வடசென்னை, வல்லூர், மேட்டூர் மற்றும் நெய்வேலி அனல்மின் நிலையங்கள் மற்றும் கல்பாக்கம் மூலமாக அக்டோபர் 2012க்குள் 2712.5 மெகாவாட் மின்சாரமும் மார்ச் 2013க்குள் 500 மெகாவாட்டும் கிடைக்க வேண்டும் என்பது திட்டம். ஆனால் வாய்ப்பே இல்லை என்பதுதான் சிரமத்துக்குக் காரணம். போர்க்-கால அடிப்படையில் இத்திட்டங்களை நிறைவேற்றினால் 3212.5 மெகாவாட் கிடைத்து பவர் கட்டுக்கு கட் கொடுத்துவிடலாம்.
தற்போது தென்மாநில கிரிட்டிலிருந்து மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது. வடமாநிலங்கள் மற்றும் தென்மாநிலங்களின் மின் கிரிட்களை உடனடியாக இணைக்க வேண்டும். இதனால், தேவைக்கேற்ப, தற்போதைய விலையை விடக் குறைந்த விலையில் தென்மாநிலங்களுக்கு
மின்சாரம் கிடைக்கும்.
கேரள அனல் மின்நிலையங்கள் மற்றும்
நீர்மின்-நிலையங்களுடன் மின் இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் தமிழகத்தில் காற்றாலை-கள் மூலம் கிடைக்கும் மிகு மின்சாரத்தைச்
சேமித்துப் பயன்படுத்தலாம்.
தலைமைச் செயலகம், மாவட்டஆட்சியர் அலு-வலகங்கள், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற்றிடும் அலகுகள் நிறுவும் அறிவிப்பை முறையாக செயல்படுத்துங்கள்.
குப்பைகள் மூலம் சென்னை மாநகராட்சியில் மட்டும் 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய-லாம்.
மூன்று கோடி மாடு, ஆடு, எருமைகள் உள்ள தமிழகத்தில் சாண எரிவாயு மூலம்
சமையல் எரிவாயுவும், மின்சாரமும் உற்பத்தி செய்யலாம். சத்-தான உரம், மீத்தேன் காற்றில் கலக்காதிருப்பது-இரண்டும் போனஸ்.
குற்றால அருவிகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதை யோசிக்கலாம்.
வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இரண்டு மின் இணைப்புகளைக் கொடுத்து மின்சார நெருக்கடி காலங்களில் ஓர் இணைப்பில் மட்டும் மின்சாரத்தை நிறுத்திடும் முறையை உருவாக்கிட விரைந்து முனையலாம்.
மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தற்போது ஏற்படும் 18 ரூபாய் இழப்பைக் குறைக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உறுதியாக எடுக்கலாம்.
தெரு விளக்குகளைச் சரியான நேரத்தில் எரிய மற்றும் அணையச் செய்யும் தானியங்கி ஸ்விட்ச்களைப் (ஈதண்டு tணி ஈச்தீண ண்தீடிtஞிடஞுண்) பொருத்தலாம்.
மத்திய அரசு அமுல்படுத்தும் பச்சத் லேம்ப் (சிஎப்-எல் பல்புகளைச் சாதாரண பல்பு விலைக்கு கொடுக்கும்) திட்டத்தைத் தீவிரமாக செயல்படுத்துதல்.
மின்வெட்டுக் காலங்களில் தொழிற்சாலைகளுக்கு ஜெனரேட்டர் பயன்பாட்டிற்கு மானிய விலையில் டீசல் வழங்கலாம்.
வீடுகள் மற்றும் சிறு நிறுவனங்களுக்குச் சூரிய ஒளி மூலம் மின்சாரம் கிடைக்கச் செய்யும் அலகுகளுக்கு குறைந்த வட்டியில் வங்கிகள் மூலம் நீண்ட காலக் கடன் வழங்க விரைவான நடவடிக்கை எடுக்கலாம்.
நவம்பர், 2012.