கனிஷ்க் தரூர் ஆங்கில எழுத்தாளர். அப்பா ஐநாவிலும் அம்மா அமெரிக்கப் பல்கலைக்கழகத்திலும் வேலை பார்த்ததால் நியூயார்க்குக்கு சின்ன வயதிலேயே போய்விட்டவர். அங்கே சர்வதேச பள்ளியில் படித்தவர். Swimmer Among the Stars என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். பதினெட்டு வயதில் இருந்து 30 வயது வரை எழுதிய சிறுகதைகள் அதில் இடம்பெற்றுள்ளன. அவரைப் பற்றி சில தகவல்கள்:
1) கனிஷ்க், பிபிசி வானொலியில் மியூசியம் ஆப் லாஸ்ட் ஆப்ஜெக்ட்ஸ் என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருக்கிறார்.
2) இவரது வீடு முழுக்க நூல்களாக இருந்ததால் சின்னவயதில் இருந்து நிறைய வாசிப்பாராம். மார்குவஸைக் கூட மிகச் சிறுவயதிலேயே வாசித்து விட்ட இவருக்குப் பிடித்தமான நூல் இத்தாலிய எழுத்தாளர் இடாலோ கால்வினோ எழுதிய இன்விசிபிள் சிட்டீஸ்.
4) சேதன் பகத் போன்றவர்கள் எழுதுவதால் இந்தியாவிலேயே எழுதப்பட்ட நிறைய ஆங்கில நூல்களை வாசிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கிறது. இது மிக நல்லது என்பது இவரது கருத்து.
5) இவரது அப்பா ட்விட்டரில் புகழ்பெற்றவர். நீளமான ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துவார். ஆனால் கனிஷ்க் அதை ரசிப்பதாகத் தெரியவில்லை. அப்பா பாதி அரசியல்வாதியாகவும் பாதி
அருஞ்சொல் அகராதியாக ஆகிவிட்டார் என்று கிண்டல் செய்கிறார்.
கனிஷ்கின் அப்பா பெயர் என்ன?
சசி தரூர்! (அட!)
மே, 2019.