கொரோனாவுக்கு முன்பாக என்னுடைய பொருளாதாரம் என்பது நிலையானதாகத்தான் இருந்தது. இப்போதும் அது அப்படியேதான் இருக்கிறது, என்னுடைய வேலையின் காரணமாக. இருப்பினும் பொருளாதாரத்தை நிர்வகிப்பது பற்றிய பார்வை நிறையவே மாறியிருக்கிறது. வருகின்ற வருமானத்தில் வீட்டு வாடகை, மெயின்டனென்ஸ் போன்றவை நிரந்தரமான செலவுகள். சேமிப்பு கண்டிப்பாக இருக்கிறது, அது அவசியமும் கூட.
பார்த்த உடனே வாங்க வேண்டும் என்று தோன்றும் பொருட்களை வாங்கிவிடுவேன். அந்த எண்ணங்கள் என்னிடம் ஜாஸ்தி. இதற்காக அதிகமாக செலவு செய்துவிட்டேன் என்று நினைத்ததும் உண்டு. அதிகமாக ஷாப்பிங் செய்வேன், அது மிகப் பெரிய தவறு என்று இப்போது தான் தெரிகிறது.
கொரோனா வந்த பிறகு மருத்துவச் செலவுகளைப் பார்த்துப் பயந்துவிட்டேன். இப்போது என்னுடைய வருமானத்தை எப்படி நிர்வகிப்பது என்பது குறித்து காலமே ஒரு படிப்பினையைக் கொடுத்திருக்கிறது என்று நினைக்கிறேன். மருத்துவ காப்பீடு,
சேமிப்பு போன்றவை எவ்வளவு முக்கியம் என்பதை இப்போது உணர்ந்திருக்கிறேன். சேமிப்பைக் கண்டிப்பாக நாம் தொடங்கியாக வேண்டும். கொரோனா எதுவுமே நிரந்தரமில்லைஎன்று விஷயத்தை காண்பித்திருக்கிறது.
பொருளாதாரத்தைப் பற்றிய பார்வை இந்த இரண்டு வருடத்தில் மாறியிருக்கிறது. இது பார்க்க அழகே இருக்கிறதே, அதனால் இதை வாங்கலாம் என்று முடிவெடுப்பதற்கு இனி யோசிப்பேன். தேவையா இது என்ற கேள்வியை எனக்குள் இனி கேட்டுக்கொள்வேன், அப்படியான ஒரு பக்குவம் வந்திருக்கிறது அதை நான் ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும்.
ஜூலை, 2021