உலக செஸ் சாம்பியன் ஆவது!

உலக செஸ் சாம்பியன் ஆவது!
Published on

முன்பு எங்கள் வீட்டில்  அக்கா  வைஷாலிக்குத்தான் செஸ் விளையாடத் தெரியும். அவரைப் பார்த்துத்தான் நான் செஸ் விளையாடக் கற்றுக் கொண்டேன். இன்னும் சாதிப்பதற்கு நிறைய இருந்தாலும், உலக செஸ் சாம்பியன் ஆக வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு. அதற்காகத்தான் உழைத்து கொண்டிருக்கிறேன்.

நான் வெற்றி பெறுவதற்கு நிறையப் பேர் உதவி செய்கின்றனர். எங்கு செஸ் விளையாடச்  சென்றாலும் அம்மா நாகலட்சுமி தான் உடன் வருவார். அப்பா ரமேஷ் பாபு, பயணம் செய்வதற்கான பணிகளையும், போட்டிகளில் பங்கேற்பதற்கான வேலைகளையும் செய்வார்.

2014ஆம் ஆண்டிலிருந்து ரமேஷ் சாரிடம் பயிற்சி பெற்று வருகிறேன். அதற்கு முன்னதாக தியாகராஜன் சாரிடம் பயிற்சி பெற்றேன். வேலம்மாள் பள்ளியில் படித்ததால், அவர்கள் எனக்கு இலவசமாகக் கல்விக் கொடுத்தனர். போட்டிகளில் பங்கேற்கச் சென்றால், அதற்கு அனுமதியளித்து ஊக்கப்படுத்தினர். அதேபோல், ராம்கோ நிறுவனம் 2016ஆம் ஆண்டிலிருந்து எனக்கு ஸ்பான்சர் செய்து வருகின்றனர். போட்டிகளுக்குப் பங்கேற்கச் சென்றால், அதற்கான எல்லா செலவுகளையும் அவர்கள் தான் செய்கின்றனர். இவர்களைத் தவிர என்னுடைய உறவினர்களின் உதவியும் உண்டு!

அக்டோபர், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com