அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக 1967-ல் தமிழ்நாட்டில் வலிமையாக விளங்கிய காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது. அகில இந்திய அளவில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அரசியல் நிகழ்வு அது. பிரிவினையை வலியுறுத்திய கட்சியான அது பின்னர் தேசிய நீரோட்டத்தில் இணைந்துகொண்டது. அன்றிலிருந்து வர இருக்கும் 2017 வரை ஐம்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மாநிலக் கட்சிகளான திமுக, அதிமுக இரு கட்சிகளே ஆட்சியில் இருக்கின்றன. தேசியக் கட்சிகளே இல்லை என்று ஆகிவிட்டது. இந்தியாவில் வேறு எந்த மாநிலமாவது இவ்வளவு நீண்டகாலம் இப்படி தேசியக் கட்சிகளைப் புறக்கணித்திருக்கிறதா என்றால் இல்லவே இல்லை.
சுதந்தரத்துக்குப் பின் சென்னை மாகாணத்துக்கு நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வென்றபோது வலிமையான் எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்ட்கள் விளங்கினார்கள். ஆனால் பின் வந்த தேர்தல்களில் முதலில் தேய்ந்து வலுவிழந்தவர்கள் அவர்கள்தான். அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸும் வலிமையை மெல்ல இழந்துகொண்டே வந்தது. பின்னாளில் 1980-ல் தோன்றிய பாஜக இந்தியாவெங்கும் வளர்ச்சி பெற்றாலும் தமிழ்நாட்டில் இன்னும் சிறு முத்திரையைக் கூட பதிக்கமுடியவில்லை.
தேசியக் கட்சிகள் வளர்வதற்கு இங்கு இடமில்லாமல் போனதற்கு முக்கியக் காரணம் இங்கிருக்கும் வாக்கு வங்கியை திமுக அதிமுக இருகட்சிகளுமே போட்டி போட்டு பங்கு போட்டுக்கொண்டதுதான். இரண்டு பெரிய ஆலமரங்களின் நிழலில் வேறு
செடிகள் வளர இடமில்லை என்றே சொல்லவேண்டும். ஒரு வேளை கலைஞர் கருணாநிதியும், புரட்சித்தலைவர் எம்ஜிஆரும் திட்டம்போட்டுத்தான் தங்கள் தனித்தனிப் பாதைகளைச் செப்பனிட்டுத் தொடர்ந்தார்களோ என்றும் எண்ண இடம் இருக்கிறது.
ஆனால்கண்ணுக்கெட்டியதூரம்வரைஇப்போதைக்குதேசியக்கட்சிகள்தமிழகத்தில்வளர்வதற்கானஅறிகுறிகளேஇல்லை. இந்தநிலையைவிளங்கிக்கொள்ளும்முயற்சியாகவேஅந்திமழைசார்பில்பலருடையகருத்துகளைத்தொகுத்துவெளியிட்டிருக்கிறோம். இதுமோதிக்கொள்ளும்பார்வைகளின்தொகுப்பு. இக்கருத்துகளுடன்அந்திமழைக்குஉடன்பாடிருக்கவேண்டியஅவசியம்இல்லை!
டிசம்பர், 2016.