அந்திமழை சிறுகதைப் போட்டி 2024 முடிவுகள்

அந்திமழை சிறுகதைப் போட்டி 2024 முடிவுகள்

அந்திமழை சிறுகதைப்போட்டி -2024 அறிவித்தபோது கிடைத்த பெரும் வரவேற்பு எங்களை மலைக்கச் செய்துவிட்டது. சுமார் 450 கதைகள் வந்திருந்தன. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் கதைகளை அனுப்பி இருந்தனர்.  கதைகளை எழுதி அனுப்பி இருந்த அனைவருக்கும் நன்றி.

இப்போட்டிக்கு நடுவர்களாகச் செயல்பட எழுத்தாளர்கள் பாக்கியம் சங்கர், கவிதா முரளிதரன், அதிஷா ஆகியோரிடம் கேட்டுக்கொண்டோம். இவர்களுடன் அந்திமழை ஆசிரியர் குழுவினரும் இணைந்து பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுத்தனர்.

முதல் சுற்று முடிவில் 150 கதைகள் தேர்வு செய்யப்பட்டன. கதையின் மையக்கரு பதின் பருவ உணர்வுகள் என்பதாக இருக்கவேண்டும் என்பதால் அதை ஒட்டிய கதைகள் தேர்வு ஆயின.  இறுதிச்சுற்றுக்கு இருபது கதைகள் தெரிவு செய்யப்பட்டன. முதல் மூன்று பரிசுக்கதைகளையும் தேர்வு செய்ததில் அனைவருக்குமே ஒருமித்த கருத்து இருந்தது. மீதி சில கதைகள் ஓரிருநாள் விவாதத்துக்குப் பின்னர், அவரவர் அளித்த மதிப்பெண்கள் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டன. பரிசுக்காக 15 கதைகளை மட்டுமே தேர்வு செய்யமுடிந்தது.  இந்த இதழில் ஒன்பது கதைகள் இடம்பெறுகின்றன. ஊக்கப்பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஆறு சிறுகதைகளும் அடுத்த இதழான ஜூலை இதழில் வெளியாக இருக்கின்றன. வாசகர்களுக்கு இரு இதழ்களில் திகட்டத் திகட்ட சிறுகதை விருந்து காத்திருக்கிறது!

கதைகளை எழுதி அனுப்பி ஆர்வத்துடன் இந்தப் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து தமிழ் உறவுகளுக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அந்திமழை மின்னிதழ், அவரவர் மின்னஞ்சல் முகவரிகளில் அன்புப்பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

தேர்வான சிறுகதைகள்

முதல் பரிசு       - ரூ 10,000 - மொசக்கறி

சிவசெல்வி செல்லமுத்து

இரண்டாம் பரிசு - ரூ 7500 - ஆடுமேய்க்க ஆள்வேணும்

வா.மு.கோமு

மூன்றாம் பரிசு   - ரூ 5000 - இலக்கணப்பிழைகள்

ரம்யா அருண் ராயன்

சிறப்புப் பரிசு தலா ரூ. 2500 பெறும் கதைகள்

தொக்கம்                    -       நெய்வேலி பாரதிக்குமார்

மாலை நேரத்து நடனம்      –       பத்மா அர்விந்த்

துராசாரம்                   -       எஸ்.பர்வின் பானு

நிலைமம்                   -       கே.ஜி. பாஸ்கரன்

நாற்றாங்கால்               –       இர.அறிவழகன்

அன்புபேசி                   –       கல்பனா சன்யாசி

ஊக்கப்பரிசு தலா ரூ. 2000 பெறும் கதைகள்

பயணம்              –       ந. ஜெயரூபலிங்கம்

இது வேறு உலகம்   –       எஸ்.முத்துக்குமார்

புளியாமரம்          –       ந.சூர்யமூர்த்தி

சவக்கிடங்கு          -       வரத.ராஜமாணிக்கம்

வெயில் தணியும்    –       பொள்ளாச்சி அபி

கரங்கள் தேடல்      –       ராஜகுமார் கந்தப்பழம்

logo
Andhimazhai
www.andhimazhai.com