தரமணி: தூக்கி எறியப்படும் கோப்பை அல்ல

தரமணி: தூக்கி எறியப்படும் கோப்பை அல்ல
Published on

தியா...! தமிழ்த் திரையுலகின் நெடிய பயணத்தில் ஓர் மறக்கவியலா கதைநாயகி. அவள் அப்படித்தான்... அரங்கேற்றம்... காலகட்டங்களைத் தாண்டி தகவல் தொழில் நுட்ப யுகத்தின் நாயகி அவள். தான் சந்திக்கும் ஒவ்வொரு ஆணிடமும் ஒளிந்து கொண்டுள்ள ஆதிக்கத்தின் குரலைக் கண்டுணர்ந்து மாற்ற நினைப்பவள் இயலாதபோது மூர்க்கங்கொண்டு அம்முகத்தையே சிதைக்கத் துணிபவள்.

கரம் கோர்த்த கணவன் தன்பால் புணர்ச்சியாளன் என்பதை அறிந்தும் கோபம் கொள்ளாது அவனது பாலின தேர்வை அங்கீகரித்து...... இது உன் தப்பில்ல...Its  not your fault. எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். ஙுணித ச்ணூஞு ச் ஞ்ணிணிஞீ ட்ச்ண...” என ஆறுதலாக விரல் தடவி விடை கொடுப்பவள்.

காதலனே ஆயினும் குறுகுறுப்போடு தனது சமூக வலைத்தளப் பக்கங்களை மோப்பம் பிடித்து அர்த்தமற்ற கேள்விக்கணைகளால் துளைக்கும்போது அவனது நம்பிக்கையின்மையின் மீது கோபம் கொண்டு கொந்தளிப்பவள்தான் இந்தத் தியா. பெண் என்பவள் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் யூஸ் அண்ட் த்ரோ கோப்பையல்ல என்பதை ஒவ்வொரு தருணத்திலும் தான் சந்திக்க நேரும் ஒவ்வொரு ஆணிடமும் அறிவுறுத்தத் தயங்காதவள்தான் தரமணியின் இந்த நாயகி.

படுக்கைக்குக் கூப்பிடும் பாஸ்.... அர்த்தமற்று அந்தரங்கங்களில் அத்துமீறும் காதலன்.... என்னை விட அவன் சூப்பரா....? என்று காதலன் தொடங்கி போலீஸ் கமிஷனர் வரைக்கும் ஒலிக்கும் ஒரே ரகக் குரல்கள்... என எல்லோருக்குள்ளும் ஓர் ஆண் முகம் குரூரத்துடன் ஒளிந்து கொண்டிருக்கிறதை உணர்ந்தவளே இந்த ஆல்த்தியா என்கிற தியா.

தோழன் ராமின் வார்த்தைகளிலேயே சொல்வதானால் “வேலை பாதுகாப்பு... பெண்கள் பாதுகாப்பு... என்ற எந்த பாதுகாப்பும் இல்லாத அமைப்பே இந்த கார்பரேட் நிறுவனங்கள். மழைக்காலத்து சென்னையைப்போல் தத்தளிப்பவர்கள் இவர்கள்.”

உலகமயமாக்கலும் நுகர்வு வெறியும் நம்மைத் தாக்கிய கணத்திலிருந்து மனித உறவுகள் தாறுமாறாக எவ்விதம் சிதைந்து போகிறது... அதனுள் சிக்கி ஒரு சிற்றுயிர் எவ்வித அலைக்கழிப்புகளுக்கு எல்லாம் ஆளாகிறது என்பதன் குறியீடுதான்  ‘ஆல்த்தியா'வாக

பரிணமித்துள்ள ஆண்டிரியாவின் அழகிய பாத்திரம்.

இவை அத்தனையையுமே உணர்த்தி விடுகிறது தரமணியில் வரும் தம்பி முத்துக்குமாரின் பாடல் வரிகள் :

”பாவங்களைச் சேர்த்துக் கொண்டு எங்கே செல்கிறோம்?

நாம் வாழ்ந்த வாழ்க்கை புரியாமல் மண்ணுக்குள்

செல்லுகிறோம்....

ஆம்...

அப்படி வாழ்ந்த வாழ்க்கை புரியாமல் மண்ணுக்குள் செல்லும் மனிதர்களிடம் சிக்கி அல்லாடியவள்தான் இந்த நவீன யுகத்தின் நாயகியான தியா.

ஆரவாரமான இந்த உலகினில் காலத்தைத் தாண்டியும் நிற்கப் போகிறவள் இந்த ‘தியா'வாகத்தான் இருக்க முடியும்.

மார்ச், 2023

logo
Andhimazhai
www.andhimazhai.com