சுந்தர ராமசாமிக்கு கிருஷ்ணன் நம்பி

சுந்தர ராமசாமிக்கு கிருஷ்ணன் நம்பி
Published on

சென்னை - 14

13.10.60

அன்புமிக்க நண்பரவர்களுக்கு,

அநேக நம்ஸ்காரம். தங்கள் கடிதம் இன்று காலையில் கிடைத்தது. மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. வெகு ரஸமாக உற்சாகத்துடன் கடுதாசி எழுதியிருக்கிறீர்கள்.

நாகர்கோவிலுக்குச் சென்றது, தங்களைச் சந்தித்தது எல்லாவற்றையும் ஜெயகாந்தன் சொன்னான். அவனுடைய சமீபத்திய கதைகள் ஒன்றுமே நன்றாக இல்லையே. சில நாட்களுக்கு முன்பு கடற்கரையில் வைத்து ஜெயகாந்தன் இரண்டு கதை சொன்னான் . நல்ல தீம் ரொம்ப அழகாகச் சொன்னான். அவனுடைய கதை சொல்லும் கெட்டிக்காரத்தனத்தைப் போற்றாமலிருப்பது சிரமம் . எழுத்தில் ஏமாற்றி விடுகிற சங்கதியைக் கூட சொல்லும் போது ரொம்ப அற்புதமாக lift பண்ணிவிடுகிறான். ஒரு ஹாலில் இலக்கியக் கூட்டம் போட்டு  அவனைக் கதை சொல்லச் சொல்லலாம். அவனிடம் எனக்குக் கொஞ்சம் பொறாமை. அவன் உடம்பு ஜம்மென்று இருக்கிறது. என்னை மாதிரி அவன் சோனி இல்லை. நான் சோனி இப்போது ரொம்ப சோனி.

24.10.60

நண்பர்கள் வட்டம் பற்றி கேட்டிருந்தீர்களே, அதைப் பற்றிக் கொஞ்சம் அவிழ்க்கிறேன்.

அவ்வப்போது தமிழ்ப் புத்தகாலயம் பக்கம் போகிறேன். முன்பு போல க.நா.சு. கோஷ்டி இப்போதெல்லாம் கடற்கரைக்குப் போவதில்லை. அது இப்போது எப்படியோ நின்றுவிட்டது. அவ்வப்போது க.நா.சு. தமிழ்ப் புத்தகாலயத்துக்கு வருவார். கு.அ. அபூர்வமாக வந்து போவார். கொடுமுடி அநேகமாய் வருவதே இல்லை. அவர் வீட்டுக்கு எப்போதாவது ஒரு தரம் போவேன்.

V.B- யை தமிழ்ப் புத்தகாலயத்திற்குப் போகும் போதெல்லாம் சந்திக்கிறேன். கவலையால் ரொம்பவும் மெலிந்து போய்விட்டார் அவர். இன்னும் இரண்டொரு தினங்களில் V.B. இலங்கை செல்லலாம். Passport , visa எல்லாம் முடிந்து விட்டது. பிரயாணச் செலவுக்கு பணம் தேடிக் கொண்டிருக்கிறார். இப்போதெல்லாம் அவரிடம் பேசும் போது, அவருடைய கண்ணாடியினூடே, அவர் கண்கள் துளிப்பதை அடிக்கடி காண நேரிடுகிறது. அவருக்கு எத்தனையோ கஷ்டங்கள். கொஞ்சம் சந்தாதாரர்கள் சேர்த்துக் கொண்டு பணம் கொண்டு வரலாம் என்று தான் இலங்கை போகிறார் V.B.

எழுத்தாளர் மகாநாடு ராஜாஜி ஹாலில் நடந்தது. தமிழ் எழுத்தாளர்களின் முட்டாள் தனத்தின் காட்சி சாலையாக, இரண்டாம் நாள் ராஜாஜி ஹால் திகழ்ந்தது. நல்ல பழஞ்செருப்பாக இரண்டு மூன்று அனுப்பி வையுங்கள். சிறுகதை பற்றிப் பேசிய சுகியை கௌரவிக்க விரும்புகிறேன்.

05.11.60

எப்படியும் நான் எழுதியாக வேண்டும் பணம் சம்பாதிக்க வேண்டும். இல்லாவிட்டல் இங்கே குடித்தனம் போட முடியாது. மாதம் 150 - ல் இருந்து 200 ரூபாய் வரை வருவாய் வந்தால் தான் சென்னையில் வாழமுடியும். இப்போதைய  வருவாயில் ஞுதுடிண்tஞுணஞிஞு சாத்தியம். வாழ்வு சாத்தியமல்ல. ஆளுக்கு ஏற்றாற்போல் ஆசாரக் கதை பண்ணும் வித்தை இனிமேல் தான் கைவரவேண்டும். வல்லிக்கண்ணன் கூட கோரமான சில கதைகள் எழுதி விகடனிலிருந்தும் கல்கியிலிருந்தும் கொஞ்சம் சில்லறை பார்த்துவிட்டார். எப்படி எழுதினால் உங்கள் பத்திரிகையில் போடுவீர்கள் ? எந்த மாதிரி இருக்க வேண்டும். சொல்லுங்கள். அப்படி எழுதுகிறேன். ஜெயகாந்தனுக்குக் கொடுப்பது போல் எனக்கும் 100 ரூபாய் கொடுத்தால் எழுதுகிறேன்‘ என்று நமது மதிப்பிற்குரிய ஒரு சிறந்த கதாசிரியர் சாவியை (விகடன்) கேட்க ,  சாவி மழுப்பிப் பேசி அனுப்பிய சமாசாரம் ஒரு ண்ஞுணண்ச்tடிணிணச்டூ ணஞுதீண். மேற்கண்டபடி விகடனை அணுகி ணிணூச்டூ விண்ணப்பம் போட்டவர் வேறு யாருமல்ல ; லா.ச.ரா. நம்பத்தகுந்த வட்டாரத்தின் செய்தி இது. இப்படி எல்லாம் அற்பத்தனமான போட்டிகள் வலுக்கின்றன.

பத்திரிகாலயங்களின் கதவை நானும் கொஞ்சம் இடிக்கலாம் என்று தான் நினைக்கிறேன். எழுதினால் தானே இடிக்க முடியும் ? பார்ப்போம்!

மிக்க அன்புடன் ,

நம்பி

* V.B- ‘சரஸ்வதி ’ இதழின் ஆசிரியர் விஜயபாஸ்கரன்.

கிருஷ்ணன் நம்பி - குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் சசிதேவன், சாது சாஸ்திரி , கிளிப்பண்டிதர் என்ற புனைப்பெயர்களில் படைப்புகள் தந்தவர்.

மே, 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com