எதிரினில் தோன்றுவாய் என..

7 ஜி ரெயின்போ காலனி
7 ஜி ரெயின்போ காலனி
7 ஜி ரெயின்போ காலனி
Published on

அமர்ந்து பேசும் மரங்கள் அனிதாவை கேட்கின்றன. உதிர்ந்து போன மலரின் மௌனமென அவனிருக்கிறான். காற்றில் அனிதாவின் வதனத்தை வரைந்து மரத்திடம் கான்பிக்கிறான். மரத்தின் இலைகள் அசைய கதிருக்கு மட்டுமே வீசிக் கொண்டிருக்கும் மென் காற்றுதான் 7ஜி ரெயின்போ காலனியின் காதல் கதை.

ஒரு காலனியில் நடந்தேறும் வழக்கமான காதல் கதைதான். ஆனால், 7ஜி இயல்பான பக்கத்து வீட்டு கதையாக பின்னப் பட்டிருப்பதாலேயே அது

சிறப்பான காதல் கதையாக நமக்கு மாறிவிடுகிறது. உலகின் ஆகச்சிறந்த காதல் கதை எது தெரியுமா நண்பர்களே... அது, உங்கள் வீட்டின் பக்கத்தில் நடந்த காதல் கதைதான். 7ஜி-யும் செல்வராகவனின் காலனியில் நடந்ததால் இந்த வானவில் காலனி அவ்வப்போது நம் உள்ளத்தில் வந்து பச்சையம் பூத்துச் சிரித்துக்கொள்கிறது.

நம்மை போலவே கதிரும் சாத்தான்களின் அவஸ்தை இல்லாமல்தான் வாழ்ந்து கொண்டிருந்தான். காலனியில் நாளும் பொழுதும் ரகளையோடு இருந்தவனின் வீட்டிற்கு எதிரே சாத்தான் வந்து குடிபுகுகிறது. அந்த சாத்தானின் பெயர் அனிதா. வாழ்ந்து கெட்ட மார்வாடியின் செல்ல மகள். ஆனாலும், அவர்கள் மார்வாடிகள். அன்பாக பால் சொம்பை கொடுத்தாலும், மறைவாக பாலை ஊற்றி விட்டு சொம்பை கொடுக்கும் பரம்பரை. வேறு யாரோடும் உறவு வைத்து கொள்ள மாட்டார்கள் என்பதற்கு அழகாக காட்சியில் செல்வா

சொல்லியிருப்பார். என்ன செய்வது நண்பர்களே, சாத்தான் அதன் வேலையை காட்டாமல் விடுமா என்ன... சாம்பல் படர்ந்த அதிகாலை ஒன்றில் மலர்

சாலையில் அன்று பூத்த மலராக அனிதாபிரசன்னமாகிறாள். தேரில் அமர்ந்து ஒய்யாரமாக வரும் கடவுளை பார்ப்பதை போல பார்க்கிறான் கதிர். கடவுளும் சாத்தானும் ஒன்றினையும் தருணம்தான் காதல். சர்வமும் அனிதாவென துளிர்கிற அவனது கருமம் காதலாகி கசிந்து கொண்டிருந்தது.

இதிலென்ன மாயம் என காலனியில் ஒரு பறவையை போல பறந்து கொண்டிருக்கிறான் கதிர். தமிழ் சினிமாவில் வாழ்ந்து கெட்ட மார்வாடி குடும்பத்தை காட்டியதை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தோம். எங்களுக்கெல்லாம் மார்வாடி என்றாலே பணக்காரர்கள்தான். கதிரின் குடும்பமும் அனிதா குடும்பமும் கொஞ்சம் நெருங்கி பழகுகிறார்கள். இவன் வீட்டில் அனிதா சாப்பிடும் அளவுக்கு நம்பிக்கை கொள்கிறார்கள். எல்லாவிதத்திலும் காதலை சொல்லிப் பார்க்கிறான் கதிர். அனிதா ஏற்றுக் கொள்ளவில்லையென்றாலும் கதிரை அவள் புறந்தள்ளவில்லை. ஒரு காட்சியில் வீட்டின் பின்பக்கம் ஏறி, சொல்லிவிட கதிர் முடிவெடுக்கிறான். பைப்புகளை பிடித்து ஏறியும் விடுகிறான். அனிதாவின் அறை சிலாப்பில் நின்று கவனிக்க அனிதா உள்ளே நுழைகிறாள். எப்போதும் போல தனது உடையை களைந்து வேறு உடைக்கு மாற முற்படுகிறாள். அனிதா டீசர்ட்டை கழட்டும் முன்பே ‘அனிதா'வென கத்திவிடுகிறான் கதிர். அவன் தேடி வந்தது அதுவல்ல. அனிதா சுதாரித்து கொண்டு அவனை திட்டுவதை போல் திட்டுகிறாள். ‘‘லவ் பன்னலெனாலும் பரவால்ல... ப்ரென்ட்ஷிப்பா வேனா இருக்கலாம் அனிதா'' என்று காதலாகி சிரிக்கிறான் கதிர், இவனின் இந்த சிரிப்பு அனிதாவுக்கு புரியும். அனிதாவின் எல்லா வலை நரம்புகளும் அவளுக்கு தெரியாமலேயே கதிரின் நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்ததை ஒரு நாள் கண்டடைந்தாள்.

அதுவரை திட்டி தீர்த்த தன் பிள்ளையை பெருமை பீற்றிக் கொள்ளும் தகப்பனின் ஆனந்த கண்ணீர் அனிதாவின் காதல் தந்த உற்சாகமின்றி வேறென்ன... காதலைச் சொல்லி துரத்துகிற வரைதான் ஆண்கள் புத்திசாலிகள் போல தோற்றமளிப்பார்கள். பெண்கள் எதுவுமே தெரியாத மாதிரி பயப்படுவதைப் போல நடந்து கொள்வார்கள். அவர்கள் காதலை ஏற்று கொண்டதும் அப்படியே தலை கீழாக மாறிவிடுவதுதான் காதலின் ஆகப்பெரிய கொண்டாட்டம். அனிதா என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ளும் கதிரின் மனம் காதலித்தால் மட்டுமே வாய்க்கும்.

பதவிசாக நடந்துகொள்ளும் அனிதா தனித்த அறையில் தன் பரிசுத்த காதலுக்கென காமச்சுனை யின் தெளிந்த நீரால் கதிரை

சுத்தமாக்குகிறாள். ஜனவரி மாதம் பூம் பனிவிழும் நேரம் அவர்களின் காதல் அரங்கேறி கனிந்து மலர்கிறது. புணர்ந்தோய்ந்து ஆசுவாசம் கொள்ளும் வேளையில் அனிதா கதிரின் மார்பில் புதைந்து கிடக்கிறாள். ‘‘அனிதா என்ன விட்டுட்டு எங்கியும் போய்ட மாட்டல்ல...'' என்கிறான். அனிதா அவனின் இதழ்களை கவ்வி போக மாட்டேன் என உறுதியளிக்கும் அனிதாவைத்தான் பிணவறையில் பிரேதமாக பார்க்கிறான். அவள் இறந்ததை அவன் மனம் ஏற்கவில்லை. தன்னோடு அனிதா இருக்கவில்லை விபத்தில் இறந்ததாக பதிய படும் போது, அனிதாவின் தாய் கதிரின் தலையை கோதி ஆசிர்வதித்து கடப்பாள். பவித்ரமான காதலை இதைவிட எப்படிச் சொல்ல முடியும். அதே தேநீர் கடையில் உட்கார்ந்திருக்கிறான் கதிர். அனிதாவின் ஊர்வலம் ‘‘ராம்... ராம்... சத்ய ராம்'' எனும் கோஷங்களோடு போகிறது. தானும் ஒரு

சாட்சியாளனாக பின் தொடர்கிறான். வெந்து பொடி சாம்பலாக அவள் மாறுகிறாள். அவளின் கடைசியில் படுத்த பாயையும் தலையணையையும் குப்பைத் தொட்டியிலிருந்து கதிர் தூக்கிக் கொண்டு ஓடும் போது, அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்த எங்கள் இதயம் கனத்த கண்களின் வழியே காதல் எங்களை பரிசுத்தமாக்கி கொண்டிருந்தது.

அனிதா நினைவுகளில் வாழ்கிறான். அவளின் ஓவியத்தை தினம் தினம் காற்றில் வரைந்து கொள்கிறான். அது மெல்ல மெல்ல கரைந்து கடைசி கோடும் கரையும் போது கதிர் அந்த கோட்டை பிடித்து மறுபடியும் அனிதாவின் சித்திரத்தை தன் நினைவுகளால் தீட்டிக்கொள்கிறான். அவனின் வாழ்வு சித்திர விளையாட்டுகளால் நிறைந்தது. ‘‘தலைய ஒழுங்கா வாரமாட்டியா... ஷேவ் பண்ணாத்தான் என்ன... எரும எரும...'' என்று அனிதா அவனிடம் பேசிக் கொண்டிருக்கிறாள். அப்போதுதான் அந்த பாடல் காற்றில் தவழ்ந்து வருகிறது. ‘‘ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன்...''         

நவம்பர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com