சிறு வயதில் இருந்து இக்கேள்வி துரத்திக்கொண்டே இருக்கிறது. உன் லட்சியம் என்ன? உன் கனவுகள் என்ன? என்று.. ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த கனவு, லட்சியம் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது அல்லது இருந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் புத்தனை போல பயணம் தான் இலக்கே என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறேன்...
உண்மையைச் சொல்வதென்றால் மனதுக்கு பிடித்த வேலையை செய்வதும் அந்த வேலையில் இறுதி கட்டத்தை எந்த ஒரு பிசிருமில்லமால் முடிப்பதும் மட்டுமே இலக்காகவும் இருந்திருக்கிறது. அது எழுதுவது போல, வாசிப்பது போல, பயணத்தை போல ஏன் காதலிப்பது போல கூட ஒரு நிறைவை கொடுத்திருக்கிறது..
தலைமுறைகள் மாற மாற கனவுகள் எதிர்பார்ப்புகளும் மாறிக்கொண்டே இருக்கிறது. இது தான் இறுதி எல்லை என்று எதையும் வகைப்படுத்த முடியாத ஒரு தலைமுறை இப்போது இருக்கிறது. அவர்களிடம் உனக்கு பிடித்தமான ஒன்றைச் சொல் எனக் கேட்டுப்பாருங்கள், எந்த ஒரு தெளிவுமற்ற ஒரு பதில் உங்கள் முன்னால் வந்து விழும். இதுதான் அவர்களில் வாழ்வியல் முறையாக இருக்கிறது. எதையும் உடனடியாக கற்றுக்கொள்வதும் அதை உடனடியாக செயல்படுத்துவதுமாக இன்றைய அவசர உலகத்தில் லட்சியம் கனவுகள் எல்லாம் பொருளற்றவை. ஆனால் அது உண்மையல்ல.. உங்கள் கனவுகளும் லட்சியங்களும் மட்டுமே உங்களை உயிர்ப்புடன் இருக்க வைக்கமுடியும். உங்களை இயங்கவைக்கமுடியும். இந்த உலகத்தில் நீங்கள் தனித்தே இயங்கலாம் ஆனால் நீங்கள் எதையாவது ஒன்றை பற்றிக்கொண்டே ஆகவே வேண்டும். அது உங்கள் லட்சியங்களாகவே இருக்கமுடியும். உயிர்ப்புடன் இயங்கவைக்க கனவுகளால் மட்டுமே சாத்தியம் எனக் கருதுகிறேன்.
அக்டோபர், 2022