ராஜா வீட்டுக் கன்னுக்குட்டிகள்..

ராஜா வீட்டுக் கன்னுக்குட்டிகள்..
Published on

யுவன் சங்கர் ராஜாவை அவரது 13 ஆவது வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் டி.சிவா.

“ராஜா சாரைப் பார்ப்பதற்காக வீட்டுக்குப்போயிருந்தேன். யுவனை நான் எப்போதும் மாஸ்டர் என்றுதான் அழைப்பேன். வெளியே இருந்து வீட்டுக்குள் நுழைந்த யுவனிடம், எங்கே போயிட்டு வர்றீங்க மாஸ்டர் என்று கேட்டேன். கிரிக்கெட் விளையாடிட்டு வரேன் என்ற யுவனிடம், ஸ்கூலுக்கு போகலியா என்று காஷுவலாகக் கேட்டேன். படிப்பு நமக்கு ஆகாதுன்னு சொல்லிச் சிரிக்கவும், இப்படி சும்மா இருக்கிறதுக்கு வேற ஏதாச்சும் பண்ணலாம்ல என்று சொன்னேன். அப்படின்னா ஒரு படம் கொடுங்க, மியூசிக் போடுறேன்னு யுவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ராஜா சார் வந்துட்டார். ஐயோ டாடின்னு சொல்லிட்டு யுவன் எஸ்கேப்.

என்ன சொல்றான் அவன்னு ராஜா சார் கேட்டார். எங்களுக்குள்ள நடந்த உரையாடலைச் சொன்னேன். அவனுக்கு ஒரு சான்ஸ் கொடேன், அவன் எப்படி இசையமைப்பான்னு எனக்குத் தெரியாது. ஆனால், அவனை அறிமுகப்படுத்திய பெருமை காலகாலத்துக்கும் உனக்கிருக்கும் என்றார் ராஜா சார். அவர் அவ்வளவு சீரியஸா சொன்னதும் அரவிந்தன் படத்தில் யுவனை இசையமைப்பாளரா அறிமுகம் செய்தேன்.

காலையில் ஸ்டுடியோ புக் பண்ணிக் கொடுத்தோம். ஒரே நாளில் இரண்டு பாடலை கம்போசிங் பண்ணி முடிச்சு கையில் கொடுத்த யுவனைப் பார்த்து மிரண்டு போயிட்டேன். கிட்டத்தட்ட ராஜா சார் வேகம்”  என்று மலரும் நினைவுளை வார்த்தைகளில் கொடுத்தார் சிவா. பவதாரிணியின் அறிமுகமும் இவரது படத்தில் தான். ராசய்யாவில்.

 “கார்த்திக் இசையமைப்பாளராக அறிமுகமானதும் என் படத்தில் தான். மாணிக்கம் படத்துக்காக ராஜா சாரைப்  கேட்டபோது, கார்த்திக்கை வச்சுக்கங்க.. பாடல் பதிவை ஆரம்பிங்க.. ரீரிகார்டிங் நான் பண்ணித்தரேன்னு ராஜா சார் சொல்லிட்டார். ஆக்சுவலா மாணிக்கத்துக்கு முன்னாடியே இன்னொரு படம் கமிட் பண்ணி இருந்தார் கார்த்திக்ராஜா. மாணிக்கம் முதல் படமா ரிலீஸானதால் அவரை அறிமுகப்படுத்திய பெருமையும் எனக்கே கிடைத்து விட்டது' என்றார் சிவா.

ஆகஸ்ட், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com