சோகம்

சோகம்
Published on

அறிஞர் க.நெடுஞ்செழியனின் பேட்டி வெளியான நேரத்தில், அவர் மறைந்த செய்தி என் செவிகளை எட்டி சோகத்தை ஏற்படுத்தியது. என் அஞ்சலிகள்.

அ.முரளிதரன், மதுரை - 3

கூடுதல் மகிழ்ச்சி!

‘பாட்ஷா படம் பார்த்துவிட்டு ஆட்டோ ஓட்ட விரும்பினேன்' என்ற தன்னம்பிக்கை தந்த வெற்றியாளர் நடிகர் குருசோமசுந்தரத்தின் நேர்காணல் படித்து மகிழ்ந்தேன். பக்கத்து ஊர்க்காரரான ஆத்தாலூர் சோமேஸ்வரன் (வானொலி நாடக நடிகர்) அவர்களின் மருமகன் என்பதால் கூடுதல் சந்தோஷம்: கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள், அவற்றின்  பரிந்துரைகள் பெரிய அளவில் அமுலுக்கு வரவில்லை என்றாலும், இந்த விசாரணை ஆணைய அறிக்கைகள் அந்தப் பாதையில் செல்லாமல், ஆக்கப்--பூர்வ பாதையில் செல்லும் பட்சத் தில் விசாரணை ஆணையங்கள் மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் அதிகரிக்கும். எனும் கட்டுரையாசிரியர்  ஆர்.முத்துக் குமார் கருத்து கவனிக்கத்தக்கது.

பிரேமா ரேவதி, நடுவிக்கோட்டை -614 602

தன்னம்பிக்கை!

இந்த மாத அந்திமழை சிறப்பான செய்திகளைப் பதிவு செய்துள் ளீர்கள். ஆணைய அறிக்கை வெளியிடுவது, இறந்த பிறகு அது எதனால்? எப்படி? தீர்ப்பு வழங்கி சாதனை புரிவதற்கா? ஒரு குறிப்பிட்ட தினங்களில் தீர்வு வேண்டும். நாட்டின் பொருளாதாரம் எப்படியோ சீரழிந்து கொண்டிருக்கிறது. நடந்த நிகழ்ச்சி படிப்பதற்குப் புரியும்படி உள்ளது. அருள்தாஸ் என்ற ஒளிப்பதிவாளர், நடிகர் என்ற நிலையில் இன்று கொடி கட்டிப் பறக்கிறார்கள். தன்னம்பிக்கை தான் மனிதனின் வெற்றிக்குக் காரணம். பலர் இதைக் கற்று வாழ்வில் முன்னேற வேண்டும்.  பேராசிரியர் நெடுஞ்செழியன் பேட்டி சிறப்பான கருத்துகள், கேள்விப்படாத  செய்திகளை கூறியுள்ளீர்கள்,  இந்த இதழில் உள்ளவை இன்றைய தலைமுறை மாணவர்கள், ஆசிரியர்கள் கற்க வேண்டியவை. சிறப்பான இதழ்.

இரா.சண்முகவேல், கீழக்கலங்கல் - 627 860

பெருமைப்படலாம்!

அந்திமழை நவம்பர் -2022 இதழ் “புதிய கோணத்தில்' மிளிர்கிறது. சிறப்புப் பக்கங்களில் அரசுப் பள்ளிகள்  அதில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு  தனிச் சிறப்புடன் கூடிய அங்கீகாரத்தை அளித்ததற்குப் பாராட்டுகள்.

ஒரு கைத்தட்டல் கிடைக்காதா? என்று ஏங்கிய ஆசிரியர்கள் இனி பெருமைப்படலாம். அடிப்படைக் கல்வியை அழுத்தமாகப் படித்து எழுச்சியுடன்  வளர்ந்து வெளியே அனுப்பப்படும் அரசுப் பள்ளி மாணவர்கள் எந்த நாட்டில் பணிபுரிந்தாலும், தன் தாய் நாட்டையும், தான் பிறந்து வளர்ந்த ஊரையும், தான் படித்த பள்ளிகளையும், எழுத்தறிவித்த ஆசிரியர்-களையும் மறக்காத மாமனிதர்களால் நிலைத்து நிற்பதற்கு இத்தகைய ஆசிரியர்களே காரணம்.

ஆர்.மோகன், சேலம்-01

சரியான கருத்து!

சரவணன் சந்திரனின் குறுவாள் சிறு கதை படித்தேன். ஒரு கைதேர்ந்த சமையல் கலைஞனுக்கு தான் சமைத்த உணவைப் பிறர் சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட்டு மகிழ வேண்டும் என்ற எண்ணமும்சமைத்தளித்த தன்னை சாப்பிட்டவர்கள் வாய் நிறையப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணமும் எழுவது இயல்பே. குடித்துவிட்டு உண்பவர்கள் உணவின் சுவையை உணராது போய் விடுவதால், குடித்துவிட்டு உண்பதை விரும்பாது வெறுப்பவனாகக் கலைஞன் இருப்பதும் இயல்பே.வாழ்க்கை கற்றுத் தரும் பாடங்களால் கசங்கி, கிழிந்து உருமாறி போய் அவனே குடிகாரனாகப் போவதாகக் கதை சுட்டும் முரண் சிறப்பாக உள்ளது. தம்மை பழிப்பவரை எந்தச் சமயத்திலும் பழித்து விட வேண்டும் என்ற வெறி மனிதனிடம் பதுங்கி இருப்பதைப் பட்டவர்த்தனமாக கதை வெளிக்காட்டியது.

மு.ராமு, திருச்சி

உச்சம்

நடிகர் குரு சோமசுந்தரம் அவர்களின் நேர்காணல் ஆச்சரியப்படவைத்தது. திரைப்படங்கள் சாமானியர்களின் வாழ்வில் எவ்வளவு பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதற்கு இவரும் ஓர் உதாரணம். அவருடைய பால்யகால வாழ்க்கை நிகழ்வுகளை கபடம் இல்லாமல் அப்படியே பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவரைத் திரையில் பார்த்து ஒரு பிம்பத்தை மனதில் நாம் உருவாக்கி வைத்திருந்தால் அதற்கு அப்படியே உயிர் கொடுத்தது போல இருந்தது நேர்காணல். ஒவ்வொருவரின் வெற்றிக்கும் பின்னால் ஒரு நீண்ட உழைப்பும், சவாலும் இருக்கிறது. ஒரே படத்தில் நாம் உச்சம் தொட வைக்கவில்லை. அதற்காக அவரின் அர்ப்பணிப்பும், உழைப்பும் தான் அவரை உச்சம் தொடவைத்திருக்கிறது.

 மீ.யூசுப் ஜாகிர்,வந்தவாசி

அந்திமழைக்கு அன்பு மடல்!

அரசுப் பள்ளியின் வளர்ச்சி; அறிவுத் தேடலின் புரட்சிஅடைமழை விடாது பெய்து வருகிறது. மாதம்தோறும் பெய்து வரும் அந்திமழையில் தொடர்ந்து நனைந்து மகிழ்பவன் நான். அந்த குளிர்வான, இனிமையான அனுபவங்களை மேடைகளில் பகிர்பவன். நவம்பர் மாத இதழ் படித்தேன் அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக் கான கருத்துக்கள், கட்டுரைகள், பேட்டிகள் அருமை.

பள்ளிக்கல்வியின் வளர்ச்சியே நாட்டு வளர்ச்சியின் அடிப்படை. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு 36,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பல நல்லதிட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்-படுகின்றன.தற்போது பள்ளிக் கல்வித்துறை ஆணையர் என்ற பொறுப்பு ஐஏஎஸ் அதிகாரி மூலம் செயல்படுகிறது. தொழில் நிறுவனங்கள், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இந்த முறை சரியாக இருக்கும். கல்வித்துறை தொடங்கிய காலத்தில் இருந்து பள்ளிக்கல்வி இயக்குநர் என்ற முறை தான் இருந்து வந்தது. ஆசிரியர், தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அலுவலர், இணை இயக்குநர் என படிப்படியாக பதவி உயர்வு பெற்றவர்களே இந்த பொறுப்பை கவனித்து வந்தனர். அரசுப் பள்ளிகள் சரியாக, சுதந்திரமாக இயங்க இந்த பொறுப்பு மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று ஆசிரியர் தினத்தன்று மாண்புமிகு முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். அதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு ஆவன செய்வதாக அறிவித்தார்.

மேலும் பேராசிரியர் அன்பழகன் கல்வி அமைச்சராக இருந்த பொழுது ஒவ்வொரு மாவட்டத்திலும் புரவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், மாவட்ட அதிகாரிகள் முயற்சியில், மாவட்ட அளவில் அரசுப் பள்ளி சீரமைப்பு மாநாடு நடத்தப்பட்டு அரசுப் பள்ளிகள் பன்மடங்கு தரம் உயர்த்தப்பட்டன. இது மக்கள் இயக்கமாக நடத்தப்பட வேண்டும். தனியார் பள்ளியில் 33 ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்த எனக்கு ஓர் அரசுப் பள்ளியில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இன்றும் உள்ளது.

- ஐ.லியோனி,(தலைவர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்) எழுதிய கடிதத்தில் இருந்து.

தனித்துவமானது!

நிறைய விவரங்களைத் தந்தது மரு.ஆர்.பிரபாகரனின் கோழிகள் பற்றிய கட்டுரை. ஆணையம், அறிக்கை, அரசியல் கட்டுரையின் அலசல்தளம் சிறப்பு.கல்கியின் கருத்து நினைவுக்கு வந்தது.. ஒரு பிரச்னை முடிய வேண்டுமானால் அதன் தலையில் ஒரு கல்லைப் போடு. இல்லா விட்டால் ஒருகமிஷனைப் போடு ... என்பார் அவர். சிகரம் தொட வைக்கும் அரசுப் பள்ளிகள்சிறப்புப் பக்கங்கள் கவனம் ஈர்த்தன.கால கட்டங்களின் வாழ்வியல் போராட்டத் தையும் சுட்டிக் காட்டிய வகையில், இரா.திருப்பதி வெங்கடசாமி, மரு.ஆர்.சிவகுமார்,இரா. செல்வம்  ஆகியோரின் உணர்த்துதல் தெளிவானது.நிறுவிய ஆசிரியர் கூறியபடி... தமிழகம் பெரிதாகக் கொண்டாடாத தமிழர்தான் சி.கே.பிரகலாத்... சரியான கருத்து இது. எனது வேண்டுகோள்.அந்திமழை அவரைப் பற்றிய சிறப்புப் பக்கங்களைத் தரலாமே.

தஞ்சை என். ஜே.கந்தமாறன், சென்னை-89

டிசம்பர், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com