முப்பது வயதாகும் நேரு பத்து வருடங்களாக ‘ராக சங்கமம்’ என்கிற இசைக் குழுவை நடத்தி வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடகராக பங்கு பெற்று வருகிறார். திரைப்படத்திலும் பாடியிருக்கிறார். இசைக் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் தங்க பதக்கம் வென்றவர். இவர் தெரிவு செய்யும் சிறந்த பாடல்கள் இங்கே:
அம்மா என்றழைக்காத- கே.ஜே. யேசுதாஸ் (மன்னன்)
பூங்காற்று புதிரானது- கே.ஜே. யேசுதாஸ் (மூன்றாம் பிறை)
மாலைப் பொழுதின் மயக்கத்திலே- பி.சுசீலா (பாக்கிய லக்ஷ்மி
பாரதி கண்ணம்மா- எஸ்.பி. பாலசுப்ரமணியன், வாணி ஜெயராம் (நினைத்தாலே இனிக்கும்)
இலக்கணம் மாறுதோ, -எஸ்.பி. பாலசுப்ரமணியன், வாணி ஜெயராம் (நிழல் நிஜமாகிறது )
கண்ணம்மா- இளையராஜா, எஸ்.ஜானகி (வண்ண வண்ண பூக்கள்)
அழகு நிலவு- சித்ரா (பவித்ரா)
காற்றின் மொழி- பி.பலராம் (மொழி)
ஆழியிலே முக்குளித்த- ஹரிசரண் (தாம் தூம்)
நெஞ்சுக்குள்ள- சக்திஸ்ரீகோபாலன் (கடல் )
செங்காடே- மது பாலகிருஷ்ணன் (பரதேசி )
ஒண்ணும் புரியல- டி. இமான் (கும்கி )
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை- வினீத் ஸ்ரீனிவாசன், ரஞ்சித் (அங்காடித் தெரு )
பாட்டு சொல்லி- சாதனா சர்கம் (அழகி )
உன்னைக் காணாது- கமல்ஹாசன், சங்கர் மகாதேவன் (விஸ்வரூபம் )
பருவமே- எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியன் (நெஞ்சத்தை கிள்ளாதே )
அழகே அழகே- கே.ஜே.யேசுதாஸ் (ராஜ பார்வை )
பூக்கள் பூக்கும் தருணம்- ஹரிணி, ரூப்குமார் ரதோர், ஜிவி ப்ரகாஷ், ஆண்ட்ரியா (மதராசபட்டணம் )
ஏப்ரல், 2013.