தமிழ்நாட்டில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஐ.டி, கணினி துறைகளில் பொறியியல், எம்சிஏ போன்ற படிப்புகளைப் படிக்கிறார்கள். கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் போது ப்ராஜக்ட் செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்காக சில மாதங்கள் விடுமுறையும் உண்டு. அந்நேரத்தில் நம் மாணவர்கள் ஐடி துறை சார்ந்த ப்ராஜக்ட்களை தாங்களே அதுசார்ந்த நிறுவனங்களில் செய்து அல்லது தாங்களே உருவாக்குவதற்குப் பதிலாக ரெடிமேடாக அவற்றைச் செய்து தரும் நிறுவனங்களில் இருந்து பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி கல்லூரியில் கொடுத்து கையெழுத்துப் பெற்றுக்கொண்டு போய்க் கொண்டே உள்ளார்கள். இப்படி ப்ராஜெக்ட் செய்து தரும் நிறுவனங்கள் புற்றீசல்கள் போல முளைத்துக் கொண்டே இருக்கின்றன.
மாணவர்களை தொழில்துறை நிறுவனங்களுக்குத் தங்களைத் தகுதியானவர்களாக ஆக்கிக் கொள்வதற்காகக் கொண்டுவரப்பட்டதே இந்த ப்ராஜெக்ட் சமர்ப்பிக்கும் முறை. ஆனால் நம் நாட்டில் எல்லாமே குறுக்கு வழியில் செல்வதுபோல் இதுவும் குறுக்கு வழியில் போய்க்கொண்டிருக்கிறது. இந்த முக்கியமான விஷயத்தில் நம் மாணவர்கள் கவனம் செலுத்தாமல் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உங்களுக்குத் தெரியுமா? கல்லூரியில் நண்பர்களின் புகைப்பட ஆல்பங்களைப் போடுவதற்காக மாணவர்கள் இரண்டுபேரால் உருவாக்கப்பட்டதுதான் இந்த பேஸ்புக்!
கல்லூரி நூலகத்தில் புத்தகங்களைத் தேடுவதற்கு வசதியாக ஆரம்பத்தில் உருவாக்கப் பட்டதுதான் இன்றைய கூகுள்!
தன் கல்லூரி நண்பர்களுக்கு படங்களைப் போட்டுக் காட்டுவதற்காக வீட்டுக்குத் தெரியாமல் கேரஜில் இருந்துகொண்டு ஒரு மாணவன் உருவாக்கியதுதான் யூட்யூப்! இதுபோன்ற புதுப்புது ஐடியாக்களை உருவாக்குவதற்கும் செயல்படுத்துவதற்கும் அற்புதமான வாய்ப்புதான் இந்த இறுதியாண்டு ப்ராஜெக்ட். இதில் கல்லூரிகளும், பேராசிரியர்களும் மாணவர்களும் கவனம் செலுத்த வேண்டாமா?
இந்தியாவில் உள்ள பல நடைமுறைச்சிக்கல்களுக்கு உதவக்கூடிய வழிகளைக் கண்டுபிடிக்கும் ப்ராஜெக்ட்களை மாணவர்கள் செய்வதற்கு பேராசிரியர்களும் ஆய்வு செய்து வழிக்காட்ட வேண்டும். மாணவர்களும் ஏதேனும் புதிய ஐடியா கிடைக்காவிட்டால் இணையதளத்தில் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். எந்த கல்லூரியிலும் எது இருக்கிறதோ இல்லையோ இந்த இறுதியாண்டு பிராஜெக்ட் சரியாக செய்யப்படுகிறதா என்று அரசும் கண்காணிப்பு அமைப்புகளும் உறுதிப் படுத்தவேண்டும் என்று நான் கருதுகிறேன்.
வேலைக்குப் போகும்போது நேர்முகத் தேர்வில் இறுதி ஆண்டு பிராஜெக்ட்டில் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதற்கு தனி கவனம் செலுத்தப்படும். மாணவர்கள் ஒரு மென்பொருள் செய்யும் நிறுவனங்களில் என்னென்ன செய்கிறார்களோ அதுபோன்ற எல்லா ஸ்டெப்களையும் தாங்களே செய்து பழகிக்கொள்வது சரியானதாகும். Usecase, User interface, Database, Design implementation. Software testing- என்று எல்லாவற்றையும் செய்துபார்ப்பதுடன் அதற்கான அழகான ப்ராஜக்ட் ரிப்போர்ட் தயார் செய்து அதை சரியாக பவர் பாயிண்ட் பிரசெண்டேஷனும் செய்யவேண்டும்.
நேற்று தாம்பரத்தில் இருந்து மாம்பலத்துக்கு ரயிலில் வந்துகொண்டிருந்தேன். ஏன் இப்படி வரிசையில் நின்று டிக்க்கெட் வாங்கவேண்டும்? என்னுடைய மொபைலில் இருந்தே இதற்கான கட்டணத்தை செலுத்தும் வசதி இருந்தால் எப்படி இருக்கும் என்று என்னருகே இருந்த மாணவி ஒருவர் கேட்டார். நல்ல ஐடியாதானே. இதையே ஏன் பிராஜெக்டாக யோசித்து ஒரு ஆரம்ப கட்ட மாடலைச் செய்துவிடக் கூடாது?
21 ஆண்டுகள் தொடர்ந்து படித்துவிட்டு மாதம் 5000 ரூபாய் சம்பளத்துக்கு நம் இளைஞர்கள் அலைந்து கொண்டிருக்க்கிறார்கள். கிராமத்தில் ஒரு வயதான பெண்மணி கூட வயல்வேலை செய்து 100 ரூபாய் சம்பாதித்துவிடுவார். நம் இளைஞர்கள் அதையும் செய்வதில்லை. நகரத்துக்கு வந்தால் முதல் இரண்டு ஆண்டுகள் அவர்களால் எந்த வேலையையையும் தேடிக்கொள்ளவும் முடியவில்லை. 21-26 வயதுக்கு உட்பட்ட நம் நாட்டு இளைஞர்கள் பெரும்பாலும் வேலை இல்லாமல் உள்ள்ளனர். இதற்குக் காரணம் அவர்கள் பயிற்சி இல்லாமல் கல்லூரியை விட்டு வெளியே வருவதுதான்.
சர்வதேச நிறுவனங்கள் இன்றைக்கு நம் நாட்டில் வந்துவிட்டன. அவை சர்வதேச தரத்துடன் வேலைக்கு ஆட்களை எதிர்பார்க்கின்றன. ஆனால் அதற்கு மாணவர்கள் தயாராக இருக்கிறார்களா?
புதிய ஐடியாக்களுடன் ஆரம்பிக்கப்படும் தொழில்களுக்கு (start-ups) உதவ TIE, EDI- போன்ற நிறுவனங்கள் உள்ளன. 5-50 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நாஸ்காமில் 10,000 start-ups களை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர்.
சிஐஐயிலும் இதுபோன்ற திட்டங்கள் உள்ளன.
எங்கள் பர்ட்ஸ்ட்ப்ளானெட் டாட்இன்(www.firstplanet.in) சார்பில் இந்தியாவின் பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 15,000 பேருக்கு இலவசமாக CODE READY ஐடி பயிற்சிகள் அளித்துள்ளோம். அவர்களிடம் செய்த சர்வேயில் சுமார் 47% பேர் இறுதி ஆண்டில் இப்படி ரெடிமேட் ப்ராஜக்ட்களை சமர்ப்பித்தவர்கள் என்றே அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்தது. என்ன செய்ய?
தகவல் தொடர்புத்திறனை வளர்க்கும் கோர்ஸ்கள், இ-லேர்னிங் கோர்ஸ்கள் என்று கல்லூரியில் படிக்கும்போதே மாணவர்கள் எதிர்காலத்துக்கும் தயாராக வேண்டும். அதுதான் அவர்களுக்கு தங்கள் முதல் வேலையைத் தேடிக்கொள்ள உதவியாக இருக்கும். அதற்கான விஷயங்களை www.firstplanet.in தளத்தில் இலவசமாகக் கொடுத்திருக்கிறோம்.
இந்தியாவில் சுமார் 50 கோடிபேரை 2022-ல் ஏதோ ஒருவிதத்தில் வேலைத் திறன் படைத்தவர்களாக மாற்றவேண்டும் என்று தேசிய திறன் வளர்ச்சி கொள்கை கூறுகிறது. ஏனெனில் இந்தியாவின் பலமே வேறு எந்த நாடுகளையும் விட அதிகமான இளைஞர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பதுதான்.
தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் கணினி சார்ந்த கல்வி கற்பவரா நீங்கள்? உங்கள் இறுதியாண்டு ப்ராஜெக்டை முடித்து www.firstplanet.in - க்கு அனுப்புங்கள். சிறந்த ப்ராஜெட்டுகளுக்கு பரிசு காத்திருக்கிறது! அத்துடன் உங்கள் ப்ராஜெக்டை வைத்து தொழில் தொடங்கவும் நாங்களே நிதியுதவி செய்யவும் தயார்!
ஒவ்வொரு இளைஞனுக்கும் முதல் வேலை என்பது மிக முக்கியம். உங்கள் முதல்வேலையை அடைவது எப்படி என்ற தலைப்பில் ப்ளாக் எழுதி அப்லோட் செய்து அதன் லிங்க் அனுப்புங்கள். அதிகம் வாசிக்கப் படும் ப்ளாக் பதிவுகளுக்கு ஐபேட், ஸ்மார்ட் போன் ஆகிய பரிசுகள் காத்திருக்கின்றன. இந்த தலைப்பு மட்டுமல்ல; உங்கள் முதல் ஐடி வேலையை எப்படித் தேடிக்கொண்டீர்கள் அல்லது எப்படி நிராகரிக்கப் பட்டீர்கள்? இது பற்றிய ஒரு சுவாரசியமான அனுபவம் உங்களிடம் உள்ளதா/ அதையும் ப்ளாக்கில் பதிவேற்றி www.firstplanet.in- க்கு அனுப்பி வையுங்கள்.. பரிசுகள் நிச்சயம்!
நவம்பர், 2013