ஊழலை ஒழிக்க அர்விந்த் கெஜ்ரிவால் கட்சியே ஆரம்பித்துள்ளார். தேர்தல் அரசியல் அவரைச் செரிக்கிறதா அவர் அரசியலைச் செரிக்கிறாரா என்பது போகப் போக்கத் தெரியும். இருப்பினும் பொதுவாக ஊழலை ஒழிக்க சில நிர்வாக யோசனைகள்:
குடியரசுத்தலைவர், பிரதமர், முதலமைச்சர், மேயர், நகராட்சித் தலைவர், ஊராட்சித்தலைவர் ஆகிய பதவிகளுக்கு ஒருவர் இரண்டு முறை அல்லது பத்தாண்டுகளுக்கு மேல் பதவிப் பொறுப்பில் இல்லாதிருக்குமாறு அரசியல் சட்டத்தை திருத்துதல்.
ஆங்கில அரசு இந்தியாவை ஆள்வதற்காக அவர்கள் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட நிர்வாக அமைப்பை நம் நாட்டிற்கேற்றாற் போல் மாற்றியமைத்தல். வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ஒரு மனு கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவா#த்துறை ஆணையர் அலுவலகம் வழியாக தலைமைச் செயலகம் செல்வதற்கு, ஒவ்வொரு அலுவலகத்திலும் படிப்படியாக மொத்தம் 25 பேர் வழியாகச் செல்கிறது. இதனால் தாமதமும், பணிச்சலிப்பும், அதிக ஊதிய இழப்பும், திறமைக்குறைவும் ஏற்படுகிறது. இதை மாற்றியமைத்தல்.
அரசுப் பணிகளில் ஐ.ஏ.எஸ்., ஐ,பி,எஸ்., குரூப்-1 போன்று நேரடியாகத் தேர்ந்தெடுக்காமல் எழுத்தர்/காவலர் எனத்தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மூன்றாண்டுகளுக்கொருமுறை தேர்வு வைத்துப் பதவியுயர்வு வழங்கி அவர்களுக்கே ஒரு நிலைக்கப்பால், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., வழங்கலாம்.
பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரிடம் சொத்துக் கணக்குகளைக் கேட்காமல் இருத்தல். (நாமே தேர்ந்தெடுத்து விட்டு நம்பாமல் இருக்கக் கூடாது. ஊழலில்லாத நாடுகள் என்று கூறப்படுபவைகள் எவற்றிலும் இதுபோன்ற நடைமுறைகள் இல்லை)
அரசு மற்றும் அரசு நிறுவனங்கள் மேற்கொள்ளும் பத்து இலட்சம் ரூபா# மதிப்புக்கு மேலான பணிகள் மற்றும் கொள்முதல்கள் தொடர்பான விலைப்புள்ளிகள் கோருதல் முதல் அனைத்து நடவடிக்கைகளையும் பொது அரங்குகளில் நடத்தி தொலைக்காட்சி மூலம் அவற்றை ஒளிபரப்புதல்.
சிவில் வழக்குகளில் ஊர்ப்பஞ்சாயத்து-களுக்கு அதிகாரம் வழங்கி அவர்க@ள அந்த எல்லைக்குள் முடித்துக் கொள்ளும் நடைமுறையை உருவாக்குதல்.
ஒவ்வொரு வழக்கையும் ஒவ்வொரு நீதிமன்றத்திலும் அதிகபட்சமாக ஆறு மாதங்களுக்குள் முடித்திடும் நிலையை உருவாக்குதல்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் வழங்கி ஆரம்ப சுகாதார நிலையம், ஆரம்பப்பள்ளிக் கூடங்கள், பொது விநியோகம் போன்றவற்றை இவற்றின் கட்டுப்பாட்டில் விடலாம்.
நில உடைமைப் பதிவேடுகள், நிலப் பரிவர்த்தனைகள், குடும்ப அட்டை-கள் ஒவ்வொருவருக்குமுள்ள
சொத்து-கள் போன்ற அனைத்தையும் கணினிமயமாக்குதல்.
அனைத்துக் குடும்பங்களுக்கும் வங்கிக் கணக்கு தொடங்கி, அனைத்து மானியங்களையும் பணமாக வங்கிகள் வழியாக மக்களுக்கு வழங்கி விடுதல்.
கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தையும் அரசே எடுத்துக் கொண்டு பள்ளி இறுதி-வரை இலவசக் கல்வி வழங்க-வேண்டும். கல்லூரிகளில் படிக்கத் தேவைப்படும் அனைவருக்கும் வட்டியில்லாக் கடன் வழங்குதல்.
அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வண்ணம் அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மொழிகளிலேயே அரசுப்பணி, நீதிமன்றப் பணி உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் நடைபெற வேண்டும்.
டிசம்பர், 2012.