என்னைப்பார் என் அழகைப்பார்!

என்னைப்பார் என் அழகைப்பார்!
Published on

பெண்கள் ராஜ்ஜியம் என்று சொல்லும் அளவுக்கு டிக் டாக் பெண்கள் ஆதிக்கத்தால் கொடி கட்டிப் பறக்கிறது.ரைமிங்காக சொல்ல வேண்டும் என்றால் பெண்களின் ஷாலும் பாவாடையும் சேர்ந்து பறக்கிறது.

வயசுப் பெண்கள் முதல் பேரிளம்பெண்கள் வரை டிக் டாக் ஆப்பில் அடிக்ட் ஆகி கிடக்கிறார்கள். பலவித சமூக மனோவியல் காரணங்கள் இதற்குப்பின்னால் இருந்தாலும் , எக்ஸிபிஷனிஸம் என்ற ஏரியாவை மட்டும் அலசிப்பார்க்கலாம்.

நம்மூரில் பெண்களை புகழ்வதற்கு பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படும் வார்த்தை ‘‘எவ்ளோ லட்சணமா இருக்கா ? ‘‘ ‘‘மஹாலக்‌ஷ்மி மாதிரி இருக்கா ‘‘ என்பது போன்ற சொற்றொடர்கள்தான்.

நண்பர்கள் , உறவினர்கள் என அனைவரும் பெண்களின் முகத்தை மட்டுமே பாராட்டி வந்தனர். பெண்களும் அந்த முகத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து , முகஅழகு கிரீம்கள், கண் மை, டோனர் , சீரம் என கண்டதையும் வாங்கி தடவி முகப்பொலிவு பெற்றதாக மகிழ்ந்து இருந்தனர்.

கணவன் , காதலனாக இருந்தாலுமே , முகத்தை மட்டுமே பாராட்டி வந்தனர். ‘‘செம அழகா இருக்கடீ‘‘ ‘‘உன் மூஞ்சையே பாத்துட்டு இருக்கலாம் போலருக்குடீ ‘‘ என்பது போன்ற கமெண்டுகள்தான் நூற்றாண்டு காலமாக புழங்கிக்கொண்டு  இருந்தன.

முகத்தை விட்டு அதிக பட்சமாக உடைகளைப் பாராட்டுவார்கள்.

முன்பெல்லாம் உடலுறவில் ஈடுபடும்போது இருட்டு அறையில் பாயிண்ட் டூ பாயின்ட் பஸ் கணக்காக மேட்டரை முடித்து வந்தனர்.கொஞ்சம் விழிப்புணர்வு வந்ததும் , ஃபோர் ப்ளே என்ற வார்த்தை பரவலானதும் முத்தமிடத் தொடங்கினார்கள் நம் ஆட்கள். இந்த காலகட்டத்தில்தான் டூத் பிரஷ் , டூத் பேஸ்ட் , மவுத் ஃபிரஷனர் எல்லாம் சேல்ஸ்ஸில் எகிறின. இதெல்லாம் இணையம் பரவலாகும் வரைதான்.

வெளிநாட்டுப்பெண்கள் பாதம் , கணுக்கால் , பின்னங்கழுத்து, காது, வயிறு, தொப்புள், தொடை, இன்னபிற அந்தரங்க அங்கங்களை ஒவ்வொரு பாகமாக அழகுப்படுத்தி , அதை அவர்களே ரசித்துக்கொண்டு, பொதுப்பார்வைக்கும் வைத்தபோது நம்மூர்ப் பெண்களுக்குள் உள்ளூர தூங்கிக்கொண்டு இருந்த, இன்னதுதான் என்று தெரியாத ஒரு உணர்வு விழித்துக்கொண்டது.

தன் உடலின் ஒவ்வொரு பாகங்களையும் அழகு படுத்தி கொண்டாட ஆரம்பித்தார்கள் நம்மூர் பெண்கள். அதற்கு வாகாக வந்தது டிக் டாக் செயலி. இந்த செயலி முகம் மட்டுமன்றி உடலின் பாகங்களையும் அழகூட்டிக் காட்டும்.

தன்னுடைய உடலின் பாகங்களை ரசித்துப் பாராட்டாத காதலன் /கணவன் , ஒவ்வொரு பாகத்தையும் கொண்டாடி ருசிக்காத கணவன் மார்கள் மீதிருந்த அதிருப்தி எல்லாம் விலகிப் போய், டிக் டாக்கில் தஞ்சம் அடைந்தனர்.

ஒரு கவிதை எழுதி ஒரு ஆளுக்குக் காட்ட முடியுமா? ஒரு ஓவியம் வரைந்து ரகசியமாக ஒரு ஆளுக்குக் காட்ட முடியுமா ?

அதே போலத்தான், தங்கள் உடலை பெண்கள் நினைக்கிறார்கள். தங்கள் உடலை ஒரு கலைப்படைப்பாக நினைக்கும் பெண்கள் , அதை மென்மேலும் மெருகூட்டி , அழகூட்டி பொதுப்பார்வைக்கு வைக்கின்றனர்.

இந்த இடத்தில்தான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆண்களுக்கு பெண்களின் உடலைப் பார்த்தால் மூட் வரும். பெண்களுக்கு தங்கள் உடலைப் பார்த்தாலே மூட் வரும். இது நான் சிந்தித்து வித்தியாசமாக சொல்ல நினைத்து எழுதுவது அல்ல. சில பெண்களிடம் ஆத்மார்த்தமாக பேசிப் பார்த்து பகிர்வதுதான்.

 இதை லெஸ்பியனோடு போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. இவர்களுக்கு அடுத்த பெண்களின் உடலைப் பார்த்து மூட் வருவதில்லை. தன் உடலையும் தன் உடலின் அழகையும் பார்த்து மூட் வருகிறது. எனக்கு என் லிப்ஸை கிஸ் பண்ணிக்கணும்னு ஆசையா இருக்கு என்றும் ஒரு பெண் சொன்னாள்.

இதையெல்லாம் வைத்து டிக் டாக்கில் தன்னை , தன் உடலை முன் வைத்து மகிழ்ந்து கொள்ளும் பெண்களை அவசரப்பட்டு நார்ஸிஸிஸ்ட் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது.அதே போல சிம்பிளாக எக்ஸிபிஷினிஸம் என்ற வார்த்தைக்குள்ளும் இதை அடக்கக் கூடாது என்றே நினைக்கிறேன்.

மாறி வரும் நவீன உலகில் தன் உடலையும் , உடலின் அழகையும் பொதுப் பார்வைக்கு வைக்க வேண்டும் என்ற உந்துதல் பெண்களில் ஒரு  பெருங்கூட்டத்துக்கு எப்படி வந்தது என்று பார்க்க வேண்டும்.

ஆண்களுக்குத்தான் பெண் உடல் பகுதிகள் எல்லாம் புனித பாகங்கள் அல்லது ரகசிய செயற்பாட்டு களங்கள். சில ஆண்களுக்கு , இந்த பாகங்கள் எல்லாம் ஒரு தனி மனிதனின் உடைமை, அதாவது கணவனின் உடைமை.

பெண்களுக்கு அப்படி அல்ல அல்லவா ?

இவ்வளவு நாட்கள் தங்கள் உடலின் பாகங்களை பொத்திப் பொத்தி பாதுகாத்து வந்து, அவற்றை  ஒருவனுக்கு மட்டும் காட்டி, அவனும் அவற்றைப் பெரிதாக கண்டு கொள்ளாமல் , பாராட்டாமல், கொண்டாடாமல் இருந்த எரிச்சலில் இருந்த பெண்கள், தங்கள் உடலையும், அழகையும், பாகங்களையும் பொதுவுடமை ஆக்கினார்கள்.

இடையோ தொடையோ அது பெண்மையின் ஒரு அங்கம் பெண்களுக்கு. அது புனிதம் எல்லாம் இல்லை, அழகின் ஒரு அம்சம். அது ஆராதிக்கப் பட வேண்டும், கொண்டாடப்பட வேண்டும் என்ற அடிமன ஆசை இவ்வளவு நாட்கள் அடங்கிக்கிடந்தது, இப்போது இருக்கும் சுதந்திரமான சூழலில் வெளிப்பட்டு இருக்கிறது.

தெரியாத்தனமாக ஆடை காற்றில் பறந்து  உடல் பாகம் தெரிந்து விட்டது என்பதெல்லாம் புளுகு. இந்தா பார், எவ்வளவு அழகாக இருக்கிறது? இதைப்பார்ப்பதில் உனக்கு என்னடா அதிர்ச்சி? இதில் என்னடா புனிதம் ? என்பதே அதை கண நேரம் காட்டிய பெண்களின் கேள்வியாக இருக்கலாம்.

ஒரு ஆணுக்கு தன் பர்ஸனாலிட்டி என்பது மொத்த உடலைத்தாண்டி, தன் அறிவு, தன் ஆளுமை, தன் செல்வாக்கு, தன் பொருளாதாரம் முதலியவை.

பெண் அப்படி அல்ல. தன் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் தனித்தனியாக நேசிக்கிறாள். தனித்தனியாக பராமரிக்கிறாள். ஒவ்வொரு பாகத்தினுடைய  அழகின் மொத்த வேல்யூதான் தன் பர்ஸனாலிட்டி என்பதாக இருக்கிறது அவளின் நடவடிக்கைகள்.

குடித்து விட்டு ஆன்லைனுக்கு வரும் ஆண், தன் கேர்ள் ஃபிரண்டை அழைத்து டிரஸ்ஸை கழட்டுடீ எனக் கேட்பான்.

குடித்து விட்டு மப்பில் இருக்கும் பெண் அப்படி ஆணிடம் கேட்க ஏதாவது அவனிடம் இருக்கிறதா? பெண் மனம் தன் உடலை அவிழ்த்துக் காட்டவே ஆசைப்படுகிறது. தன் உடலின் அழகுக்கான பாராட்டை கோருகிறது. தனியொருவனுக்கு உடலழகைக் காட்டும் பெண்கள், பொது வெளியில் 90 சதவீதம் காட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். இதுதான் இயற்கையும் கூட!

பெண்கள் இப்படி தன் உடலின் அழகை வெளிப்படுத்திக்கொள்வதில் , சில பெண்களுக்கே மாற்றுக் கருத்து இருக்கும். திட்டவும் செய்வார்கள்.  பாய்  கட் வெட்டிக்கொண்டு , முக்கால் பேண்ட் போட்டுக்கொண்டு வாரம் இருமுறை குளிக்கும் பெண்கள் அழகை ஆராதிக்கும் பெண்களை,வரலாறு முழுக்க திட்டிக்கொண்டேதான் வந்திருக்கிறார்கள்.

ஆனால் மாறி வரும் உலகில் மனங்களும் மாறிக்கொண்டேதான் இருக்கும். எந்த உடல் பாகத்தையும் அழகின் ஓர் அம்சமாகப் பார்க்கத் தொடங்கி விட்டால்  இதில் ஆபாசம் ஏதும் தெரியாது.

பெண்கள் தங்கள் உடலைப் பராமரித்து, அழகூட்டி, அதை ஒரு இசையுடனும் நடனத்துடனும் வெளிக்காட்டுவதை ஒரு புதிய கலை எனக் கொண்டால் இதை எந்தச் சிக்கலும் இல்லாமல் ரசிக்கலாம்.

ஒரு நவீன நிர்வாண ஓவியத்தை ரசிப்பது  போல உண்மையான பெண்களை டிக் டாக்கில் ரசிக்க முடியும். ஆனால் என்ன ஒன்று? நவீன ஓவியம் போல தனது உடலை மாற்றிக்கொள்ளவும் பராமரிக்கவும் பெண்கள் மெனக்கெட வேண்டும். பெண்கள் விஷயத்தில் ஒரு சுமை போனால் இன்னொரு சுமை வந்து விடுகிறது. இதுதான் டிசைன் போல!

பிப்ரவரி, 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com