தங்கம் வெல்லும் தமிழ்ப் பெண்

தங்கம் வெல்லும் தமிழ்ப் பெண்
Published on

சென்னையில் பிறந்து வளர்ந்த 19 வயது அனகா அலங்காமணி,  தனது 15 வயதிலேயே ஆசிய அளவிலான சர்வதேச ஜூனியர்சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தவர். அந்திமழைக்காக  பிரத்தியேகமாக சந்தித்தோம் அவரை. 

எப்போது ஸ்குவாஷ் ராக்கெட்டை கையில் ஏந்தினீர்கள்?

ஒன்பது வயதில் ஸ்குவாஷ் விளையாட ஆரம்பித்தேன். ஆனால் ஆறு வயதில் டென்னிஸ் எனக்கு அறிமுகமானது. மூன்று ஆண்டுகள் டென்னிஸ், பேட்மிட்டன் ஆகிய விளையாட்டுகளில் நல்ல பயிற்சி  எடுத்துக் கொண்டேன்.  ஸ்குவாஷில் நான் திசை திரும்புவதற்கு எனதுபாட்டிதான் முழுமுதல் காரணம். அவர்தான் ஸ்குவாஷ் பெஸ்ட் சாய்ஸ்! என்று அப்பாவுக்கு உத்தரவு போட்டார். அதன்பிறகே அப்பா  என்னை சென்னை எழும்பூரில் உள்ளஇந்தியன் ஸ்குவாஷ் அசோசியே௸ன் பயிற்சி மையத்தில் சேர்த்தார். அங்கே தான் ஸ்குவாஷ் பயிற்சி எடுத்துக் கொண்டேன்

ஸ்குவாஷ் உடனடியாக உங்களுக்கு பிடித்துவிட்டதா?

இந்த விளையாட்டின் அடிப்படை இயல்பே ஜெட்வேகத்துடன் செயல்படுவதுதான்! ஸ்குவாஷ்    ஒரு     குயிக் கேம்! இந்த விளையாட்டில் பிளேயர் அடிக்கும் பந்தும் சுவற்றில் மோதி வேகமாகப் பறந்து வரும்! நாமும் வேகமாகப் பாய்ந்து பந்தைஅடிக்க வேண்டும். உடல் எத்தனை வேகமாக செயல்படுகிறதோ அத்தனை வேகமாக மூளையும்செயல்பட்டு முடிவெடுக்கவேண்டும். கால்கள், கைகள், மூளை இந்த மூன்று உறுப்புகளும்ஒரே புள்ளியில் ஒருங்கிணைந்து ஜெட் வேகத்தில்  செயல்பட்டாக வேண்டும். உங்கள் எதிராளி உங்கள் முதுக்கு பின்னே இருந்து பந்தை அடிப்பார்.அவர் எங்கே அடிக்கிறார் என்பதை நீங்கள் பார்க்கமுடியாது.

எங்கிருந்து பந்துவந்தாலும் நீங்கள்  திருப்பி அடிக்க தயாராக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட த்ரில் வேறு எந்த  மட்டைப் பந்து விளையாட்டுகளிலும் இல்லை!

முதல் பெரிய வெற்றி ஞாபகம் இருக்கிறதா? இதுவரை எத்தனை டைட்டில்கள்வென்றிருக்கிறீர்கள்?

கண்டிப்பாக! இந்திய தேசிய அளவிலான ஜூனியர் சாம்பியன் பட்டத்தை வென்றபோது பெருமையாக உணர்ந்தேன். ஆனால் அதை தலைக்கு   ஏற்றிக்கொள்ள வில்லை. இதுவரை பத்துக்கும் அதிகமான  டைட்டில்களை வென்றிருக்கிறேன்.

அவற்றில் 15 வயதுக்குள் பெற்ற விஸ்பா ரேங்க்  பற்றிச் சொல்லுங்கள். இந்த வெற்றியின் பின்னனிஎன்ன?

2009-ல் ஆசிய அளவில் 15 வயதுக்குஉட்பட்ட வீரர்  வீராங்கனைகளுக்கு இடையிலான போட்டியில்  கேர்ள்ஸ் அண்டர் 15’ என்றஆசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றேன். இது எனது ஜூனியர்  கேரியரில் மறக்க முடியாதவெற்றி. என்னை அடுத்த கட்டத்துக்கு தயார் படுத்தும் வெற்றி என்று கூட சொல்லலாம்! கடுமையான பயிற்சிதான் முக்கிய காரணம். ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் பயிற்சி.   எனது பயிற்சியாளர்கள் மேஜர் மணியம், சைரஸ் பான்சா இருவருக்கும் நன்றிசொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

படிப்பு, விளையாட்டு இரண்டையும் பேலன்ஸ் செய்ய முடிகிறதா?

எஸ்.எஸ்.என் காலேஜ் ஆஃப் என்ஜினியரிங்கில் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாமாண்டு மாணவி நான். ஸ்குவாஷ்போட்டிகள் நெருங்கும் போது பயிற்சிகள் கடுமையாக இருக்கும். அந்த நேரத்திலும் போட்டிகளுக்கு செல்லும் போதும் லீவ் எடுக்க வேண்டி வரும். லீவ் எடுக்கும்நாட்களில் விடுபட்டுப்போன பாடங்களை ‘ஸ்பெஷ௸ல் வகுப்புகள்’ ஏற்பாடு செய்து சொல்லி கொடுத்து விடுவார்கள். 

அந்தவகையில் கல்லூரி என் வளர்ச்சியில் எடுத்துக்கொள்ளும் பங்கை நினைத்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். அங்கே எனக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் உடனே அட்மி௸ஷன் கிடைத்தது! எஸ்.எஸ்.என்  கல்லூரி மாணவி என்பதில் பெருமை.

எதிர்கால லட்சியம் என்ன ?

இப்போதைக்கு ஸ்குவாஷும், எனதுபடிப்பும் முக்கியமானவை இரண்டிலுமே சாதிக்க வேண்டும். இந்தியாவை ஸ்குவாஷில் உலகமேதிரும்பிப்பார்க்கும் காலம்  மிக அருகில் இருக்கிறது!  இதை ஒலிம்பிக்கில் சேர்ப்பது பற்றி அடுத்த ஆண்டுஜனவரிக்குள் முடிவு  எடுத்து விடுவார்கள். இதற்கான முயற்சியில் உலக ஸ்குவாஷ்சங்கத்தின் தலைவர் என்.ராமச்சந்திரன் வேகமாக முயற்சிகளை எடுத்து வருகிறார். இவர்ஒரு

தமிழர் என்பதில் நாம் பெருமையடைய வேண்டும்!  ஒலிம்பிக்கில் சேர்த்த பிறகு பாருங்கள் விளையாட்டை..! கட்டாயமாக ஸ்குவாஷ் மூலம் இந்தியாவுக்கு தங்கத்தை கொண்டு வந்துசேர்ப்போம்!

சென்னையின் இன்னொரு வீராங்கனை தீபிகாவுக்கு அர்ஜுனா விருது பற்றி?

ரொம்பவம் பெருமையாக இருக்கிறது!தீபிகா எனது சீனியர். எனது ரோல் மாடல். அவர் இன்னும் பல வெற்றிகளையும் விருதுகளையும்  பெற  வாழ்த்துகிறேன்.

உங்கள் சம வயது பெண்கள் சினிமா, நண்பர்கள் என்று சுற்றுவதைஇழக்கிறீர்களா?

நான் சிறுமியாக இருந்தபோது  கம்ப்யூட்டர் கேம்களுக்கு அடிமையாக இருந்தேன் என்றே சொல்ல வேண்டும். அதில் இருந்து என்னை விடுவிக்கவே

விளையாட்டில் என்னை   திசை திருப்பினார்கள்.   டி.வி., கேம்,  ஃபிரெண்ட்ஷிப் எல்லாமே தேவைதான்! ஆனால் அளவோடு இருக்கவேண்டும்! எனக்கும் தோழிகள் உண்டு. ஆனால் ஊர் சுற்றநேரமும் இல்லை. அதற்கு வீட்டில்  அனுமதியும் இல்லை. முதலில் முடிந்தவரை சாதனை. அப்புறம் பொழுதுபோக்கு பார்த்துக் கொள்ளலாம்!

உணவுக்கட்டுப்பாடுகள் உண்டா?

ஜங்க் ஃபுட் சாப்பிடுவதில்லை. அதற்காக அசைவ உணவை வெறுப்பவளும் அல்ல. போட்டி நேரங்களில் கண்டிப்பான உணவுக்கட்டுப்பாடுஉண்டு. உடல்

எடையைக் கூட்டாத  ப்ரூட் சாலட்  பிடித்தமான  உணவு!

புத்தகம் படிப்பதுண்டா?

கண்டிப்பாக! தமிழ்ப்புத்தகமேபடிப்பேன்என்றால்ஆச்சர்யப்படுவீர்கள்தானே!  எனதுஅம்மாசித்ராபாலாபிரபலநாவலாசிரியர். அவர்எழுதியபத்துக்கும் அதிகமானதமிழ்நாவல்கள்  தமிழ்வாசகர்கள்  மத்தியில்பிரபலமானவை! அவர்தான் எனக்கு எழுதப்படிக்க தமிழ் கற்றுத்தந்தார். நான்தமிழ்தெரிந்ததமிழ்ப்பெண் !  அப்பாமோகன்அலங்காமணிவருமானவரித்துறையில்முக்கியப்பொறுப்பில்  இருக்கிறார். நான்வீட்டுக்குஒரேசெல்லப்பெண் ! என்னோடுசண்டைபோடஒருகுட்டித்தம்பிஇருந்திருந்தால்  வாழ்க்கைஇன்னும்அழகாக  இருக்கும்!

(புன்னகைக்கிறார்).                                    

செப்டெம்பர், 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com