மீண்டும் அச்சில்!

மீண்டும் அச்சில்!
Published on

தரமான இதழ்கள் வரிசையில் அந்திமழைக்கு எப்போதும் முக்கிய இடமுண்டு. தரமான இதழ்கள் எனில் அதில் வாசிப்புக்கான சுவை அதிகம் இருக்காது, சுவாரஸ்யம் மிகுந்திருக்காது. 68 பக்கங்கள் கொண்ட அந்திமழை இதழ்கள், ஒவ்வொன்றும் சிறப்பிதழ் தான். ஒவ்வொரு இதழிலும் 20 பக்கங்கள் சிறப்பிதழாக இருக்கும். அதோடு அரசியல், பேட்டி, சினிமா, சிறுகதை அனைத்தும் ரசிக்கதக்க எழுத்து நடையில் வழங்குவது அந்திமழையின் சிறப்பு. அதோடு அரசியல், பேட்டி, சினிமா, சிறுகதை என அனைத்தும் ரசிக்கத்தக்க எழுத்து நடையில் வழங்குவது அந்திமழையின் சிறப்பு. இது கொரோனா காலம். நம்மில் பலர் அச்சிதழ்களையே பெரிதும் நேசித்தாலும் அது கைகூடாத காலம் இது. இந்த நேரத்திலும் பதிவுகள் கடந்த இரு மாதங்களாக மின்னணு இதழாக கைசேர்ந்தது அந்திமழை. இந்த இதழ் இன்னும் சிறப்பு. 64 பக்கங்களுக்கு பதில் 192 பக்கங்கள். அத்தனையும் சிறப்பிதழ். சிறுகதை சிறப்பிதழ். கடந்த ஆண்டுகளில் அந்திமழையில் வெளியான 33 கதைகளை தொகுத்து வெளிவந்திருக்கிறது இந்த சிறுகதை சிறப்பிதழ். அந்திமழை சிறப்பிதழ்களில் வந்து படிக்காமல் விட்டுப்போன சிறுகதைகள், இப்போது தனி சிறப்பிதழாக வந்திருக்கிறது. சிறப்பு. இது போன்ற நெருக்கடியான காலங்களை கடந்து அந்திமழை மீண்டும் அச்சிதழாக வெளிவரும். காத்திருக்கிறேன்.

ச.ஜெ.ரவி (முகநூலில்)

நூலகத்தில்

அந்திமழை அற்புதமான மாத இதழ். தமிழகத்தின் கடைக்கோடி வரை அந்திமழை பொழிந்தால், வாசித்தலில் ஒரு புது வசந்தம் வீசும் என்பதில் மாற்றுக்கருத் தில்லை. மே மாத சிறுகதை சிறப்பிதழ், இலவச தரவிறக்க இணைப்பு. நூலகத்திற்குள் நுழைந்தது போல் இருக்கிறது.

செல்வம் (ட்விட்டரில்)

இன்னும் நிறைய கதைகள்!

அந்திமழை மின்னிதழாக வந்திருக்கிறது. சிறுகதை சிறப்பிதழ். இப்போதுதான் சயந்தனின் கதையை வாசித்து முடித்தேன். போர்க்கால ஊரடங்கில், மருத்துவமனைக்குப் போக முடியாமல் ஒரு குழந்தை இறந்துவிடுகிறது. புதைத்த இடத்தில் மண் கிளறி தொலைந்த ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் கிழவனுக்கு. ஊரடங்கு பற்றிய நம் எல்லா புலம்பல்களையும் சட்டென்று குற்றவுணர்வாக மாற்றும் கதை. சோதனைச் சாவடி, அடையாள அட்டை என்று போர்க்கால ஊரடங்கின் அடர்த்தியான வாசம். வாசிக்க இன்னும் நிறைய கதைகள் இருக்கின்றன. மனம் இந்த நடுக்கத் திலிருந்து மீள வேண்டும்.

கவிதா முரளிதரன்(சமூக ஊடகத்தில்)

போட்டி

இங்கு நகருக்கு வரும் அந்த ஒரு பிரதியை நான் அல்லது ஓர் வயதான பெண்மணி யார் முன்னர் வாங்குகிறோம் என்பதில் போட்டி . மார்ச் இதழ் வாங்கிய தோடு சரி . மே மாதம் இதழ் சிறுகதைகள் தொகுப்பு என்று அறிந்ததும் பெரும் மகிழ்ச்சி. அந்த இதழின் பிடிஎப் கோப்பை எனக்கு அனுப்பி வைக்கவும்... பிரத்யேக காலச்சூழலில் இருக்கின்ற படியால் புத்தக வடிவில் படிக்க முடியாதே என்று வருத்தம். என்ன இருந்தாலும் புத்தக வடிவில் படிக்கும் சுகம் வேறு..

ஆர். சசிதரன், நெய்வேலி நகரம்

மீண்டும் முதல்பக்கம்!

பழைய கதைகள் மறுபிறப்பு எடுத்த இதழ் போலிருக்கிறது. 180 பக்கங்களை வேகமாகப் புரட்டி நாஞ்சில் நாடனை அடைந்தேன். அவரை யாரும் விஞ்ச முடியாது. இப்போது மீண்டும் முதல்பக்கத்துக்கு வந்து விட்டேன்.

நந்தகோபால், சென்னை.

வசந்தம்

‘அந்திமழை' அற்புதமான மாத இதழ். தமிழகத்தின் கடைக்கோடி வரை அந்திமழை பொழிந்தால், வாசித்தலில் ஒரு புது வசந்தம் வீசும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இலக்கிய ஆர்வலர்களை மகிழ்ச்சியூட்டவும், சமூக, அரசியல் ஆர்வலர்களைச் சிந்திக்கச் செய்யவும், விளையாட்டு, திரைத் துறையினர்க்குப் புத்துணர்ச்சியூட்டவும் இந்த இதழ் பயனுடைய செய்திகளைத் தாங்கி வெளிவருகின்றது. உதாரணத்துக்கு மே மாத சிறுகதை சிறப்பிதழ், இலவச தரவிறக்க இணைப்பு. நூலகத்திற்குள் நுழைந்தது போல் இருக்கிறது.

ஆந்தை ரிபோர்ட்டர், (வாட்ஸ்அப் குழுமம்)

மிஸ் யூ!

அந்திமழை மே 2020 இதழில் எனது பண்டிகை நாள் என்ற சிறுகதையும் இடம்பெற்றுள்ளது. நன்றி. இந்த சிறுகதை பற்றி நினைக்கும்போது நண்பர் கவிஞர் குமரகுருபரன் நினைவு வருகிறார். கதைப்பற்றியும் ஆத்மாநாம் பற்றியும் பேசியது நினைவுக்கு வருகிறது. இன்னும் சிலநாட்கள் எங்களுடன் இருந்திருக்கலாம் குமார். மிஸ் யூ குமார்.

விநாயக முருகன், முகநூலில்

logo
Andhimazhai
www.andhimazhai.com