நாங்க நிறைய பேர் டான்ஸ் க்ளாஸ் போயிட்டு வந்திட்டிருப்போம். அந்த டான்ஸ் கிளாசுல எங்க கூட நடித்த பெரிய நடிகர் ஒருத்தரும் இருந்தார். அவருக்கு சுட்டுப்போட்டாலும் நடிப்பு வராது. அதுனால் அவரை கிண்டல் பண்றது வழக்கம். அவரைப் பத்திப் பேசும்போது ’அவர் வீட்டுக்கு வருமான வரித்துறை ரெய்டு போச்சுனு’ ஒருவர் சொன்னால். ’எதுக்குப்பா ரெய்டு? அவர் அந்தளவுக்கு சம்பாதிக்கலேயேன்னு’ மற்றொருவர் சொல்வார். ’இல்ல இல்ல… அவர் நடிப்பை எங்க ஒளிச்சி வச்சிருக்கார்னு கண்டுபிடிக்க ரெய்டு போயிருக்காங்க’ன்னு எல்லோரும் பேசிச் சிரிச்சிப்போம்.
அவர நாங்க அதாவது எங்க வட்டத்தைச் சேர்ந்தவங்க பார்க்கும்போது உங்க வீட்டுக்கு இன்கம்டாக்ஸ் ரெய்டு வரணும்னு சொல்லுவோம். இது எங்களுத்தானே புரியும்?
இதைக் கேட்டு அந்த நடிகர் ‘வருமான வரித்துறை ரெய்டு வர அளவுக்கு நாம பெரிய ஆளா வரணும்’னு இவங்க வாழ்த்துறாங்கனு நினைச்சுப்பாரு. அந்த அளவுக்கு அப்பாவியாக அவர் இருந்தார். யார் அந்த நடிகரென்று சொல்லமாட்டேன்!