செய்திப் புகைப்படக் கலையின் தந்தை என்று போற்றப்படுபவர் ஹென்ரி கார்டியர் ப்ரெஸ்ஸன் (1908-2004). மஹாத்மா காந்தியை நேரில் சந்தித்து புகைப்படங்கள் எடுத்தவர். 1950ல் ப்ரெஸ்ஸன் புதுவையில் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்தில் தங்கி அரவிந்தரையும் அன்னையையும் பல புகைப்படங்கள் எடுத்தார். அன்னை இவரிடம் இருந்து நெகடிவ்களை விலைக்கு வாங்கி சுமார் முப்பது ஆல்பங்களை தயாரித்தாராம். அவற்றில் இப்போது எஞ்சி இருப்பது ஒன்றுதான். அந்த ஒரு ஆல்பம் தற்சமயம் அல்காஸி பௌன்டேஷன் ஃபார் ஆர்ட்ஸ் என்னும் அறக்கட்டளையிடம் உள்ளது.
இந்த அறக்கட்டளை மற்றும் அலையன்ஸ் பிரான்சே ஆகிய இரு அமைப்புக்களும் இணைந்து புதுடெல்லியில் இந்த அரிய புகைப்படங்களைக் கண்காட்சியாக வைத்திருக்கிறார்கள். அன்னைபக்தர்களுக்குதரிசனம்தருவது, ஸ்ரீஅரவிந்தர்தியானநிலையில்இருக்கும்படங்கள், பக்தர்களுடன்உரையாடுவது, அன்னைகுழந்தைகளுடன்அளவளாவுவது, பாட்மிண்டன்விளையாடுவது, ஸ்ரீஅரவிந்தரின்இறுதிக்கணங்கள், அரவிந்த ஆசிரமத்தின் அறைகள் தியான மண்டபம் போன்ற அரிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அக்டோபர், 2012.