காற்றின் மொழி: தன்னம்பிக்கை பெண்!

காற்றின் மொழி: தன்னம்பிக்கை பெண்!
Published on

காற்றின் மொழி திரைப்படம்.. அதுல விஜயலக்ஷ்மி பாலகிருஷ்ணனா நடிச்ச துரு துரு ஜோதிகா..

எப்போ வந்த படம்.. அதை பத்தி என்ன பேச இருக்குன்னு நீங்க இந்த லைன்லயே நினைக்கலாம்.. அந்திமழைல இதை பத்தி என்னை எழுத சொல்லி கேக்கற வரைக்கும் எனக்கும் அப்படிதான் இருந்துது..

ரேடியோ ஜாக்கி எனும் ஒற்றை புள்ளியில் இதை பத்தி ஒரு அனாலிசிஸ் பண்ண ஒப்புக்கொண்டேன்..

ஒரு குடும்பத்தலைவி எனும் சின்ன வட்டத்திற்குள் தன்னை நிறுத்திக்கொள்ள விரும்பாத எத்தனையோ பெண்களை போல ஜோதிகாவும் எதை எதையோ முயற்சி செய்கிறார்.. குடும்பத்தின் நிதி நிலையை சப்போர்ட் பண்ண.. தன்னை நிரூபிக்கவென.. பலதும் தோல்வியிலும், தங்கைகளின், குடும்பத்தின் கிண்டலுக்கு காரணமாகி, மனம் சோர்ந்தாலும்.. விடாமுயற்சியாய் கீஒ ஆகும் ஒரு வாய்ப்பு கிடைத்ததும் எப்படி அதில் பேர் சொல்லும்படி சாதித்து, தன்னை அறிந்து..உணர்ந்து வாழ்க்கையை புதிய தெளிவோடு வாழ்கிறார் எனும் கதை.

இதிலிருந்து நமக்கு என்ன மற்றும் மெசேஜ் என கேட்டால்..,

1. திறமைக்கு கல்வி இல்லாதது ஒன்றும் பெரிய பாதகம் இல்லை.. அதாவது படிப்பு முக்கியம்தான்.. ஆனாலும், படிப்பில்லையே என முடங்கி கிடைக்காமல் திறமையை வளர்த்துக்கொள்ளும் போது ஜெயிக்க வாய்ப்புண்டு.

2. கிரியேட்டிவிட்டி என்பது கட்டற்ற சுதந்திரம்.. உங்களது எந்த ஒரு வேலையிலும் கிரியேட்டிவிட்டி என்பது தேவை தான்.. அதற்கு சுதந்திரம் வேண்டும்..

3. ஜோதிகாவின் இந்த புதிய முயற்சிகள் அவளது குடும்பத்திற்கு பிடிக்காத விளைவுகளை ஏற்படுத்தும்.. தன்னைச் சுற்றியுள்ள மக்களின் வெறுப்பையும் கிண்டலையும் சம்பாதிப்பார்.. அப்பொழுதும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் கொண்டு நிலைமை மாறும் வரை மாறாமல் இருந்து சாதிப்பார்.

4. சின்னச் சின்ன வெற்றிகளை கொண்டாட கற்றுக்கொள்ளும்பொழுது பெரிய மகிழ்ச்சியை செய்கிறோம்..

5. நமக்காக யாரு நிக்கிறாங்களோ இல்லையோ, நமக்காக நாம நிக்கணும்.. நம்மளையே முழுசா நம்பி..விரும்பி நமக்காக நாம நிக்கணும்.

இந்த படம் பாத்த உடனே நிறைய பெண்கள் கீஒ ஆகிடணும்னு இறங்கினாங்க.. படம் சொல்றது அதை இல்ல.. தன்னோட திறமை என்னன்னு கண்டுபுடிச்சி..மெருகேத்தி..அதை கொண்டு தன்னடையாளம் வளர்க்கறது எப்படின்னு தான் Inspire ஆகிக்கணும்.

அதுதான் சரியான movie interpretation.

படத்துலதான் எதனை தடங்கல்கள் வந்தாலும் மிஞ்சி மிஞ்சி போனா 3 மணி நேரத்துல சரியாயிடும்.. ஆனா நிஜத்துல அப்படி இல்லைங்கிற உண்மையை புரிஞ்சிகிட்டு தொடர்ந்து உழைக்கணும். உழைப்போம்..

மார்ச், 2023

logo
Andhimazhai
www.andhimazhai.com