உலக கால்நடை மருத்துவர் தினம்!

உலக கால்நடை மருத்துவர் தினம்!
Published on

அனைத்து துறைகள் மற்றும் சங்கங்களைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்களின் பிரதிநிதிகள் அடங்கிய வழிகாட்டும் குழு திருச்சியில் மார்ச் 26 அன்று கூடியது. இக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில.

1.உலக கால்நடை மருத்துவர் தினத்தை ஏப்ரல் 30 அன்று வரலாறு காணாத அளவில் ஏற்காடு நகரில் மிகசிறப்பாகக் அனைத்து துறைகளைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்களை ஒருங்கிணைத்துக் கொண்டாடுவது என்று இந்த வழிகாட்டும் குழு தீர்மானிக்கிறது.

2. கிராமப்புறங்களில் உலவும் போலியான மருத்துவர்களின் தவறான அணுகுமுறையால் விவசாயிகள் இழப்புகளுக்கு உள்ளாகிறார்கள். இதை தடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்த அரசைக் கோருவது என தீர்மானிக்கப் படுகின்றது

3. விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களான வெறிநோய், எலிக்காய்ச்சல் போன்றவை குறித்த விழிப்புணர்வு, தடுப்புநடவடிக்கை ஆகியவற்றை அரசு மேலும் தீவிர மாக மேற்கொள்ளவேண்டும் என தீர்மானிக்கப்படுகிறது.

4.உள்நாட்டு கால்நடை இனங்களான காங்கேயம், உம்பளச்சேரி, போன்ற மாடு இனங்கள், ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை போன்ற  நாய் இனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என அரசை வலியுறுத்த தீர்மானிக்கப்படுகிறது.

ஏப்ரல், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com