போராட்ட வடிவங்கள் என்ற பெயரில் சாலையில் உள்ள மரங்களை எரித்து சிதைப்போர் மத்தியில், இறந்துபோன உறவினர்களைப் புதைத்த இடத்தில் மரக்கன்றுகளை நடுகின்ற பழங்குடி மக்களே ‘மாவீரர்கள்'. செவல்பட்டி சிவகிருஷ்ணாவின் காமிராக் கண்கள் மீது கண் பட்டுவிடப்போகிறது. அத்தனையும் அசத்தல் கிளிக்ஸ். நூல் அறிமுகம் பகுதியில் 'இம்பூட்டு பொஸ்தகமா'.. யே யப்பா! ஆனாலும் அரைப்பக்க அறிமுகங்களில் குட்டி புத்தக கண்காட்சியில் சிற்றுலா சென்றுவந்த உணர்வு. தற்காலங்களில் 10 நூல்களுக்கான அறிமுகம் என்பது நிஜத்தில் ‘கலைஞன் போற்றுதும்' தான்! படைப்பாளிகள் மகிழும் தருணம்! அந்திமழைக்கு பேரன்பும் ப்ரிய நன்றிகளும்.
அன்பாதவன், உடுப்பி.
அந்திமழை ஜூன் 2018 இதழ் சுவராஸ்யம். ஐ.பி.எல் போட்டியில் சி.எஸ்.கே வெற்றிக்கு தோனிதான் முழு காரணம். தலைமைப் பண்புக்கு இலக்கணம் தோனி. நிதானமான அணுகுமுறை, உறுதி, வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம், அணியின் வீரர்களை அரவணைத்துச் செல்லும் பண்பு, அமைதி ஆகியவற்றால் இந்திய மக்களின் மனதில் உயர்ந்து நிற்கிறார். ஆளுமைத் திறன் இருந்தால் எந்தத் துறையிலும்
சாதிக்கலாம், அதற்கு வயது ஒரு தடையல்ல என்பது மீண்டும் நிருபணமாகிறது.
ஒளிப்பதிவாளர் திருவின் பேட்டி அவர் கடந்து வந்த பாதை, வெற்றிக்கு பின்னால் இருக்கும் உழைப்பின் மகிமையை உணர வைத்தது.
நிஜ மனிதர்களின் வாழ்க்கையைப் படமாக்கும் ஆர்வம் கத்தி மீது நடப்பது போல சிரமமானது. காந்தி திரைப்படம் கலைநயத்துடன் எடுக்கப்பட்டது. அது ஒரு அபூர்வ நிகழ்வு. அதேபோல் எப்போதும் GkUP முடியாது. இப்படிப்பட்ட திரைப்படங்களுக்கு ஆதரவும் எதிர்ப்பும் சேர்ந்தே எழும். இருந்தாலும் இப்படிப்பட்ட படங்கள் வரத்தான் வேண்டும். எதிர்கால தலைமுறை கடந்த கால தலைமுறையை அறிய இதுவும் ஒரு வழி. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய தலைமுறை இளைஞர்கள், சுதந்திரப் போராட்டம், காந்தியைப் பற்றி அறிந்துகொள்ள இந்தப்படம் உதவும். இதனால் சுதந்திரம் பற்றிய புரிதல் நிகழும். நாட்டு சுதந்திரத்திற் காக நம் தலைவர்களின் உழைப்பை ஒரு தலைமுறையே அறியாமல் வாழ்வது மிகப்பெரிய தவறு. கடந்துவந்த் பாதையை அறிந்தால்தான் எதிர்வரும் பாதையை சரிவர அமைத்துக்கொள்ள முடியும். இதற்கு இத்தகைய திரைப்படங்கள் உதவும்.
ஆர்.மோகன், சேலம்-1
வணக்கம். ஜூன் 2018 அந்திமழை இதழில் ‘ஆசையோடு உழைத்தவர்கள், திரையுலகம்: வரலாறு திரும்புகிறது, கமல் முதல் ரஜினிவரை உள்ளிட்டவைகள் சிறப்பாகவும் அருமையாகவும் இருந்தது. இவற்றுக்கு சிகரம் வைத்தாற்போல் தூத்துக்குடி துயரச் செய்திகளின் கட்டுரை அமைந்துவிட்டது.
தொடரட்டும் அந்திமழையின் மழைச்சாரல். அதில் குளித்து மகிழ்ந்திடுவோம்.
பாவலர், ப.மூர்த்தி, பெங்களுரு
ஒளிப்பதிவாளர் திரு தேர்வு செய்து கொண்ட தொழில் மீது அசைக்க முடியாத ஆர்வத்தை வளர்த்துக்கொண்டதும் அத்தொழில் சார்ந்து பயிற்சி பெற விடாப்பிடியான முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு களம் கண்டவர் என்பதும் பெருமிதத்திற்குரியது. தொடர்ந்து புத்தக வாசிப்பில் ஈடுபடுத்திக்கொள்கிற எவரும் கலைஞனாகவோ அல்லது எழுத்தாளனாகவோ ஆவார் என்பது உறுதி. அதுதான் திருவின் வாழ்க்கையிலும் நிகழ்ந்துள்ளது. கூடவே கடின உழைப்பும் இருந்தால் வெற்றி உறுதி.
அடுத்ததாக எழுத்தாளர் பாலகுமாரனின் நேர்காணல். வாசகர்கள் எப்படிப்பட்டவர்கள் என்கிற கேள்விக்கு ‘என் கை விரல்கள் போல பலதரப்பட்டவர்கள்' என அவர் அளித்துள்ள பதில் வாஸ்தவமானது.
மரியம் கதைக்கு ஜீவா வரைந்த ஓவியத்தை கண்டவுடன் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. அவ்வோவியம் கதைக்கு மிகவும் பொருத்தமான ஓவியம் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஜீவா வரைந்துள்ள அப்பெண்ணின் பனியனில் ஆஙுஉ சொல்வதற்கான வாசகம் பல இளம் தலைமுறையினரின் Sexual ஊஞுஞுடூடிணஞ்&ஐ பாதிப்பதோடு மறைமுகமாக பாலியலை தூண்டக்கூடிய அது போன்ற வாசகங்கள் வேண்டாம் என்பதுதான் எனது கோரிக்கை. இதை துணிந்து செய்கிற அச்சு ஊடகங்களின் மத்தியில் அந்திமழை தனது ஊடக அறத்தை மீறலாமா என்பதே எனது கேள்வி. இதுபோன்ற செயல்கள் சமூகத்தின் ஆன்ம பலத்தை கேலிக்கும் கேள்விக்கும் உள்ளாக்கும். இதில் அந்திமழையும் இணைவதுமூலம் என் போன்ற தீவிர வாசகர்களிடம் துண்டிப்பையல்லவா ஏற்படுத்தும்?
பா.செல்வவிநாயகம்.
சென்னை-82.
ஆசையோடு உழைத்தவர் தோற்றதில்லை& எழுத்தாளர் பாலகுமாரனின் நேர்காணல் அந்திமழை இளங்கோவனின் பழைய சந்திப்பை நினைவுச் சுவடாகப் பதிவு செய்திருந்தது சுவை. எழுத்தில் எல்லோரையும் திருப்திப்படுத்தும் உயர்ந்த நோக்கத்தோடு அவரது படைப்புகள் திகழும். அவரது எளிய நடை சராசரி வாசகர்களையும் வசீகரித்துவிடும். பாலியல் உணர்வு ததும்ப அவர் எழுதும் அழகும், ஆர்ப்பரிப்பு இல்லாத சொல்லாட்சியும் பாலகுமாரனின் எழுத்துக்கு வலு சேர்த்ததாகவே நான் நினைத்தேன். வரலாற்றுப் புதினத்திலும் தன் முத்திரையைப் பதிக்கவேண்டும் எனும் விழைவோடு பல்வேறு தரவுகளுக்காக பல இடங்களுக்குப் பயணம் செய்து தகவல்கள் திரட்டி எழுதி உயர்ந்தவர் பாலகுமாரன். ஓரிரு நாவல்களை எழுதிவிட்டு ஓய்ந்துபோகாமல் இறுதிவரை இயங்கிய எழுத்தாளர் பாலகுமாரனை எளிதில் மறந்துவிட முடியாதுதான். ஆசையோடு உழைத்தவர் தோற்றதில்லை' என்ற சொற்றொடர் காலக்கணிப்பு எனில் அது மிகையில்லை.
நவீன்குமார், நடுவிக்கோட்டை.
சிறப்பு நூல் அறிமுகப் பக்கங்களில் வரவேற்பு வாசலை அமைத்து எழுத்தாளர்கள் மூலமாக நூல் விமர்சன வரவேற்புப் பூக்களைத் தூவிவிட்டீர்கள் மகிழ்ச்சி. ஏக்கங்கள் உள்ளோடும் இழப்பின் வலியை சிறப்பாகச் சுமந்திருந்தது. வீடு, வாடகை, மனிதர்கள் & சிறப்பிதழின் தொகுப்பாக வந்தவற்றுள் ரவிராயின் 'அம்மாவின் வளைகாப்பு' நெகிழ வைத்தது. இன்னொரு முறையும் இதே வகையில் அந்திமழை அனைவரையும் பங்கேற்க வைக்கலாம் என்பது எனது வேண்டுகோள். தயக்கங்களில் தவறவிடும் வாய்ப்புகளை ‘மாது என்றொரு மானிடன்' சிறுகதையில் இயல்பாகப் பதிவுசெய்திருக்கிறார் இரா.முருகன்.
பயோபிக் திரைப்படங்கள் பற்றிய ‘வரலாறு திரும்புகிறது' சிறப்பான திறனாய்வு. ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணுடன் பேசத் தயங்கும் ‘அந்த மூன்று நாள்' பிரச்சினைக்கான தீர்வுக்காக ஓர் ஆண் பல்லாண்டுகள் போராடி வென்றதைச் சொல்லும் கோவை முருகானந்தத்தின் பயோகிராபிக் படமான இந்திப்படம் ‘பேட் மேன்' படத்தைக் கவனிக்கவில்லையே? வாழ்பவர்கள் பயோகிராபிக் வரிசையில் வருவதில்லையோ?
பழங்குடி மக்களின் பலவிதமான பிரச்சினைகளை தெளிவாகச் சொல்லியிருந்தார் வி.பி.குணசேகரன். அருமையான நேர்காணல். பழங்குடிகள் தரப்பு நியாயத்தை நம் அரசு உணருமா?
தஞ்சை என்.ஜே.கந்தமாறன்,
சென்னை-89
மூடப்பட்ட ஸ்டெர்லைட் சில கேள்விகள்& சிறப்புக் கட்டுரை சூப்பராக இருந்தது. கடைசி வரிகள் டபுள் சூப்பர் என்றே கூறலாம், கொட்டை எழுத்துக் களில் போட்டிருக்கலாம். பாலகுமாரனின் பேட்டி அருமை. காமத்தைப் பற்றி அவர் கூறியுள்ள கருத்துக்கள் 100க்கு 100 உண்மை. வாடகை வீடு அனுபவங்கள் சுவாரஸ்யமாக இருந்தன.
அ.முரளிதரன். மதுரை-3