இன்னிசை பாடும்

துள்ளாத மனமும் துள்ளும்
துள்ளாத மனமும் துள்ளும்
துள்ளாத மனமும் துள்ளும்
Published on

சிறுவனாக இருக்கும் போது தனது குடும்பத்தோடு ஒரு பாட்டு பாடுவார். பின்பு வில்லனின் நயவஞ்சகத்தால் குடும்பத்தை விட்டு பிரிவார். கிளைமாக்ஸில் வில்லனை வீழ்த்திய கதாநாயகன், அதே குடும்ப பாட்டை பாடி தன் குடும்பத்தோடு சேருவார். இந்த குடும்ப பாட்டு கான்சென்ப்டை காதலுக்கு பயன்படுத்தி, அதை திரில்லர் படத்தை போன்ற ட்விஸ்டுகளோடு கொடுத்து அசத்தியவர் அப்போதைய அறிமுக இயக்குநர் எழில். இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை' என்னும் உயிரோட்டமான பாடலை படத்தின் ஜீவ நாடி போல தோன்றும்படிக்கு மெட்டமைத்தவர் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார். சூப்பர் குட் பிலிம்ஸின் ஆஸ்தான இசையமைப்பாளர்.   அந்த பாடல் எப்போது ஒலிக்கும், கதாநாயகனும் கதாநாயகியும் எப்போது ஒன்று சேருவார்கள் என்று திரையரங்குகளில் பார்வையாளர்களை நகம் டண்மட வைத்த பெருமைக்கு சொந்தக்காரர்.

கவர்ச்சிக்கு மட்டும்  பயன்படுத்தாமல், கதையின் மைய பாத்திரமாக சிம்ரனை பயன்படுத்திய முதல் படம் இது. பூவே உனக்காக படத்திற்கு பிறகு மென்மையான காதலனாக விஜயை மேலும் மெருகேற்றிய படம் இது. இன்று வரை 80களின் பெண்களுக்கு விஜய்யை பிடிப்பதற்கு காரணமான படம் இது.

96 ல் இயக்குனர் அகத்தியன், பார்க்காமலேயே காதல் என்னும் தலைப்பில் கோடு போட, அதை வைத்து 99ல் இயக்குனர் எழில் போட்ட ரோடு தான் இந்த திரைப்படம்.  மென்மையான காதல் திரைப்படங்களின் வரிசையில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் திரைப்படம் இது.

நவம்பர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com