தோழர் லெனின் விடுத்துள்ள தமிழ் சினிமா கோரிக்கைகளை ஏற்று முடிந்தவற்றை செய்ய வேண்டும். வேர் கொண்ட மனிதர் யோகநாதன் தகவல் சிறப்பாக இருக்கிறது. மரம் வளர்ப்பில் முன்னுதாரணமாகத் திகழ்கிறார். தோழர் மகேந்திரன் கட்டுரை சமூகநீதிக்காகப் போராடிய பெரியார், ஜீவாவை நினைவுபடுத்துகிறது. ஜீவாவை மறந்தகாலம், மறைக்கப்படுகின்ற காலம். தோழரை நினைவுகூர்வதில் மகிழ்ச்சி.
திருப்புமுனை வரிசையில் திரைப்பட வரலாறு தெரிந்து கொள்ள வேண்டும். இந்திய பொருளாதாரத் திருப்புமுனை இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டியதில் ஒன்று. இந்திய அரசியல் திருப்புமுனைகளில் இன்றைய நிலைவரை மாலன் அவர்கள் தெளிவாக எழுதியுள்ளார்கள்.
தோழர் இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்
உண்மையை மறைத்து வேஷம் போடும் கலைஞர்களிடையே தனது உண்மை நிலையை வெளியிட்ட ‘சமந்தா' என்ற தமிழ்ப் பெண் நலம்பெற ‘அந்திமழை' வாசகர்கள் சார்பாக வேண்டி விரும்பி பிரார்த்திக்கிறேன். லட்சுமி
சரவணகுமார் சிறுகதை, கதையல்ல எத்தனையோ வாடகை தாய்மார்களின் எண்ணக் குமுறல்.
வெ.சின்னச்சாமி,மானூர்,
பழனி
‘செய்திச்சாரல்‘ ஆறுமே ஜோருதான்!‘ நடிகை கீர்த்திசனோன் தான் படித்த பள்ளிக்குப் போய் புகைப்படம் போட்டு அதனை ‘பேடியா' என்ற இந்திப் பட விளம்பரம் ஆக்கியதெல்லாம் ஓகே!
அந்தப் பள்ளியின் முன்னே அவரது படம் அன்று & யூனிபார்ம், இன்று & மினிபார்ம் இது தான் சோதனையோ என்று கூறத்தோன்றியது.
ஆர்.விநாயகராமன், திசையன்விளை & 627657
கவனிப்பு
தமிழ்நாடு அரசியல்; வரலாற்றுத் திருப்பங்கள்
சார்ந்து தோழர் மகேந்திரன் முத்தாய்ப்பாக முஸ்லிம் லீக் போன்ற அமைப்புகளும் கிறித்துவ மதமும் மதநல்லிணக்கத்தை வளர்த்தெடுத்துள்ளன என்று சுட்டிக்காட்டியிருப்பதை புறந்தள்ள முடியாது. திரை உலகின் மகத்தான திருப்புமுனைகள் குறித்து திருநின்றவூர் சந்தான கிருஷ்ணன், சுபகுணராஜன், கருந்தேள் ராஜேஷ், நடிகர்
சிவகுமார், மதியழகன் சுப்பையா, அதிஷா மற்றும் எம்.கே.மணி போன்றோர் அளித்திருந்த கருத்துகள் தமிழ் சினிமா வரலாற்றின் ஏற்ற இறக்கங்களைத் திருப்புமுனை தந்த தருணங்களை நினை
வூட்டுகின்றன! சோம வள்ளியப்பனின் இந்திய பொருளாதாரத் திருப்புமுனைகள், ச.தமிழ்ச்செல்வன் எழுதியிருக்கும் நவீன இலக்கியத்தின் திருப்புமுனைகள், மாலனின் இந்திய அரசியலின் 10 திருப்புமுனைகள்,
ஆகிய கட்டுரைகள் கவனிப்புப் பெறுகின்றன.
பிரேமா அரவிந்தன், பட்டுக்கோட்டை - 614 602
இயக்குநர் சற்குணத்தின் பேட்டி, அவரது படங்களைப் போலவே வித்தியாசமாக உள்ளது. செய்திச்
சாரல் வண்ணப்படங்களுடன் அழகாக அமைத்துள்ளது.
அ.முரளிதரன், மதுரை -3
‘தமிழ் சினிமா... சில கோரிக்கைகள்' இயக்குநர் பீ லெனின் எழுதிய கட்டுரை சிறப்பான ஒன்று. அவரது அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றினால் திரைத்துறை பிரகாசமான எதிர்கால உருவாகும்.
அந்திமழை இதழுக்கு மாதந்தோறும் மெருகூட்டுவது ‘அகம் முகம்' - ராஜா சந்திரசேகர் அவர்களுடைய பத்தி ஒரு பக்கமே என்றாலும் வாசகரது நெஞ்சுக்கு மிக அருகில் வந்து அமர்ந்து கொள்கிறது அவரது கருத்துகள்!
லயன் கே. முத்துகிருஷ்ணன், மதுரை - 2
சிறப்புப் பக்கங்களில் இடம் பெற்ற கட்டுரைகள் பல திருப்புமுனை தருணங்களை தனித்துவமாக விளக்கின. பலரின் வாழ்வியல் சுவடுகள் தடங்கள் ஆனது படிப்பவருக்குப் பயனுள்ள பாடமே. அருமையான தொகுப்பு. முக்கியமாக நவீன இலக்கியம், இந்தியப் பொருளாதாரம், திரைஉலகம், தமிழ்நாடு அரசியல் ஆகிய கட்டுரைகளைச் சொல்லலாம்.
*ஆபிஸ் பையனாக சினிமாவில் நுழைந்த வெங்காயம் ராஜ்குமாரின் சுவையான முயற்சிகளின் அனுபவம் மணத்தது.
*போராடுவேன் என்றபடி சாதித்துக் காட்டும் சமந்தா போன்ற நடிகைகள் பாராட்டுக்குரியவர்கள். இப்படியான தனித்துவத்துடன் செயல்பட்ட நடிகைகள் அன்று முதல் பலர் உண்டு. அது ஆசிரியர் குழுவின் கவனத்திற்கு...
தஞ்சை என்.ஜே.கந்தமாறன்.
சென்னை - 89.
நடிகை சமந்தா அவர்கள் தன்னுடைய உடல்நலகுறைவை வெளிப்படையாக பேசியிருப்பதும், அதை துணிச்சலோடு எதிர்கொள்வதும் சாமானிய மக்களுக்கும் ஒரு உந்து
சக்தி தான், அவர் விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திப்போம். இயக்குநர் சற்குணம் அவர்களின் திரைப்படம் எல்லாமே அவருடைய சொந்த வாழ்கையின் பிரதிபலிப்பு சார்ந்த படங்கள் என்ற தகவல் ஆச்சரியமளித்தது. கிராமத்து பின்னணியில் படமெடுத்து வெற்றி பெறும் அவர் பாராட்டுக்குரியவர் தான்.
மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.
ஜனவரி, 2023