இருமலின் காதல்

பயணங்கள் முடிவதில்லை
Published on

80 - களில் 365 நாட்கள் ஓடிய படம். அப்ப நான் சின்னப் பையன். 90 - களில் எங்க ஊரில் ஸ்டார் டாக்கீஸ் என்றொரு கொட்டாய் திறந்தார்கள். வருசத்திற்கு 50 படம் ரிலீஸ் என்பதெல்லாம் நினைக்கக்கூடாத காலம். படங்களின் வெற்றியே ரீரிலீசை பொறுத்துதான்.

வைகறையில் வைகைக் கரையில் பாடலை அக்காக்கள் எல்லாரும் தாளம் தப்பாமல் பாடிய காலமது. அம்மா எனக்கு அக்கா போல இருப்பார்கள். ஒரே நாளில் மூன்று காட்சி பார்த்தது ஞாபகம் இருக்கிறது. அதில் ஒரு காட்சி பள்ளியின் சார்பில். இன்று 60 வயதாகும் குன்னாமே டீச்சருக்கு அப்ப 36 வயசுதான். அவங்க மடியில உக்காந்துதான் அந்த படத்தை முதல்முறை பார்த்திருக்க்கிறேன். லுக்கேமியா என்றொரு நோய் பற்றியெல்லாம் கேள்வியேப் படாத காலம். பூர்ணிமா மோகன் மீது கொள்ளும்  காதலும் மோகனின் பாவங்களும் அந்த காலத்தின் அதீத ருசி. அண்ணன்கள் எல்லாரும் திருவிழா காலங்களில் போர்வை போர்த்தி இருமித்திரிந்த காலமது. ஒருத்தன் இருமினாலே அவனுக்கு ப்ளட் கேன்சர் என்பதுபோலே கிராமத்தில் பரவிவிடும். மொத்த இரும்பி  அக்காக்களும் அவனை காதலிக்க ஆரம்பித்து விடுவார்கள். நானும் இருமிப் பார்த்ததுண்டு யாரும் நம்பத்தானில்லை.

(நன்றி No 10பீடி)

இந்த தமிழ்ப் படம் குரூப் சிம்புவை வைத்து பயணங்கள் முடிவதில்லை படத்தை ரீமேக் செய்யாமல் கடவதாக...

நவம்பர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com