அவருக்கு பிடிச்சதை செய்வார்! - இயக்குநர் பிரேம்குமார்

விஜய் சேதுபதி - திரிஷா, 96 திரைப்படம்
விஜய் சேதுபதி - திரிஷா, 96 திரைப்படம்
Published on

நான் முதன்முதல்ல வர்ணம் படத்தில ஒளிப்பதிவாளரா இருக்கும்போது அதில் பணிபுரிந்த ஆறுமுககுமார் (இப்ப வெளியான ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தோட இயக்குநர்) அதில் நடிக்க ஒருத்தரைக் கூட்டி வந்தார். அப்படி வந்து அறிமுகமானவர்தான் விஜய் சேதுபதி. அவரோட முதல் காட்சியில் ஒரு மூணு நிமிஷ வசனம் பேசணும்.  அதை ரொம்ப சிறப்பா பண்ணினார். நாங்க எல்லாம் போய் அவரைப் பாராட்டியது ஞாபகம் இருக்கிறது.

அதுக்கப்புறம் பசங்க படத்துல நான் ஒளிப்பதிவாளரா இருந்தபோது

சேதுபதிதான் நடிக்கிறதா இருந்தது. ஆனா அதுக்கு சிவப்பான பையன் இருந்தா நல்லா இருக்கும்னு

சொன்னதும் விஜய் சேதுபதி கூட்டிட்டு வந்த பையன்தான் விமல். அடுத்து நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்

படத்துக்கு நிறைய பேரை பாத்தோம். அந்த படத்தோட இயக்குநர் பாலாஜி தரணிதரன்கிட்ட சேதுபதி பொருத்தமா இருப்பார்னு சொல்லி ஒப்புக்கொள்ள வைத்தோம். ஒருவழியா அந்த கதாபாத்திரத்துல சேதுபதி நடித்தார்.

அடுத்து சுந்தரபாண்டியன் படத்துக்கு நான் ஒளிப்பதிவு பண்ணும்போது அந்த வில்லன் கதாபத்திரத்துக்கு பொருந்துவார்னு சொல்லி அவரைக் கூப்பிட்டோம். அடுத்து ரம்மி,  சங்குதேவன் இப்படி நாங்க தொடர்ந்து பல படங்களில் வேலை பார்த்ததில் எங்களுக்குள் நல்ல நட்பு உருவானது.

96 கதையை சென்னையில் வெள்ளம் வரும்போது இருபது நாள்ல எழுதிமுடிச்சேன். ஆனா அதுக்கப்புறம் ஒருவருஷம் திரைக்கதையில் கொஞ்சம் கொஞ்சமா சின்ன சின்ன மாற்றங்கள் வந்துட்டு இருந்தது. ராம் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி பொருந்துவார்னு நினைச்சேன். ஆனா அவர் இந்த பாத்திரம் பண்ணுவாரானு சந்தேகம் இருந்தது. அவரிடம் கதை

சொன்னதும் பண்றேன்னு சொல்லிட்டார். அந்த கதையை யாருகிட்டயாவது கொடுத்து இயக்கச்சொல்லலாம்னு

சேதுபதிக்கிட்ட சொன்னபோது இல்லை நீங்களே பண்ணுங்க.. அப்பதான் சரியா வரும். வேற யார்ட்டயாவது கொடுத்தா கெடுத்துடுவாங்கனு சொன்னார். அதனால நானே இயக்கலாம்னு முடிவு பண்ணேன்.

விஜய் சேதுபதியைப் பொறுத்தவரை அவர் இப்படித்தான்னு முடிவு பண்ணிட முடியாது. அவருக்கு வித்தியாசமான பாத்திரங்கள் செய்யப் பிடிக்கும். அவர் வில்லனா? ஹீரோவா? தாத்தாவா? திருநங்கையா? இப்படி எதைப் பத்தியும் யோசிக்க மாட்டார். இப்போ கூட சீதக்காதியில 70 வயசு கதாபாத்திரம் பண்றார். சேதுபதியைப் பொறுத்தவரை அவர் ஒரு நடிகர். அவருக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் பண்ணப் பிடிக்கும். ஒரு மாஸ் ஹீரோவா இருந்தாலும் ஆரஞ்சு மிட்டாய், சீதக்காதி மாதிரியான படங்கள்ல அவர் வித்தியாசமான ரோல் பண்ணிருக்கார். அவருக்கு நடிக்கப் பிடிக்கும். நிறைய பேர்  தோற்றத்தை மாற்றி அமைக்கிறதுதான்  மாறுதல் என்று நினைக்கிறாங்க. தாடி வைச்சு மீசை எடுத்துனு எத்தனையோ பண்றாங்க. ஆனா சேதுபதி அந்த கதாபாத்திரமாவே மாறுவார்.

சேதுபதிக்கு பயணங்களே பிடிக்காது. ஆனா 96 படத்துல அவரை ஒரு பயணப் புகைப்படக் கலைஞராகக் காட்டியிருப்போம். அதுக்காக அந்தமான், ராஜஸ்தான், ஹிமாச்சலபிரதேசம்னு இந்தியா முழுக்க 14 நாட்கள்ல சுத்திட்டோம். ஒரு நாள் கடல், மறுநாள் மலை, அடுத்த நாள் பாலைவனம்னு படுத்தி எடுத்திட்டோம். அவருக்கு மன உறுதி அதிகம். எதுவுமே முடியலைனு

சொல்லமாட்டார்.

அவர் ஒரு மென்மையான மனிதர். அவரை பூ மாதிரி பாத்துக்கணும். அவர் மனசு கஷ்டப்படுற மாதிரி ஆனாலும்கூட வெளில காட்டிக்க மாட்டார்.. எனக்கு அவர் ஒரு குடும்ப நண்பராவும் இருந்ததால நான் ஒரு இயக்குநரா அவரைக் கையாள எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தது. ஒரு இயக்குநரா மட்டும் இருக்கும்போது இது இப்படி வேணும்னு கேட்டு வாங்கலாம். நண்பரா இருக்கும்போது அது கொஞ்சம் கஷ்டம்தான். விவாதம், கருத்து மோதல்னு எல்லாமே வரக்கூடிய வாய்ப்புள்ள இடம் அது. அவர் பொதுவா படபடன்னு பேசுவார். ரொம்ப தன்னம்பிக்கை உள்ளவர். ஆனா 96 படத்துல அவரைத் தயக்கமுள்ள மனிதரா காட்டணும். அது கொஞ்சம் சிரமமான விஷயம். டப்பிங் வரும்போது அவர் அந்த நிலைக்கு தன்னை மாற்றிக்கொண்டு விட்டிருந்தார்.

அவர் ஒரு மென்மையான மனிதர். அவரை பூ மாதிரி பாத்துக்கணும். அவர் மனசு கஷ்டப்படுற மாதிரி ஆனாலும்கூட வெளில காட்டிக்க மாட்டார்.. எனக்கு அவர் ஒரு குடும்ப நண்பராவும் இருந்ததால நான் ஒரு இயக்குநரா அவரைக் கையாள எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தது. ஒரு இயக்குநரா மட்டும் இருக்கும்போது இது இப்படி வேணும்னு கேட்டு வாங்கலாம். நண்பரா இருக்கும்போது அது கொஞ்சம் கஷ்டம்தான். விவாதம், கருத்து மோதல்னு எல்லாமே வரக்கூடிய வாய்ப்புள்ள இடம் அது. அவர் பொதுவா படபடன்னு பேசுவார். ரொம்ப தன்னம்பிக்கை உள்ளவர். ஆனா 96 படத்துல அவரைத் தயக்கமுள்ள மனிதரா காட்டணும். அது கொஞ்சம் சிரமமான விஷயம். டப்பிங் வரும்போது அவர் அந்த நிலைக்கு தன்னை மாற்றிக்கொண்டு விட்டிருந்தார்.

அவர் வர்ணம் படத்தப்போ எப்படி இருந்தாரோ அதே மாதிரிதான் இப்பவரைக்கும் இருக்கார். போலியான மரியாதை காட்டுறது, நமக்கு நாளைக்கு வாய்ப்பு கிடைக்கும்னு வணக்கம் வைக்கிறதோ இல்லாம அவர் வருவார், நடிப்பார், அமைதியா ஒரு இடத்துல இருப்பார். ரொம்ப எளிமையாக இருப்பார். அவருக்கு பிடிச்சதை செய்வார். மனசை சந்தோஷமா வைச்சுக்குவார். இந்த காட்சியில் நல்லா நடிச்சேனானு கேட்கவே மாட்டார், நாங்களாவே போய்ச்சொன்னாலும் கண்டுக்க மாட்டார். எங்களுக்கே நாம் சரியாதானே பேசுறோம்னு ஒரு சந்தேகம் வந்துடும்.

பலவீனம்: அவரோட ஒரு சின்ன பலவீனம்னா அவர் தொடர்ந்து படங்களா பண்ணிட்டிருக்கார். ஓய்வே இல்லாம இவ்ளோ பண்றார்னா ஓய்வு எடுத்து பண்ணார்னா இன்னும் எவ்ளோ துடிப்பாக இருப்பார்னு நாங்க நினைப்போம். இப்படி ஓய்வில்லாம படம் பண்றது பலவீனம்னு சொல்ல முடியாது. ஆனா உடம்பை பாத்துக்க நேரம் ஒதுக்க முடியாம போகுது. ஆனா இப்ப கொஞ்சநாள்ல ஃபிட்னஸ்ல கவனம் செலுத்துறார்.

பலம்:  நிறைய சொல்லலாம். முக்கியமா அவர்

சினிமாவை அணுகும் முறை. இவரோட அணுகுமுறை யாருகிட்டயும் நான் பாத்ததில்லை. மாஸ்தான் பண்ணனும், காமெடிதான் பண்ணணும்னு இல்லாம எல்லாமே கலந்துகட்டி பண்றது அவரோட சிறப்பு அம்சம்.

நவம்பர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com