கற்பூரமுல்லை: வைராக்கிய மாயா விநோதினி

கற்பூரமுல்லை: வைராக்கிய மாயா விநோதினி
Published on

சிறையறையில் உட்கார்ந்திருக்கிறாள் ஓர் இளம்பெண். கல்யாணம் என்று ஒரு நாள் விடுப்பில் வெளியே போகிறாள். அவள் யார்? அவள் தங்கியிருந்த ஹாஸ்டலில் இருந்து அந்தக் கேள்விக்கான நீண்ட விடை தொடங்குகிறது.

இரவு முழுக்க விழித்திருப்பாள். விடிந்த பின் தூங்கி வகுப்பைத் தவிர்ப்பாள். ஹாஸ்டல் சுவரில் கயிறு கட்டி இறங்கி, தப்பித்துச் சினிமாவுக்கோ வேறெங்கேயோ போவாள்.

நிறையக் காசு வைத்திருப்பதால், இவள் பின்னால் தோழிகள் கூட்டமுண்டு. அவர்களோடு கொட்டம் அடிக்கும்போது தன்னை, கற்பூர முல்லை என்று

சொல்வாள். காட்டாற்று வெள்ளம் என்றும்

சொல்வாள். பெட்டிப் பாம்பு அல்ல, சுதந்திர விரும்பி என்று அறிவிப்பாள்.

தோழிகளில் ஒருத்தி தற்கொலைக்கு முயன்றதைக் கேள்விப்படும்போது, ‘அவ செத்துட்டாளா,

சாகப்போறாளா?‘ என்கிறாள். “ஏண்டி இப்பிடிக் கேக்குற?‘ ‘ஃப்ரெண்டாச்சே... சாகும்போது பக்கத்துல இல்லன்னா தப்பா நினைச்சுக்க மாட்டாளா?‘

தோழியைப் பார்க்கப் போன மருத்துவமனையில் உள்ளே விட மறுத்த பணியாளுக்குப் பறக்கும் முத்தம் கொடுக்கிறாள். மருத்துவனையும், ‘மயக்கிடுவேன்' என்கிறாள்.

அவனோ, 'நீ கஞ்சா குடிக்கி, கேங் லீடர்' என்று அடுக்குகிறான். ‘பெத்தவங்க யாருன்னு தெரியாத நெறிகெட்டவ‘ என்று முடிக்கிறான்.

தன்னை வளர்ப்பவரிடம், தன் அம்மா யாரென்று கேட்டு, அவர் சொல்ல மறுக்க “ஒரு நகைச்சுவை நாடகத்தை அரங்கேற்றப்போகிறேன்‘ என்று

சொல்லிவிட்டு மாடியில் இருந்து குதிக்கிறாள்.

மயக்கத்திலிருந்து விழித்ததும், அதே மருத்துவன், ‘நான் செத்துட்டேனா?‘ என்கிறாள். ‘இல்லை.'

‘செத்துடுவேனா?' ‘மாட்டே ‘கைகால் கூடப் போகலையா? ‘ இல்லை.' ‘அப்ப நான் கஷ்டப்பட்டுக் குதிச்சதெல்லாம் வீணாப் போச்சா?' என்கிறாள்.

குணமாகி வந்தவளுக்கு அம்மா யாரென்று தெரிகிறது. அம்மாவின் பூர்வ கதை தெரிந்ததும் மனம் ஒப்புகிறாள். ஆனால், அப்பாவைப் பற்றிய விவரங்கள் மறுக்கப்படுவதால், அந்த மருத்துவனின் காதலைத் தவிர்க்கிறாள்.

 ‘மகள் என்று அம்பலத்தில் அறிமுகப்படுத்துவேன்' என்ற அம்மாவைக் கொன்றவர்களை சுட்டுப்

பொசுக்குகிறாள். அப்பாவும் வெளிப்பட காதலனை மணம் புரிந்துகொண்டு சிறைக்குத் திரும்புகிறாள்.

மனம் குழம்பிய இளம்பெண்ணின் குணச்சித்திரம் மாயா விநோதினியாக, கற்பூர முல்லை படத்தில் அழுத்தமாக வெளிப்பட்டது. இயக்குநர் ஃபாசில் சிந்தித்தார். அமலா நிலைநிறுத்தினார்.

ரமேஷ் வைத்யா

logo
Andhimazhai
www.andhimazhai.com