பொறியியல்: முந்நூறு கல்லூரிகள் நிலைக்கும்!

கே.கருணாநிதி
கே.கருணாநிதி
Published on

இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பின்னர் உலகம் முழுக்க கணினிமயமானது. அதனால் ஐடி துறைக்கு ஏராளமான ஆட்கள் தேவைப்பட்டார்கள். தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் விற்பனை ஆயின. இதற்கான சர்வீஸுக்கும் சப்போர்ட்டுக்கும் ஆட்கள் தேவைப்பட்டார்கள். இதற்கான மனிதவளத்தை இந்தியாதான் அளித்தது. காரணம் ஆங்கிலமொழி பேசும் திறனும் தொழில்நுட்பத் தேர்ச்சியும். இந்த தேவையை உலகின் எந்த நாடுமே முன்கூட்டியே யூகித்திருக்கவில்லை. இது இயல்பாகவே இந்தியாவுக்கு அமைந்தது. ஜப்பான், சீனா போன்ற நாடுகளில்  தொழில்நுட்பத்திறன் இருந்தாலும் ஆங்கிலம் பேசும் திறன் கிடையாது. எனவே நாம் இதில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்த முடிந்தது. இதில் இன்னும் முப்பது ஆண்டுகளுக்கு நம் நாடு முக்கிய பங்காற்றும் என்று நாஸ்காம் கூறுகிறது. இந்த தேவையை நிறைவேற்ற உருவானவைதான் தமிழ்நாட்டில் இவ்வளவு அதிகமான பொறியியல் கல்லூரிகளும் அதாவது 554 கல்லூரிகள். ஒருவர் பெட்டிக்கடை போட்டு அதிகம் சம்பாதிப்பதுபோல் தெரிந்தால் இன்னொருவரும் பக்கத்திலேயே பெட்டிக்கடை வைப்பார். இதுபோன்ற லாபநோக்கில் ஆரம்பிக்கப்பட்டவை என இதில் 300 கல்லூரிகள் இருக்கலாம்.  ஐந்நூறுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் தேவையில்லை என்கிற வாதத்தை நாம் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். அதே சமயம் இவ்வளவு தூரம்  ஐடியில் நாம் முன்னேறி இருப்பதற்கு இதில் 300 கல்லூரிகளாவது காரணம் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பின்னர் உலகம் முழுக்க கணினிமயமானது. அதனால் ஐடி துறைக்கு ஏராளமான ஆட்கள் தேவைப்பட்டார்கள். தொழில்நுட்பம்  நம் மாநிலத்தைத் தாங்கிப்பிடித்திருப்பது இந்த கல்லூரிகள் உருவாக்கித்தந்த வேலைவாய்ப்புகள்தான். இன்று கேரளத்துக்கு அடுத்தபடியாக வெளிநாட்டுப்பணம் தமிழ்நாட்டுக்கு கிடைப்பதற்குக் காரணமும் இதுதான்.

தரமற்ற மாணவர்கள் பொறியல் கல்லூரியிலிருந்து வெளியாவதாகச் சொல்லப்படுவது ஏன் என்றால் அதற்கான பதில் ஆழமானது. அது நம் பள்ளிக்கல்வியிலிருந்து ஆரம்பமாகிறது. இதைச் சொல்ல எனக்கு சங்கடமாகவே உள்ளது. மனப்பாடக்கல்வியையே நாம் கொடுத்துவருகிறோம்.  விளைவு என் கல்லூரியில் ப்ளஸ்டூவில் கணிதத்தில் 95 சதவீதம் Gkzu முதலாம் ஆண்டு மாணவன் தோல்வி அடைவதையும் பார்க்கிறேன். உலகம் முழுக்க பொருளாதார மந்தம்,இந்திய அளவில் தொழில்துறை பின்னடைவு, தமிழ்நாடு அளவில் பள்ளிக்கல்வியில் மனப்பாட முறைக்கு முக்கியத்துவம் அளித்தது ஆகிய மூன்றும் சேர்ந்துதான் தரமான பொறியாளர்கள் உருவாவது குறைவதற்குக் காரணம். என்ன படித்தாலும் வேலை கிடைக்காது என்றால் மாணவர்கள் கல்லூரியிலும் மந்தமாகிவிடுகிறார்கள்.

தக்கன பிழைக்கும் என்று சொல்வர். கடந்த ஆண்டே சுமார் 300 கல்லூரிகளில் ஒவ்வொரு பிரிவிலும் அட்மிஷன் இரட்டை இலக்கமாகாக் குறைந்து விட்டதைப் பார்த்தேன். இந்த ஆண்டு அது மேலும் குறையும். இன்னும் சில ஆண்டுகளில் அவையெல்லாம் தன்னால்  மூடப்பட்டுவிடும். இன்றைக்கு தமிழ்நாட்டில் சுமார் 300 பொறியியல் கல்லுரிகள் தேவை. அதில் எது தாக்குப் பிடிக்கும் தகுதியுடன் இருக்கிறதோ  அது நிற்கும்.  சந்தையே தீர்மானிக்கும்.

ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் வளர்ச்சி அடைவதன் மூலம் பல பொறியாளர்களுக்கு வேலை போய்விடும் என்று சொல்லப்படுவது தவறு. உண்மையில் இதன் மூலம்  அவர்களின் தேவை10% அதிகரிக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன்.  பொறியியல் கல்லூரிப் பாடத்திட்டத்தில் உலக அளவில் ஏற்படும் மாறுதல்களுக்கே ஏற்ப சீரமைப்பு எதுவும் நடந்துவிடவில்லை. இப்போது அதற்கான வேலைகள் நடக்கின்றன.

சில ஆண்டுகளாக மாணவர்கள் கணிப்பொறிப் பொறியியல் பிரிவை எடுக்க தயங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த ஆண்டு அந்த போக்கு மாறி கணிப்பொறிப் பொறியியலுக்கு நல்ல போட்டி இருப்பதை நான் பார்க்கிறேன்.

(கே.கருணாநிதி, தாளாளர், எஸ்கேபி பொறியியல் கல்லூரிநமது செய்தியாளரிடம் கூறியது)

ஜூலை, 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com