புயலிலே ஒரு தோணி -- ப.சிங்காரம் எழுதிய இந்த நாவல் மிக சுவாரஸ்யமான கதையாக எனக்குத் தோன்றுகிறது. இது போன்ற சம்பவங்களை உள்ளடக்கிய நாவல் இதுவரையிலும் தமிழில் வெளிவரவில்லை என்றே நினைக்கிறேன். இந்தக் கதையை பெரிய ஹீரோக்களை வைத்து பெரிய பட்ஜெட் படமாகத்தான் செய்ய முடியும். ஆனால் நிச்சயம் ஜெயிக்கும்னு நம்புறேன். அந்த அளவுக்கு மக்கள் மனம் சார்ந்த கதை இது.
புத்தகங்களின் கதையாக இருந்தாலும் அது முழுக்க, முழுக்க நம்முடைய தமிழ் கலாச்சாரம் சார்ந்த கதையாக இருக்க வேண்டும். அவைகளை எடுப்பதையே நான் விரும்புகிறேன். அதோடு சினிமாவுக்கான விஷுவல் ட்ரீட்டை கொடுப்பது போன்ற கதைகளைத் தேடிப் பிடிக்க வேண்டும். அது எல்லார் கதைகளிலும் இருக்கும்னு சொல்ல முடியாது.
இப்போ நான் சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ நாவலை ‘விசாரணை’ என்ற பெயரில் படமாக்கியிருக்கிறேன். அந்த நாவல் முழுவதையும் நான் படமாக்கலை. எனக்குத் தேவையான சில பகுதிகளை மட்டுமே எடுத்திருக்கிறேன். விஷுவல் ட்ரீட்மெண்ட்டுல அந்தக் கதையை வேற மாதிரி கொண்டு சென்றிருக்கிறேன். ஆனால் அடித்தளம் அந்தப் புத்தகம்தான்..!
மனதை வருடும் எந்தக் கதைப் புத்தகமாக இருந்தாலும் அதை நிச்சயம் படமாக்கலாம்.. அதற்கான சூழல் தமிழ்ச் சினிமாவில் இப்போதும் நிறையவே இருக்கிறது.
ஜனவரி, 2016.