நான் ஏன் டிக் டாக் செய்கிறேன்?

Published on

நான் லுலு தேவ ஜம்லா. கன்னியாகுமரி மாவட்டத்துல பிறந்து வளர்ந்து நாகர்கோயில்ல ஒரு கல்லூரியில ஆங்கில பேராசிரியரா வேலை பார்த்துட்டு, 2006ல வேலை தேடி இங்கிலாந்துக்கு போயிட்டு, அங்கயிருந்து 2007ல ஆஸ்திரேலிய நாட்டுல வந்து குடியுரிமை வாங்கி, இங்க அரசுப் பணியாளரா ஒரு நல்ல பதவியில இருக்கேன்.

என்னுடைய ஓய்வு நேரங்களில் நேரப்போக்கிற்காக ஃபேஸ்புக், யூட்யூப், டிக்டாக் போன்ற சமூக வலைத்தளங்கள உபயோகிப்பேன். அடிப்படையில் நான் ஒரு தீவிரபெண்ணியவாதியானதால ஃபேஸ்புக் பக்கங்கள்ள நான் எழுதுற கட்டுரைகளுக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. அப்படி நான் எழுதின சில கதைகளும் கட்டுரைகளும் புத்தகங்களாவும் வெளிவந்துருக்கு. இது என்னைக் குறித்த ஒரு சின்ன அறிமுகம். இனி நம்ம டிக்டாக் அனுபவங்களுக்கு உள்ள போவோமா?

நான் முதல்முதலா டிக்டாக் அப்டின்னு ஒரு செயலிய பத்தி கேள்விப்பட்டதே 2018 நவம்பர் மாசம் தான். அதுவும் ஃபேஸ்புக்ல வந்த சில டப்ஸ்மாஷ் வீடியோக்கள பார்த்து, ‘‘ஆகா இது நல்ல ஜாலியான டைம் பாஸா இருக்கும் போலயே. நாமளும் இறங்கித் தான் பார்ப்போமே'' அப்டீன்னு நினைச்சு தான் மொபைல்ல அந்த செயலிய தரவிறக்கம்பண்ணினேன். கொஞ்ச நாளுக்கு இருக்கிற இடம் தெரியாம தான் இருந்தேன்னு சொல்லலாம். அதாவது என்னோட உருவத்தைக்குறித்த கேலிப்பேச்சுகள், கமெண்டுகள் என் பார்வைக்கு வருவது வரை. ஏன்னா முதல்ல எல்லாம் எனக்கு ஃபில்ட்டர்ஸ் போட்டு மூஞ்சிய பளபளன்னு வெள்ளையா காட்டலாம் என்கிற விஷயம் தெரியாததால நான் பாட்டுக்கு இயல்பா என்னோட dark complexion லயே வீடியோஸ் போட்டுட்டு இருந்தேன்.

நான் முதல்லயே ஃபேஸ்புக்ல உருவக்கேலி செய்யிறவங்களை எல்லாம் சரியான விதத்துல பதிலடி கொடுத்து ஓட விடுறவ. ஸோ டிக்டாக்லயும் உருவக்கேலிக்கு எதிரா,  கோபமே படாம நிதானமா ஆனா நக்கலா பேசி வீடியோக்கள் போடத்தொடங்கினேன். அப்போ ஆட்டோமெட்டிக்கா ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை கூடத் தொடங்கிச்சி. அதோட நான் பெரும்பான்மையா ரொமான்டிக் பாடல்களுக்கு வீடியோ போட்டுட்டு இருந்ததால, ‘‘கிழவி உனக்கு இந்த வயசுல ரொமான்ஸ் கேக்குதா?'' டைப் கேள்விகள் எழாரம்பிச்சிது. சாதாரணமா எந்த நடுத்தர வயது (என் வயது 44) பெண்ணுக்கும் இந்தமாதிரி கேள்விகள் கடும் மன உளைச்சலை கொடுக்கும். ஆனா நான் ஃபேஸ்புக்லயே மறைகாதல், பெண்களின் காம உணர்வு, செக்ஸ் பத்தியெல்லாம் பதிவுகள் எழுதுறப்ப இந்த வகையான கேள்விகள எதிர்கொண்டு பதிலடியும் குடுத்து பழக்கம் இருந்ததால டிக்டாக்ல இந்த வகை எதிர்மறை விமர்சனங்கள கண்டுக்காம என் போக்குல தொடர்ந்து வீடியோக்கள் போட முடிஞ்சுது.

இதெல்லாம் போக டிக்டாக்ல நான் போடுற வீடியோக்கள against community guidelines அப்டீன்னு காரணம் காட்டி டிக்டாக் டீமே ரிமூவ் பண்ணுவாங்க. காரணம், நான் மேல சொன்ன என்னோட அந்த தைரியமும் தெனாவெட்டும், எவருக்கும் அடிபணியாத தன்மையும், கலாசார காவலர்கள காண்டாக்கி, என்னோட வீடியோக்கள ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து ரிப்போர்ட் அடிக்க வைக்கும். ஒருமுறை நான் வெளியிட்டிருந்த சமூக விழிப்புணர்வு வீடியோக்கள் எல்லாம் அப்டி ரிப்போர்ட் அடிக்கப்பட்டு ரிமூவ் ஆச்சு. அந்த நேரம் நான் டிக்டாக் நிர்வாகத்தோடயே அப்பீல் போட்டு போராடி என் வீடியோக்கள திரும்ப பெற வேண்டியது வந்தது.

உருவக்கேலி, வயசுக்கேலி ரெண்டுமே என்னை என் போக்கை எந்த விதத்துலயும்பாதிப்படைய செய்யலங்கவும் அடுத்தபடியா கலாசார காவலர்களாக தங்களை உருவகப்படுத்திக் கொள்ளும் பலரும் என் வாழ்க்கைமுறையைப் பத்தின எதிர்மறைவிமர்சனங்கள வைக்க தொடங்கினார்கள். அதாவது, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில் நான் சிறிதளவு மதுபானம் அருந்துவது வழக்கம். நான் அப்படி மது அருந்துவதை ரொம்ப இயல்பா ஓரிரு வீடியோக்களில் வெளியிட்டிருந்தேன். அதை வைத்து என்னுடைய குணத்தை character assassination செய்து பல கலாய் வீடியோக்கள் வெளிவர ஆரம்பித்தன. குடிகாரி, தேவடியா அப்டீங்கிற முத்திரைகள் குத்தப்பட்டன. நான் அவற்றையும் கண்டுக்காமல் கடந்தேன். அதுக்கப்புறம் தான் டிக்டாக்கில் என்னுடைய ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

என் உடையைப் பார்த்து ‘‘துப்பட்டா போடுங்கள் தோழி''யில தொடங்கின அடக்குமுறை பேச்சுக்கள் அப்புறம் டெய்லி நூத்துக்கணக்கான வீடியோக்கள் மூலமா ரொம்ப வக்கிரமான வார்த்தை வன்முறை என்மீது ஏவப்படும் ஒருநிலையை எட்டியது. நான் ஆபாச வீடியோக்கள் போட்டு தமிழ் பெண்களக் கெடுக்கிறேன்னும் தமிழ் கலாசாரத்தை சீரழிக்கிறேன்னும் என் மேல குற்றச்சாட்டு வச்சாங்க நம்ம கலாசார காவலர்கள். அதோட சேர்ந்து ஒரே சமயத்தில் 2000 முதல் 5000 ரிப்போர்ட்ஸ் என்னுடைய அக்கவுண்ட டிக்டாக்ல இருந்து ரிமூவ் பண்ணணும்னு கோரி டிக்டாக் நிர்வாகத்துக்கு போக ஆரம்பிச்சுது. ஆனா நான் ஆஸ்திரேலிய நாட்டுல இருந்து வீடியோக்கள் வெளியிடுறதால இந்திய நாட்டு டிக்டாக் (கலாசார) விதிகளால என்னை கட்டுப்படுத்த முடியாதுன்னு டிக்டாக் நிர்வாகம் என் அக்கவுண்டை ரிமூவ் பண்ணாம விட்டு வச்சுது.

அந்த சந்தர்ப்பத்துல நான் எவ்வாறு எதிர்வினை ஆற்றினேன் என்பதைக்குறித்து என்னுடைய 40,000  பின் தொடர்பவர்கள் உள்ள முகநூலில்  பதிவுகளாகவெளியிட்டிருந்தேன். அதில் சில பதிவுகளையே இதுல தரேன்:

பதிவு 1:-

‘‘ஆபாசமா உடையணிஞ்சி அதாவது முலைப்பிளவும் தொடையும் வெளிய காட்டி வீடியோபோடுறேன்னு டெய்லி நூத்துக்கணக்குல கல்ச்சர் காவல் டாக்ஸ் என்னைய tag பண்ணிசெருப்பு, வௌக்குமாறு காட்டி எல்லாம் டிக்டாக் போட்டான்...

அதுக்குஎந்த மாதிரி எதிர்வினையாற்றணும்னு நல்லா யோசிச்சி தான் ‘‘தமிழ் கலாசாரம்அடிமை கலாசாரம், அடக்குமுறை கலாசாரம்!'' அப்டீன்னு tagline வச்சி ஒட்டுமொத்த கலாசார காவலன்களையும் உசுப்பி உடுற மாதிரி பேசி வீடியோ போட ஆரம்பிச்சேன்.

அப்டி போட்ட வீடியோக்கள்ள எதுலயுமே ‘‘நான் ஆபாசமா தான் உடையணிவேன், உன்னால என்ன பண்ண முடியும்?'' அப்டீன்னு நேரடியா கேட்டு சேலஞ்ச் பண்ணல யாரையும். அதே சமயம் அத்தனை வீடியோவும் நல்லா க்ளீவேஜ் காமிச்சும் தொடைகாமிச்சும் தான் போட்டுட்டு இருந்தேன். குறிப்பா ப்ரா பட்டையெல்லாம் நல்லா வெளியதெரியிற மாதிரி கேமரா ஆங்கிள் செட் பண்ணி வச்சி வீடியோஸ் செஞ்சேன்.

அப்பயும் எவனை(ளை)யும் நான் ஒரு ஆளா கூட மதிக்காம தொடர்ந்து என் பாணியிலயேஅடிச்சு விளாசிகிட்டே இருந்தேன். ஆனா என்னை திட்டுற யாருக்குமே தனிப்பட்டமுறையில பதிலுக்கு எதிர்வினை ஆற்றக்கூடாது என்கிறதுல ரொம்ப கவனமா இருந்தேன். என்னோட சீற்றம் எல்லாம் ஒட்டுமொத்த கலாசாரத்தையும் குற்றம்சாட்டுறதா மட்டும் இருந்ததால பதிலுக்கு பதில்னு யாராலயும் அறிவோடயும் வரலாற்றுத்தரவுகளோடயும் என்னை எதிர்க்க முடியாம போச்சி.

நானும் என் பாணியில வீடியோ போடுறதுல எந்த தொய்வும் இல்லாம தொடர்ந்துவீடியோக்கள் போட்டுட்டே இருந்ததால ஒரு கட்டத்துல அந்த வெறுப்பாளர்களுக்கேபுரிஞ்சுபோச்சி, இவளை நம்மால எதுவுமே பண்ண முடியாதுன்னு. அதோட அவனவன் சோலிய பார்க்க கௌம்பிட்டான். நானும் மறுபடி ரொமான்ஸ்க்கே திரும்பிட்டேன்.

பதிவு 2:-

*பொம்பள நெஞ்ச நிமித்திகிட்டு நடக்கலாமா?*

அடேய் கலாசாrர காவலாளிகளா, நம்ம க்ளீவேஜ் வெளிய தெரிஞ்சா ஓடி வந்து‘‘துப்பட்டா போடுங்க டோலி, இல்லன்னா எங்க டமில் கலாசாறு கெட்டு போயிரும்'' அப்டீன்னு கம்பு சுத்துறியளே, அப்ப TikTok Videos உங்க கலாசார உடையான புடவையில ஆடுற பச்சைத் தமிழச்சிகள எல்லாம் இனிமே என்ன பண்ணுவீங்கோ? இடுப்பையும் தொப்புளையும் தனியா துப்பட்டா போட்டு மூடுங்க டோலின்னு சொல்லுவியளோ?

சில பெண்மணிகள் புடவை கட்டிகிட்டு அசராம செமயா (வச்சு) செய்யிறாங்கோ! ஒரு 9.11 நிமிஷ வீடியோ தொகுப்பு பார்த்தேன்... கடைசிகிட்ட நமக்கே லேசா மூடாகிரிச்சின்னா பார்த்துக்கங்க! செம்ம செக்ஸி லேடி  அவங்க வீடியோஸ் எல்லாம் பார்க்க பார்க்க என் மனசுக்குள்ள ஓடுனது இது: நம்ம புத்திசாலி முன்னோர்கள் எல்லாம் தப்பித்தவறி அந்த வீடியோ தொகுப்பை பார்க்க நேர்ந்திருந்தா அவங்க மைண்ட்வாய்ஸ் எப்டி இருந்திருக்கும்?

‘‘இப்டி டிக்டாக்னு ஒரு செயலி கண்டுபிடிப்பான்; அதுல நம்ம தமிழ் பெண்கள் எல்லாம் சுதந்திரமா டேன்ஸ் ஆடுவாங்க; அதுவும் பெண்களோட சுதந்திரமான அசைவை வெகுவா கட்டுப்படுத்துறதுக்காகவே நாம கண்டுபிடிச்சு வச்சிருக்கிற நம்ம கலாசார உடையை உடுத்திகிட்டே இடுப்பு, வயிறு, தொப்புள் தெரிய ஆட்டுவாங்க; இப்டியெல்லாம் அப்பவே நம்ம மண்டையில உதிச்சிருந்துன்னா புடவைக்கு பதில் புர்க்காவை கலாசார உடைஆக்கியிருப்போமேடா.... ச்சைக்.. தப்பு பண்ணிட்டோமேடா பரட்ட!

பதிவு 3:-

‘‘பெண்ணியம் மற்றும் சமூகம் சார்ந்த நிறைய முற்போக்கு கருத்துக்கள எழுதுற, பேசுறநீங்களே இப்டி டிக்டாக்ல ஆபாச வீடியோக்கள் போடுறது சரியா லுலு? ஏன்இப்டியெல்லாம் பண்ணுறீங்க? இந்த வீடியோக்கள் மூலம் நீங்க சமூகத்துக்கு சொல்லவரும் கருத்து என்ன?''

சரி தவறு என்பது நபருக்கு நபர் வேறுபடும் விஷயம். நான் செய்வதெல்லாம் பிறரைபாதிக்காத பட்சத் தில் என்னை பொறுத்தவரையில் சரியே. ஏன் இப்டியெல்லாம்பண்ணுறேன்னு எவனுக்கும் வௌக்க மயிரெல்லாம் குடுக்க முடியாது. டிக்டாக்ல மாரல்போலீஸுங் பண்ணுற கலாச்சார காவல் நாய்களை எல்லா விதத்திலயும் காண்டாக்குறதுதான் என் நோக்கம்.

‘‘காண்டாக்கி?'' அப்டீன்னு யோசிப்ப. துப்பட்டா போடுங்க டோலி கும்பல் டிக்டாக்ல நாட்டாமை பண்ணி பல பெண்கள அழ வச்சது மாதிரி என்னையும் அழ வச்சிரலாம்னு நினைச்ச நினைப்புல மண்ண போட்டிருக்கேன். இவனுங்கள மஸ்ரா கூட மதிக்காத சிலபெண்கள் இங்க இருக்கத் தான் செய்யிறோம்னு காட்டியிருக்கேன். இப்ப அம்புட்டுபயலும் மூடிட்டு இருக்கானில்ல?

அப்பறம், இது எனக்கு உரிமையான தளம். இங்க நான் இப்டி தான் இருப்பேன். பார்க்கமுடிஞ்சா பாரு, இல்லன்னா என்னை ப்ளாக் பண்ணிட்டு மூடிட்டு போடா வெண்ண! & இதான் நான் சமூகத்துக்கு சொல்ல வர்ற கருத்து

பதிவு 4:-

ஆமா, என்னோட டிக்டாக் வீடியோக்கள ஆபாசம்னு  சொல்லுறியளே, தமிழ் சினிமாவுல சிலுக்கு, டிஸ்கோ சாந்தி, நமீதா, மீனா, அனுஷ்கா, நயந்தாரா, மும்தாஜ், ரம்யாகிருஷ்ணன் என அம்புட்டு நடிகைகளும் குலுக்குறப்ப எல்லாம் கண்ண பொத்திகிட்டு தான்இருப்பியோ? அத உடு, இந்துக் கோவில்கள்ள எல்லாம் பழந்தமிழர் கால சிற்பங்கள எல்லாம் கடக்குறப்ப அய்யே ஆபாசம்னு பொங்கிகிட்டு தான் இருக்கியா எல்லாவனும்? மூடிட்டு போங்கடே!

பதிவு 5:

இனி இதையெல்லாம் வாசிச்சதும் ஒரு பெண்ணா டிக்டாக்ல நான் எதிர்ப்புகள மட்டும்தான் சம்பாதிச்சிருக்கேனோன்னு தோணும் உங்களுக்கு. ஆனா கீழ்கண்ட என்னோடின்னொரு பதிவை வாசிச்சுப் பாருங்க, இதோட மறுபக்கமும் புரியும்.

முன்னப்பின்ன யாருன்னே தெரியாதவங்க மனசுலயும் ஒரே நொடியில இடம்பிடிக்கணுமா? ரொம்ப ஈசி தெரியுமா? ஜஸ்ட் உங்க ஹார்ட்லயிருந்து உண்மையாஅவங்க கண்ண பார்த்து ஒரு ‘‘லவ் யூ பேபி, ''  அப்டீன்னு சொல்லி பாருங்க... பச்சக்னு அவங்க ஹார்ட்ல போயி ஒட்டிக்குவீங்க!

இந்த புள்ளைய நேத்து டிக்டாக்ல ஒரு லைவ்ல பார்த்து ஒரு லவ் யூ உம்மா சொல்லிட்டுஅப்பறம் ஒரு டூயட் போட்டேன்... இந்தா இன்னிக்கு பார்த்தா நமக்குன்னே டெடிக்கேட்பண்ணி ஒரு வீடியோவும் பண்ணி, அதுல கேப்ஷன்ல ‘Love My Soul LuLu'' அப்டீன்னும் போட்டு வச்சிருக்கு... கார்ல வச்சு தான் நான் பார்த்தேன்... கண்ணு நிரம்பிரிச்சி... வீட்டுக்கு போயி சேர்றது வரை கூட பொறுமைஇல்லாம நானும் பதிலுக்கு கார்ல வச்சே அடுத்த டூயட் போட்டுட்டேன்... மத்தவங்களமுடிஞ்ச அளவு சந்தோஷப்படுத்தி கிடைக்கிற இப்டி சின்ன சின்ன சந்தோஷங்கள்ளதாங்க இருக்கு நம்ம வாழ்க்கையோட அர்த்தமே...

பதிவு 6:

என்னோட டிக்டாக் காணொளிகள்ள நான் half naked act பண்ணுறதா இங்க நிறையபேர் விமர்சனம் வைக்கிறீங்க. உங்களுக்கு இந்த பார்வை ஏன் வருதுன்னா, ‘‘பொண்ணுன்னா கழுத்து முதல் கணுக்கால் வரை முழுசா மூடியிருக்கணும்!'' என்கிற கலாசார பின்னணியில இருந்து

யோசிக்கிற தால தான். இதே டிக்டாக்ல மேல்சட்டைபோடாம, முழுசா கால்சட்டை இல்லன்னா வேட்டி அணியாம எத்தனையோ ஆண்கள் ரொம்ப கவர்ச்சியா வீடியோ போட்டு மில்லியன் கணக்குல லைக்ஸ் வாங்கிட்டுஇருக்காங்க. அது எதுவுமே உங்க கண்ணுக்கு அரை நிர்வாணம்னு உறுத்துறதில்ல. எந்தபெண்களும் இவங்களுக்கு எதிரா பொங்குறதும் இல்ல. ஆனா பொம்பள காலைப்  பார்த்துட்டாலே கலாசாரம் சீரழிஞ்சு போச்சின்னு ஆண்களும்பெண்களும் ஒண்ணு சேர்ந்து கம்பு சுத்த ஆரம்பிச்சிடுறீங்க. இதெல்லாம் ஏன்னுயோசிச்சிருக்கீங்களா?

ஏன்னா உங்க ஆணாதிக்க கலாசாரத்தில ஆண்களை அரை நிர்வாணமா பார்த்துபார்த்து பழகிட்டீங்க. பெண்களை அப்டி பார்த்து பழக்கப்படல. இதை ஏன் ஆணாதிக்ககலாச்சாரம்னு சொல்றேன்னா, அங்க ஆண் எப்படி வாழணும், எப்டி உடை உடுத்தணும்னுஆணே முடிவு செய்யிற மாதிரி, பெண் எப்டி வாழணும், எந்த அளவு ஆடை அணியணும்னுபெண்ணே முடிவு செய்யிற சுதந்திரம் இல்ல. ஸோ பெரும்பான்மையான பெண்களும்ஆண்கள் வரையறுத்து வைத்திருக்கும் சமூக விதிகளுக்கு அடங்கிஅடிமைகளா தான் வாழ்ந்திட்டு இருக்காங்க.

ஏன்னா தங்கள் விருப்பப்படி வாழவும், வசதிப்படி உடை உடுத்தவும் தேவையானமுழுமையான பொருளாதார சுதந்திரம் பெண்கள்கிட்ட இல்ல. அப்படியே பொருளாதாரசுதந்திரம் இருக்கிற பெண்கள் கையிலயும் அந்த சமூக கலாச்சார விதிமுறைகளைமாற்றி எழுதி, அடிப்படை ஆணாதிக்க சமுதாயத்தை உடைத்து நொறுக்கி, சமத்துவசமுதாயத்தை கட்டமைக்கும் அளவுக்கு அதிகாரம் இல்ல! ஸோ தன் வாழ்க்கையைதானே தீர்மானிக்கும் உரிமை இல்லாம, அதிகார வர்க்கம் சொல்லுற படி அடிமைகளா, அவர்களால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகளாக, அதிகார வர்க்கம் அவ்வப்போது வழங்கும் சலுகைகளுக்காக, ஆண் இனத்தின் அடிவருடிகளா தான் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம்இருக்கு உங்க நாட்டு பெண்களுக்கு.

அந்த அதிகார வர்க்கம் ஆண்டாண்டு காலமா பெண்களின் மூளைக்குள்ள தங்கள் உடலைகுறித்த குற்ற உணர்வை புகுத்தி வச்சிருக்கிறதால, அப்டியே மதங்களாலும் கலாச்சாரவிதிகளாலும் மூளைச்சலவை செய்யப்பட்டு அடிமைகளாகவே வளர்க்கப்படும் பெண் இனமும் அது தான் நார்மல் அப்டீன்னு நினைச்சுகிட்டு அடுத்தவனுக்காகவே தங்கள் வாழ்க்கையை தொலைத்து செத்து மடிந்து போகிறது.

இதுவே, நான் வாழுற நாட்டுல, ஆம்பள பொம்பளன்னு பாகுபாடு இல்லாம இயல்பா அவனவனுக்கு புடிச்ச மாதிரி வாழுறான். அதுக்கான தனிமனித சுதந்திரம் இருக்கு. நான் இந்த நாட்டுல பின்பற்றுற இந்த இயல்பான கலாசாரத்தை என்உடையிலயும் வாழ்க்கைமுறையிலயும் பிரதிபலிக்கிறேன். என் உடலை பத்தினகுற்றவுணர்வு எனக்கு இல்லங்கிறதால அதை வெளிய காட்டுறதுல எனக்கு தயக்கமில்ல. என் வாழ்க்கையை நானே தீர்மானிக்கும் முழு சுதந்திரம் இருக்கிறதாலயும், நான் எந்த விதத்துலயும் தமிழ் சமூகத்தை

சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாததாலயும், மத்தவங்க என்ன நினைப்பாங்களோன்னு கவலைப்படுறதும் இல்ல. இதான் நான்இவ்வளவு வெளிப்படையா இருக்க காரணம்.

இதனாலநான்என்னசொல்லவரேன்னா, யாம்எவர்க்கும் அடிமையல்ல என்பதுவே. நான் மாற்றவிரும்புற விஷயம் தமிழ்கலாசாரம் என்கிற பேருல போற்றிப் பாதுகாக்கப்படும் அடிமைக் கலாச்சாரத்தைதான். கல்வியறிவால் பொருளாதார சுதந்திரத்தை ஓரளவிற்கேனும் அடைந்திருக்கும் பெண்கள் தற்போது அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஆரம்பித்திருக்கிறார்கள்... இனி தமிழ்சமூகமும் கொஞ்சம் கொஞ்சமா மாறும், வெகுவிரைவிலேயே சமத்துவ சமுதாயம் மலரும் என்கிற நம்பிக்கையோடே...

பிப்ரவரி, 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com