தமிழகத்தைப் பிறமொழி பேசுவோர் பல்வேறு காலகட்டங்களில் ஆட்சி செய்துள்ளனர். அவர்களுள் மராட்டியர்கள் சற்றொப்ப நூற்று எண்பது ஆண்டுகள்(1676 - 1855) தஞ்சையைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்துள்ளனர்.
தஞ்சையை ஆண்ட நாயக்கர்களுக்கும் மதுரையை ஆண்ட நாயக்கர்களுக்கும் இடையில் மகள்கொடை பெறுவதில் சண்டை ஏற்பட்டது. ஏகோசி என்னும் அரசனின் படையெடுப்பால் தஞ்சையில் மராட்டியர் ஆட்சி ஏற்பட்டது. மராட்டியர்கள் தமிழகத்தில் கலை,இலக்கியம், ஓவியம் எனப் பலதுறைகளில் பங்களிப்பு வழங்கியுள்ளனர். தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம் இவர்கள் வழங்கியதுதான். மராட்டியமொழியின் சுருக்கெழுத்தான மோடி எழுத்தில் அரச ஆவணங்களை மராட்டியர்கள் எழுதி-யுள்ளனர். மராட்டியர்-கள் ஆட்சி அதிகாரத்-தில் இருந்த-தால் அவர்களின் மொழிச்-சொற்கள் தமிழில் பல கலந்து இன்றும் வழக்கில் வழங்குகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.
1. அட்டவணை - பட்டியல்
2. அபாண்டம் - வீண்பழி
3. உக்கிராணம் - பொருள் கிடங்கு
4. காகிதம் - தாள்
5. காமாட்டி - மண்வெட்டுவோன்
6. கிச்சடி - காய்ச்சோறு
7. கில்லாடி - கொடியவன்
8. கெண்டி - குழைக்கலம்
9. கேசரி - செழும்பம்
10. கோவளம் - கடற்கரைமுனை
11. சாம்பார் - பருப்புக்குழம்பு
12. சாவடி - காவல் நிலையம்
13. சீட்டி (துணி) - அச்சுத்துணி
14. சீட்டி - சீழ்க்கை
15. சுதாரித்தல் - திட்டப்படுதல்
16. தலித் - தாழ்த்தப்பட்டவர்
17. பட்டாணி - உருளங்கடலை
18. (பால்)கோவா - திரட்டுப்பால்
19. பேட்டை - புறநகர்
20. இலாவணி - மாறுதிறப்பா
21. ஜம்பம் - வீண்செருக்கு
ஜனவரி, 2013.