீ வாங்குன பல்பெல்லாம் சேர்த்தா உன் கல்யாணத்துக்கு சீரியல் லைட்டு செலவு மிச்சம்டா! Great Insult

sihva107:(முன்னாள்)காதலியின் திருமணத்திற்கு பத்து நாள் தாடியுடன் சென்று தேவதாஸ் லுக் விடுவது

 @Aathithamilan:இன்னைக்கு மட்டும் சிரிச்சிக் கோடானு மணப்பெண் முன்னால் சொல்லியே போட்டுக் குடுத்து பெண்ணை யோசிக்க வச்சிடுவாங்க

@panankattan:கைய பிடிடா..

 சத்தமாக ஒருத்தன். ஏன்டா கைய விடவே மாட்டியா மற்றொருத்தன்..அவஸ்தையப்பா

 @Suresh_Sbm:நண்பர்களின் திருமணங்களுக்கு செல்லும் போதெல்லாம் தவிர்க்க முடியாத கேள்வியாகிவிட்டது ‘மச்சான் அடுத்தது உனக்கா?‘

@sambanths:திருமண மேடைகளில் தான் பார்க்கும் எதையும் அளக்காத கண்கள் நண்பர்களுடையது தான்.

@subrajeevi:எங்க... நம்ம வண்டவாளமெல்லாம் ..தண்டவாளம் ஏறிடுமேன்னே .. வெகுபேர் கல்யாணத்துக்கு அழைக்கிறது இல்லை.

@Alexxious:மணப்பெண்ணின் தோழிகளை விழுந்து விழுந்து அவனுங்க கவனிக்கற அந்த விருந்தோம்பல் - அடடடா !!

@ashoker_UHKH: நண்பன் திருமணம். அவனுக்கு மனைவியும் நமக்கு ஒரு தங்கையும் கிடைக்கும் நாள்.   

@sasi_erode:நீ என் கல்யாணத்துல ரூம் போட்டு குடிச்சுட்டு மண்டபத்துல பண்ண அலும்ப விட டபுள் மடங்கா பண்ணல... நா உன் நண்பன் இல்லைடா

@K7ganapathy:எல்லா கிறுக்குத்தனத்தையும் பண்ணி, வருக வருக-னு ப்ளெக்ஸ் போர்டு வச்சு நம்ம மானத்தையும் சேர்த்து கப்பலேத்திடுவாயிங்க

@iGhillli: உனக்கு எல்லாம் பொண்ணு கொடுத்த மங்கூஸ் மண்டையன் யார் ?! #FAQ

@Kosaaksi :நைட்டு பூரா கண் முழிச்சி தாம்பூலப்பை போட நண்பர்கள விட்டா வேற யாரு இருக்கா ?

@sureshbabu_r: மச்சி, வீட்டுக்கு வந்து பத்திரிக்கை வை டா.. அப்பத்தான் எங்க வீட்டுலயும் பேச்ச ஆரம்பிப்பாங்க.  

 @vambukku: சரக்கும் சரக்கு சார்ந்த இடமும்.

 @padhulondon:பெரும்பாலும் தோழிகளின் கல்யாணத்திற்கு செல்லும்போது படுபவ்யமாக நடந்துகொள்ள எத்தனிக்கிறது மனசு.

 @Alludumajaka:நம்ம டாவடிச்ச பொண்ணோட கொழந்தைய நாமளோ,நம்ம குழந்தைய நம்ம டாவோ தூக்கிகொஞ்சு(வோ)ம்..        

 @athisha:“என்னங்க இவதான் என் பிரண்ட் **** ... உங்களுக்கு தங்கச்சி மாதிரி!”

@OnlyHariKrishh:மச்சான் அந்த பொண்ணுட்ட இண்ட்ரோ பண்ணிவைடா.

 @childchinna:பந்தில மீந்து போன கூட்டு,பொரியல வச்சே எத்தன கண்ணாலத்துலையா சரக்கடிக்கிறது? பந்தில தந்தூரி சிக்கன் மாதிரிலாம் போடலாம்ல ..

 @rajakumaari:பல தோழிகளை அவர்களுடைய திருமணத்தில் தான் கடைசியாக பார்த்தது

@ ku_sumban:பாத் ரூம விட்டுட்டு மெனக்கட்டு லிப்ட்ட தொரந்து வாந்தி எடுத்து வெப்பானுக.

@ dhivisdreams:எங்க க்ளாஸ் பக்கிகள் நைட் பார்ட்டில,மாப்பிள்ளை ஃப்ரெண்ட்ஸோட சமரசமாகி காலேஜ்ல எங்க ரகளையெல்லாம் ஔறிக் கொட்டிட்டுதுங்க.

@ prabakaran1187:பொண்ணுக்கு தங்கச்சி இருந்தா மாப்பிள்ளைய சகலன்னு கூப்பிட ஆரம்பிசிடுவனுங்க..  பேடு பாய்ஸ்.

@ ArulVeerappan:ஒரு வாரத்துக்கு அப்பறம் போன் பண்ணி, கல்யாணத்தன்னிக்கு பாத்த மஞ்ச கலர் சுடிதார பத்தி விசாரிப்பானுங்க..

@ RavikumarMGR:பத்தரை மணிக்கு எந்திரிச்சுட்டு, என்னது அதுக்குள்ளே தாலி கட்டிட்டானான்னு ஜெர்க் காட்டுவோம் பாருங்க!           

@ prabakaran1187:ப்ளெக்ஸ் பேனர்ல கண்டிப்பா ஒருத்தன் செல்போன்ல பேசற மேனிக்கு போஸ் கொடுப்பான்.

@ yuvitwits:தெரியாதனமா மொய் எழுத உக்காந்து கணக்கு வராம திரு திருன்னு முழிப்போம்

@ iindran:ஆண்கள் தன்னுடைய பெண் நண்பர்களை மனைவிக்கு அறிமுகம் செய்துவைப்பதை ஆண்மையின் அடையாளமாக நினைக்கிறார்கள்.

@ ansari_masthan:நட்பின் உரிமையை ஊருக்கே விளக்கி காட்டும் உன்னத தருணம் அது!!!

@ Tottodaing:எந்த வேலைக்கு ஆள் வரலேன்னாலும், உடனே யோசிக்காம களமிறங்கி ஜமாய்க்கிறது!

 @ mannankkatti:நண்பன் தாலி கட்டும் போது ரூம்ல குப்புற வுழுந்து கெடக்குறவன் தான்யா உயிர் நண்பன்!

@ ak_nirmal:கூடவேதான் சுத்திகிட்ருப்பாய்ங்க!ஆனா பந்தி ஆரம்பிக்கிறப்ப மட்டும் கரெக்டா எஸ் ஆயிருவானுக.எப்படிதான் கண்டுபிடிப்பாய்ங்களோ?

@ KOVAI_KAMAL:அதுதான் பழைய நட்புகளுக்கு கடைசிநாள்!

@ PeriyaStar:எல்லாத்தையும் கடுப்பேத்தறதுக்காகவே தாலி கட்ற நேரத்துல 1100 மொபைல்ல ஃபோட்டோ எடுக்கற மாதிரி மறைக்கறது.

@ IamKanal: பந்தி பரிமாற கூப்டா ஃபோன எடுத்து அலோ அலோன்னு கத்தீட்டு எஸ்கேப் ஆயிருவானுங்க.. ராஸ்கல்ஸ்.  

 @ puruda_jen:நண்பர்களுக்குள் உண்டான உறவு தாலி கட்டுற நிமிடங்களிலே அறுந்துபோய் விடுகிறது.

 @ karthiguy:நல்ல வேலையாக பழைய காதலி கம் தோழிகள் வருவதில்லை விதிவிலக்கு: ஆட்டோகிராஃப்.

@ kattathora: மச்சான், மச்சான்னு லட்சமுறை கூப்டுருந்தாலும், ஒரு மச்சான் கூட மச்சான் மோதிரம் போடுறது இல்ல..

 @ raajeswaran:ஸிஸ்டர் என்ற வார்த்தைக்கு அன்னைக்குதான் அர்த்தம் தெரிஞ்சா மாதிரி அளவுக்கு அதிகமா யூஸ் பண்ணுவாங்க.

 @ arasu1691:கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சுன்னு சொன்னா அடுத்த கேள்வி ‘பார்ட்டி எப்படா’.

@ kattathora:மாப்ளைக்கு(ம்) ஹேங் ஒவரா இருக்கும்னு அனுமானம் பண்ணி மாத்திரை வாங்கி வைக்கிறவன்...நண்பேன்ன்ண்டா.!

 @ GoundarReturns:மாப்ளைக்கி விபூதிய தொடைக்கிறதுகுன்னே கையில கர்ச்சீப்ப குடுத்து சைடுல நிறுத்திடுவாங்க.

@ Cobraaking:மாப்பிள்ள, குடுத்து வச்சவன்டா, உன் மச்சினிச்சியும் சூப்பரா இருக்குடா. ஈஈஈஈ

@ GOVINDARAJEN:தோழியின் திருமணத்தில் நண்பிகள் செய்யும்,வெட்கத்துடன் கூடிய அலப்பரைகள்,அழகான கவிதைகள்.

@ seabeggar1:மண்டபத்துல ஒக்காந்துகிட்டு , ஊர்ல இருந்து வர பிரண்ட்டுக்கு தப்பு தப்பா வழி சொல்லுவாய்ங்க ..

@ pbbalajii:சரக்குக்கு சைட் டிஷ் சமையலறையில உஷார் பண்ணிட்டு, அந்த காசுக்கும் சரக்கு வாங்கி மொட்ட மாடிய பார் ஆக்குவோம்.

@ krajesh4u:வரிசையா இருக்கிற சேர ரவுண்ட் டேபிள் மாநாடா மாத்திடுவாங்க

@ raajeswaran: ஏற்கெனவே கல்யாணம் ஆனவன் அனுபவம்ங்கற பேர்ல பண்ற அட்வைஸ் இருக்கே... ஸ்ஸப்பா...!   

 @ beingBritz:நாம போறதே கிப்ட் தான்டா!! எதுக்கு தனியா கிப்ட் வேற..:)

@ naaraju: பொண்ணு கம்ப்யூட்டர்.பையன் சிவில். கல்யாணம் நடத்தி வச்சது மெக்கானிக்கல்! :-)

@ aravindslm:மண்டபத்துலயே அழகா இருக்கற பொண்ண எல்லாரும் சேந்து சைட் அடிக்கறது.

 @ NithraaA:ப்ளான் பண்ணுறதென்னவோ 10 பேர்,கடைசில 3 பேர் தான் போவோம்..

@ indirajithguru: கொளுந்தியால இவனுக கண்ணுல இருந்து மறைக்கிறதுக்குள்ள ஸூப்பப்பபா.

 @ Cobraaking:வாசல்ல அழகான பொண்ணு பன்னீர் சொம்போட நின்னா, பன்னீர் மட்டுமில்ல கடேசி பந்தி முடியிற வரைக்கும், அங்கியே நிப்பானுங்க.

@ kiramaththan: வெத்துக் கவர்ல 1000 ஓவான்னு எழுதிக் குடுத்துப் போட்டோ புடிச்சிக்கறது!

@vangaela : கழுத வயசானாலும் கல்கண்ட கை நிறைய அள்ளுவானுங்க.

 @IamMadhavan: முஸ்லிம் ஃப்ரெண்ட்ஸ் கல்யாணத்துக்கு மட்டும் மிஸ் பண்ணாம போயிடுவோம்..

@jroldmonk: அவங்கவங்க ஊர்லருந்து கிளம்பினதுமே ஆரம்பிச்சிருவாங்க ‘மைக் ஒன் காலிங் மைக் டூ....

டிசம்பர், 2013

logo
Andhimazhai
www.andhimazhai.com