நிழல்கள் நிஜமாவதில்லை

ஒருதலை ராகம்
ஒருதலை ராகம்
ஒருதலை ராகம்
Published on

பி.யூ.சி பெயிலாகித் தொலைத்துவிட்டு ஊரில் பார்க்கிறவனிடம் எல்லாம் ‘‘மெடிக்கல் ட்ரை பண்ணிகிட்டு இருக்கேன்...'' என கூசாமல் பொய் பேசித் திரிந்த காலம்.

எதிர்த்த வீட்டு ஈஸ்வரிதான் உசுப்பேத்தி விட்டாள். ‘‘ராஜா... ''ஒருதலை ராகம்'' வந்திருக்கு... பாத்துட்டியா? அதப் பார்த்தா உன்னப் பாக்குற மாதிரியே இருக்கு...'' என்று. அவள் அதில் எந்த கேரக்டரைப் பார்த்து அப்படிச் சொன்னாளோ அது அந்த ஈஸ்வரிக்கே வெளிச்சம். கோவை கீதாலயா தியேட்டரில் ஒரு வருடம் ஓடியது படம். எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று எனக்கே தெரியாது.

கதாநாயகனாக சங்கர்... வில்லனாக ரவீந்தர்.. டிரக்கன் மாங்க்காக சந்திரசேகர் என ஏகப்பட்டபேர் நடித்திருந்தாலும் நான் எனக்குள் ஆதர்ச நாயகனாக வரித்துக் கொண்டது ‘தலைவர்' ரவீந்தரைத்தான். எந்நேரமும் சிகரெட்டும் கையுமாக பார்க்கிற பெண்களை எல்லாம் கேலி செய்து கொண்டே கல்லூரியை வலம் வரும் ரவீந்தரைத்தான் பிடித்து போனது எனக்கு. புட்டுகிட்ட பி.யூ.சி.யைத் தட்டுத்தடுமாறி பாஸ் செய்தவனை தனக்கிருந்த நல்ல பெயரைக் கொண்டு பி.எஸ்.ஜி கல்லூரியில் பி.காம் சேர்த்து விட்டார் அப்பா. அந்த வேளையில் தலையின் உச்சத்தில் ஏறி நின்றிருந்தார் ‘தலைவர்'.

ஒரு தலை ராகத்தைப் போலவே கல்லூரிக்குள் தம்மடிப்பது... இங்கிலீஷில் அலப்பரை பண்ணும் பெண்களை வறுத்தெடுப்பது... சிகரெட் புகையை மூஞ்சியில் ஊதுவது... என என்னுள் சனியன் சடை பின்னியது.

போதாக்குறைக்கு ஒ.த.ராகத்தில் வரும் ‘திம்பு' கேரக்டர் பாணியில் முதல் செமிஸ்டரிலேயே பிட் அடித்துத் தொலைக்க ஒரு வருடம் செமஸ்டர் தேர்வெழுத தடை போட்டது கல்லூரி நிர்வாகம். அப்பாவைக் கல்லூரிக்குக் TmiU கொண்டு வரவேண்டும் என்கிற கட்டளை வேறு. அப்பாவோ ‘‘தங்கப்பதக்கம்'' ‘‘கௌரவம்'' சிவாஜிகளின் மொத்த உருவம். மகனே ஆனாலும் தப்பு செய்தால் முதலில் போட்டுத்தள்ளிவிட்டு பிற்பாடு மடியில் வைத்து ''டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்...'' பாடுகிற எஸ்.பி.சௌத்ரி ரகம். எனது சில்லறைத் தனங்களால் கூனிக் குறுகிப் போனார்.

ஒருதலை ராகம்
ஒருதலை ராகம்

இப்போது நினைத்துப் பார்க்கிறேன்... எது என்னை அப்படிப் பிடித்தாட்டியது? ஏனப்படி கிறுக்குப் பிடித்து சுற்றினேன்? அப்பாவுக்கு அவர் வாழும் காலத்தில் வலியைத் தவிர வேறென்ன

பரிசளித்தேன்? ஒன்று புரிகிறது. திரையில் வரும் கதாபாத்திரத்தையே நாமாகக் கற்பனை செய்து கொண்டதன் விளைவு அது. கதாநாயகன்

சங்கர் பாத்திரத்தை நமக்கானதாக கற்பித்துக் கொண்டிருந்தால் கண்ணியமான காதலனாக காதலித்துத் தொலைந்திருக்கலாம்... சந்திர

சேகர் கதாபாத்திரத்தை மனதிற்குள் வரித்திருந்தால் Sizxz தொலைந்திருக்கலாம்...

தேடிப் பிடித்தது ரவீந்தரின் ‘‘தலைவர்'' கேரக்ட்டரை ஆச்சே... அதுதான் என்னையும் ஒரு ஆட்டு ஆட்டியது... கல்லூரியையும் ஒரு ஆட்டு ஆட்டியது... யாருக்கும் தலை குனிந்திராத அப்பாவையும் ஒரு ஆட்டு ஆட்டியது.

நல்லவேளையாக நான் கல்லூரியில் கால்வைத்த வேளையில் நம்ம மணிவண்ணனின் ‘‘நூறாவது நாள்'' வெளிவந்திருக்கவில்லை... வந்திருந்தால்...இந்தக் கட்டுரையைக்கூட நான் வேலூரிலோ அல்லது புழல் சிறையிலோ உட்கார்ந்துதான் எழுதிக் கொண்டிருந்திருப்பேன்.

நிழல்கள் நிஜமாவதில்லை.

நவம்பர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com