விவசாயம் உருப்பட 9 யோசனைகள்

விவசாயம் உருப்பட 9 யோசனைகள்
Published on
  1. விவசாய விளைபொருட்கள் அனைத்துக்கும் விலை நிர்ணயம்  செய்யப்பட வேண்டும். தற்போது நெல், கோதுமை, கரும்பு,பால் போன்றவற்றிற்கு மட்டும் தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.   எடுத்துக்காட்டாக பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.18d ரூ.20க்கு கொள்முதல் செய்து நகரங்களில் ரூ.26/dக்கு விற்கப்படுகிறது. அதாவது பாலின் விற்பனை விலை கொள்முதல் விலையை விட 30 சதவிகிதம்  மட்டுமே அதிகம். ஆனால், தக்காளி ரூ.3 க்கு கொள்முதல் செய்யப்பட்டு(ஒட்டன்சத்திரம்  சந்தை d 7.9.2012) சென்னையில் (8.9.2012) ரூ. 20க்கு (567% அதிக ம்) விற்கப்படுகிறது; ரூ.4 க்கு (பொள்ளாச்சி d 6.9.2012)  கொள்முதல் செய்யப்பட்ட தேங்காய்  சென்னையில் (7.9.2012) ரூ.15/dக்கு (275% அதிகம் ) விற்கப்படுகிறது. விலை நிர்ணயம் செய்யப்பட்டால் தக்காளியை ரூ.10/dக்கு வாங்கி  ரூ.13/dக்கு விற்பனை செய்ய வழிபிறக்கும். விவசாயிக்கு ரூ.7 அதிகம் கிடைப்பதோடு, நுகர்வோருக்கு ரூ.7மீதமாகும்.  என்ன சொல்கிறீர்கள்? 

  2. வறட்சி, மழை, புயல் என இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட அனைத்துப் பயிர்களுக்கு ஒவ்வொரு விவசாயி வாரியாகப் புதிய காப்பீட்டுத் திட்டம்.  தற்போதிருக்கும்  காப்பீட்டுத் திட்டத்தில் சில பயிர்களுக்கு மட்டும் ஒன்றியங்கள்  அளவில், மாதிரி அளவெடுத்து இழப்பீடு நிர்ணயிக்கப்படுகிறது. இதை மாற்றுங்கள்.

  3. இலவச மின்சாரம், உரமானியம், இதர மானியங்கள் அனைத்தையும் சேர்த்து  ஏக்கர் ஒன்றிற்கு கணக்கிட்டு  மாதந்தோறும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தொகை  செலுத்தி விடவேண்டும். இத்தொகையிலிருந்து அவர் மின்சாரக் கட்டணத்தைக் கட்டுவதால் மின்சாரத்தையும் சிக்கனமாக பயன்படுத்துவார்.  

  4. 100 நாள் வேலை வாய்ப்புறுதித் திட்டத்தினால் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காத நிலை. இதைச் சமாளிக்க, விவசாயத் தொழிலாளர் வாழ்வுறுதித் திட்டம்  என்ற பெயரில் இதே தொகையை மாதந்தோறும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு கொடுப்பது போல் விவசாயத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில்  செலுத்திவிடலாம்.  இதையும்   பெற்றுக் கொண்டு அவர்கள் பிற விவசாய வேலைகளுக்குச் செல்வார்கள்.   அல்லது விவசாய வேலைகளுக்கு  பஞ்சாயத்து அலுவலகம்  மூலம்  ஆட்களை அனுப்பிப் பாதிப் பணத்தை விவசாயிகளும், பாதிப்பணத்தை அரசும்  வழங்கலாம்.

  5. சொட்டுநீர், தெளிப்பு நீர் போன்ற பாசனத்திட்டங்களை அனைத்துப் பயிர்களுக்கு கட்டாயமாக  அரசே படிப்படியாக நிறைவேற்றவேண்டும். இதனால் உற்பத்தி இரட்டிப்பாகும்.  இது போன்ற முறைகளைப் பயன்படுத்தி இஸ்ரேலில் நம்மை விட 20 மடங்கு அதிக உற்பத்தி செய்கிறார்கள்.

  6. மாடு வாங்க மானியம் போன்றவை தருவதற்குப் பதிலாக, பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.20லிருந்து, (கர்நாடகாவில் தற்போது ஒரு லிட்டருக்கு ரூ.3/dமானியமாகக் கொடுப்பது போல்) ரூ. 10 மானியமாகக் கொடுத்து  ரூ. 30 ஆக உயர்த்தினால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்.  ஆனால் இதனால்  இயற்கை உரம், சாண எரிவாயு, அதன் மூலம் மின்சார தயாரிப்பு, மாநகர நெருக்கடி குறைதல் என பல பயன்கள் ஏற்பட்டு அரசுக்கு ரூ.2,000/d கோடிக்கு மேல் மீதமுமாகும்; வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதோடு வாழ வழியில்லாமல் மாநகரத்திற்கு வந்தவர்கள்  ஊருக்கே திரும்பச் செல்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.

  7. கரும்பு விலையைக் கூட்டி கூடுதலாக வரும் கரும்பை வைத்து எத்தனால் உற்பத்தி செய்யுங்கள். எத்தனாலின் உற்பத்திச் செலவு லிட்டருக்கு 27 ரூ.  அதனை தற்போது  திட்டமிடப்பட்டுள்ளபடி   பெட்ரோலில் 10% கலந்து விற்பனை செய்தால்,  இன்றைய விலைவாசியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4.60 ரூ குறையும். விவசாயிக்கும் லாபம்; நுகர்வோருக்கும் லாபம்!

  8. வெளிநாட்டு மதுவை முற்றிலும் நிறுத்தி விட்டுக் கள்ளுக் கடைகளைத் திறந்து வைத்து கிராமப் பொருளாதார மேம்பாடு அடையும். பின் கள்ளையும்  ஸ்டாப்...!

  9. திருச்சிராப்பள்ளியைத் தமிழ்நாட்டின் தலைநகரமாக மாற்றினால் விவசாயத் தொழிலிலிருந்து சென்னைக்கு குடிபெயர்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைவதோடு விவசாயிகள் அனைவரும் அதிகார மையத்திற்கு அருகே இருப்பார்கள்.

அக்டோபர், 2012.

logo
Andhimazhai
www.andhimazhai.com